அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
சென்னை: அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனால் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 4-ம் தேதி உருவானது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் 6-ம் தேதி ஓர் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். … Read more