‘‘ஒரே நிறுவன பணி வேண்டாம்; இஷ்டம்போல் வேலை செய்யலாம்’’- கரோனாவுக்கு பிறகு வேகமாக பரவும் கிக் பொருளாதாரம்: முழுமையான தகவல்

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகெங்கிலும் கிக் எகானமி, கிக் வேலை முறை பெரிய அளவில் பரவ ஆரம்பித்து இருக்கிறது. தாங்கள் விரும்பிய நேரத்தில் விரும்பிய பணியை, விரும்பிய நேரத்தில் செய்து கொள்ளும் இந்தமுறை கிக் என அழைக்கப்படுகிறது. குறைவான நேரத்தில் சரியான வருவாய் ஈட்ட முடிவதால் உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கம் இதனை நோக்கி ஆசையுடன் நகர்ந்து வருகிறது. காலை 9 முதல் மாலை 5 மணிவரை வேலைகள் என்கிற கருத்து மெல்ல உடைபடத் தொடங்கி இருக்கிறது. … Read more

இலங்கை நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: “இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்” என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “எல்லைகளைக் கடந்து உலக மாந்தராகச் சிந்திப்பதுதான் தமிழர் பண்பு. பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை … Read more

எல்லை விவகாரத்தில் மீண்டும் மகாராஷ்டிரா – கர்நாடகா மோதல்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெல்காம், பீதர், கார்வார் உள்ளிட்ட மகாராஷ்டிர எல்லையோர‌ மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இதனால் எல்லையோரத்தில் உள்ள‌ 800 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மராத்திய அமைப்பினர் கோரி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ம‌காராஷ்டிர துணைமுதல்வர் அஜித் பவார், ‘‘மகாராஷ்டிரா தனி மாநிலமாக‌ உருவாகி 62 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பீதர், பெலகாவி போன்ற மாவட்டங்களை நாம் இழந்தது வருத்தம் அளிக்கிறது. 1956 மொழிவாரி மாநிலங்கள் … Read more

ரேஷன் பொருட்களை வெளியில் விற்றால் குடும்ப அட்டை ரத்து: கோவை ஆட்சியர் எச்சரிக்கை

கோவை: ரேஷன் கடையில் பெற்ற பொருட்களை பிறருக்கு விற்பனை செய்தால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் சம்மந்தப்பட்ட பயனாளிகளை முழுமையாகவும், முறையாகவும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், பயனாளிகள் தமிழகத்தின் எந்த ரேஷன் கடையிலும் பொருள் பெறும் வசதியை அளிக்கும் வகையிலும், அனைத்து ரேஷன் கடைகளிலும் விரல் ரேகை சரிபார்ப்பு தொழில்நுட்பம் … Read more

உ.பி. விருந்தினர் மாளிகையில் எலி கடித்ததால் அமைச்சர் பாதிப்பு

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து 2-வதுமுறையாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த மாதம் பதவியேற்றது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் கிரிஷ் சந்திர யாதவ். இவர் இரண்டு நாள் நிகழ்ச்சிகளுக்காக புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள பாந்தா வந்திருந்தார். அங்கு வனப்பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று முன்தினம் இரவு தங்கினார். இந்நிலையில் நள்ளிரவில் அமைச்சரின் அறைக்கு வந்த காட்டு எலி ஒன்று, உறக்கத்தில் அமைச்சர் கிரிஷின் காலில் கடித்து விட்டு தப்பியது. … Read more

கள்ளக்குறிச்சி | மயானம், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சியில் மயானம் மற்றும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஜெயவேல் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்குதாங்கல் கிராமத்தில் 0.26 ஹெக்டேர் மயான புறம்போக்காக வகைபடுத்தபட்டுள்ள ஒரு பகுதியை கிராம மக்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மயான புறம்போக்கு நிலத்தில் தார் சாலை அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். … Read more

இரவு விடுதி கேளிக்கை நிகழ்வில் ராகுல்காந்தி; வைரலான வீடியோ: பாஜக விமர்சனம்; காங்கிரஸ் சரமாரி தாக்கு

புதுடெல்லி: நேபாளத்துக்கு சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஓட்டல் இரவு விடுதியில் நடந்த கேளிக்கை நிகழ்வில் கலந்து கொண்டு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பத்திரிகையாளர் நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேபாளத்துக்கு சென்றார். இந்த பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதேசமயம் ஊடகங்களில் மட்டுமே தகவல் வெளியாகி இருந்தது. திருமணம் … Read more

புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக அதிகாரங்களை கைமாற்றினாரா ரஷ்ய அதிபர் புதின்? – அமெரிக்க ஊடகங்கள் தகவல்

நியூயார்க்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதால் தனது அதிகாரங்களை தற்காலிகமாக பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய நிக்கோல் பாத்ருசேவுக்கு வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க ஊடகச் செய்தியில், “புதின் புற்றுநோய் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே மருத்துவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர் அதனை தள்ளிப்போட்டுவந்த நிலையில் தற்போது உடல்நிலை கருதி அந்த சிகிச்சையை உடனே மேற்கொள்ளவிருக்கிறார். அதனால் தனது அதிகாரங்களில் பாதுகாப்பு … Read more

புதுச்சேரியில் முதல் முறையாக புஷ்கரணி விழா:  64 அடி உயர சிவன் சிலை அமைக்க முடிவு

புதுச்சேரி: சங்கராபரணியில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் புஷ்கரணி விழா நடப்பதையொட்டி வரும் மே 15-க்கு பின்னர் 64 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை அமைக்கும் பணியைத் துவங்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரா கோயிலையொட்டி சங்கராபரணியில் புஷ்கரணி விழா நடத்த முடிவு எடுக்கப்பட்டது. புஷ்கரணி விழா தொடர்பாக அரசு சார்பில் பல்வேறு குழுக்கள் அமைத்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் வரலாறு இல்லை என்பதால் … Read more

மார்ச் மாதத்தில் 18 லட்சம் இந்தியரின் வாட்ஸ் அப் முடக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதி கள் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தன. இதன்படி 50 லட்சத்துக்கும்மேற்பட்ட பயனர்களைக் கொண்டுள்ள டிஜிட்டல் தளங்கள், பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மாதந்தோறும் வெளியிட வேண்டும். இதன்படி மார்ச் மாதத்துக்கான அறிக்கையை வாட்ஸ்-அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் விதிகளை மீறியதாக 18.05 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், பயனாளர்கள் அளித்த புகார்கள் … Read more