இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்: தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறும், பொதுமக்கள் அளிக்கு உதவிகள் மூலம் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழகத்திலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் … Read more

சென்னை | மே 5-ம் தேதி காலை வேளை மட்டும் உணவகங்களுக்கு விடுமுறை

சென்னை: வணிகர் தினத்தையொட்டி மே 5-ம் தேதி காலை வேளை மட்டும் சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டு மே 5-ம் தேதி வணிகர் தினம் கடைபிடிக்கப்படும். அன்றைய தினம் பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு சென்னையில் உள்ள உணவகங்களுக்கும் மே 5-ம் தேதி காலை ஒரு வேளை மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று சென்னை ஓட்டல்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது … Read more

முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் 2-வது முறையாக 17 வயது சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை

சென்னை: முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் 2-வது முறையாக 17 வயது சிறுவனுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திண்டிவனத்தைச் சேர்ந்த தண்டபானி – சத்யா தம்பதியின் மகள் நந்தன். 17 வயதான இவர் சிறு வயது முதல் இதய நோய் பாதிப்பால் சிரமப்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்பிறகு அந்த … Read more

புதுச்சேரியில் தொழிலதிபர் மனைவியிடம் 90 பவுன் மோசடி: நெருங்கிய தோழிக்கு போலீஸ் வலை

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டையில் தொழிலதிபர் மனைவியிடம் 90 பவுன் மோசடி செய்த நெருங்கிய தோழியை போலீஸார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பு கூறியது: புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்துசெட்டிபேட்டை புது தெருவை சேர்ந்தவர் பிரபல தொழில் அதிபரின் மனைவி விஜயலட்சுமி. இவரிடம் வாணரப்பேட்டையை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் பாபு என்பவரின் மனைவி விஜயகுமாரி படிக்கின்ற காலத்திலிருந்தே நெருங்கிய தோழியாக பழகி வந்துள்ளார். விஜயலட்சுமியின் குடும்பத்தில் ஒருவராக விஜயகுமாரி இருந்துள்ளார். விஜயலட்சுமியின் குடும்ப நிகழ்ச்சிகளை தானே முன்னின்று … Read more

ஒரே மாதத்தில் 18.05 லட்சம் இந்திய கணக்குகளுக்கு தடை விதித்த வாட்ஸ்அப்

புது டெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 18.05 லட்சம் இந்திய பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த பயனர்கள் விதிகளை மீறிய காரணத்திற்காக தடையை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் 2021, கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. அப்போது முதல் 50 லட்சம் பயனர்களை கொண்ட டிஜிட்டல் தளங்கள், தங்களுக்கு கிடைத்த புகார்களின் விவரம் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட … Read more

சாலையில் சுற்றித் திரிந்த 557 மாடுகள்: சென்னையில் ஒரே மாதத்தில் உரிமையாளர்களுக்கு ரூ.8 லட்சம் அபராதம்

சென்னை: சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சாலையில் சுற்றித் திரிந்த 557 மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. மேலும், இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,550 அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கு | ‘உடன் கைதான போலீஸார் கொல்ல வருகின்றனர்’ – நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய காவல் ஆய்வாளர்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தன்னை இதே வழக்கில் கைதானவர்கள் கொலை செய்யப் பார்க்கின்றனர் என நீதிபதிக்கு பரபரப்பு கடிதம் அனுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் செல்போன் கடை நடத்தி வந்தனர். இவர்களை 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கின் போது ஊரடங்கு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்தாக இருவரையும் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் … Read more

உ.பி. ரம்ஜான் ரவுண்டப்: முதன்முறையாக முஸ்லிம்களை தேடிச் சென்று வாழ்த்திய அகிலேஷ், துணை முதல்வர் பிரஜேஷ் பாதக்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் குதூகலமாக இருந்தது. முதன்முறையாக முஸ்லிம்களை தேடிச் சென்று எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் மற்றும் மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பாதக் வாழ்த்தினர். கரோனா பரவலால் கடந்த இரண்டு வருட கால பண்டிகைளில் முஸ்லிம்கள் முடங்கியிருந்தனர். இந்த வருடம் கட்டுக்குள் வந்த கரோனா பரவலால் அதிக முஸ்லிம்கள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் ரம்ஜான் குதூகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய அங்கமாக, காலையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகள், … Read more

தமிழகத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 21, பெண்கள் 18 பேர் என மொத்தம் 39 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 24 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,058 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 15,545 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 56 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 488 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா … Read more

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு | செல்போனுக்கு தடை, தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு – முழு விவரம்

சென்னை: 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வெழுத வரும் மாணவர்கள் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் செல்போனை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மே 2022 பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மே 5-ம் … Read more