உலகில் வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரம்; சிக்கனமான நகரம்: பட்டியல் வெளியீடு

உலகில் வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரம், சிக்கனமான நகரம் பட்டியல் வெளியாகியுள்ளது. மார்ச் 2021ன் ஆய்வின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இசிஏ இன்டர்நேஷனல் (ECA International) என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி உலகிலேயே வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரமாக ஆசியாவின் ஹாங்காங் நகரம் தேர்வாகியுள்ளது. நியூயார்க் இரண்டாம் இடத்திலும் ஜெனீவா மூன்றாம் இடத்திலும் உள்ளன. லண்டன் மற்றும் டோக்கியோ முறையே 4 மற்றும் 5ஆம் இடத்தில் உள்ளன. டாப் 5 காஸ்ட்லி நகரங்களில் லண்டனும், டோக்கியோவும் இடம்பெற … Read more

அரியலூர் ஆட்சியரின் டீசல் சிக்கன நடவடிக்கை: அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு பெற்று அலுவலர்கள் பயணம்

அரியலூர்: அரியலூரில் அரசு சார்பில் நடைபெறும் விழாவுக்கு அரசு பேருந்தில் பயணச்சீட்டு பெற்று அனைத்துத் துறை அலுவலர்களும் பயணித்தனர். டீசல் செலவினை சிக்கனம் செய்ய மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்த புதிய நடவடிக்கையை பின்பற்றி இவ்வாறாக சென்றனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் கடம்பூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் இன்று (ஜூன் 08) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக ஆட்சியர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து முகாம் நடைபெறும் கிராமத்துக்கு ஒரே அரசு … Read more

'உள்நாட்டு முஸ்லிம்களின் குரல்கள் பிரதமர் மோடிக்கு கேட்காது' – ஓவைசி விமர்சனம்

லட்டூர்: நபிகள் நாயகம் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் உள்நாட்டு முஸ்லிம் குரல்களைக் கேட்காத அரசு வெளிநாட்டு கண்டனத்துக்கு பணிந்து நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் மகாராஷ்டிராவில் லட்டூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர், “சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்நாட்டில் முஸ்லிம் மக்கள் கோரினர். அப்போதெல்லாம் செவி கொடுக்காத மத்திய அரசு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தபின்னரே இருவரையும் … Read more

வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை; முழு ஊதியம்: இங்கிலாந்தில் அமலாகும் சோதனை திட்டம்

லண்டன்: கரோனாவிற்கு பிறகு உலக அளவில் பெரும் மாற்றம் நடந்திருக்கிறது. அதுவும் குறிப்பாக தொழில் , மருத்துவ துறைகளில் நாளும் மாற்றங்கள் நடந்தேறி கொண்டு வருகின்றன. அந்தவகையில், இங்கிலாந்தில் 4 நாட்களுக்கு மட்டும் வேலை செய்யும் சோதனை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை திட்டம் பிரிட்டன், கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 6 மாதங்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த சோதனையை ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ச் பல்கலைகழங்கள் & பாஸ்டன் கல்லூரி போன்றவை ஒருக்கிணைத்துள்ளன. முதற் கட்டமாக லண்டனை … Read more

9-வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைத்திடுக: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை:“இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்கான அமைப்பாக திகழும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மீண்டும் புதிதாக அமைக்க வேண்டும்; அதற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: “இந்தியாவின் சமூகநீதி வரலாற்றின் அத்தியாயங்களில் தொடர்ந்து பயணிக்கும் அமைப்பு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக நீதியையும், … Read more

’குஜராத், உ.பி., மும்பை மற்றும் டெல்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம்’ – அல் கொய்தா எச்சரிக்கை

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சுக்கு பழிவாங்கும் விதமாக குஜராத், உ.பி., மும்பை மற்றும் டெல்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என்று அல் கொய்தா தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அல் கொய்தா இன் சப் கான்டினன்ட் (AQIS) என்ற தீவிரவாத அமைப்பின் சார்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 ஆம் தேதியிடப்பட்ட மிரட்டல் கடிதத்தின் விவரம் வெளியாகியுள்ளது. மிரட்டல் கடிதம் விவரம்: அக்கடிதத்தில், “நபிகள் நாயகத்தையும் அவரது மனைவியையும் … Read more

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை முன்பு இருந்ததைப் போலவே நடத்த வேண்டும்: ஒபிஎஸ்

சென்னை: தமிழகத்தில் முன்பு இருந்ததைப் போலவே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்தது, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தியது, தாய்மார்களுக்கு கொடுக்கப்பட்ட அம்மா பரிசுப் பெட்டகத்தை ரத்து செய்தது, அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தை முடக்கியது என்ற வரிசையில் … Read more

'எங்களைப் போல் நீதிமன்றம் செல்லுங்கள்; டான் மாதிரி நடக்காதீர்கள்' – நூபுர் சர்மாவுக்கு கங்கனா ஆதரவு

இந்துக் கடவுள் அவமதிப்புக்கு நாங்கள் நீதிமன்றம் செல்வதுபோல் நீங்கள் நீதிமன்றம் செல்லுங்கள் என முஸ்லிம் மக்களுக்குக் கூறி நூபுர் சர்மாவுக்கு ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார் பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத். “நூபுர் சர்மா அவர் கருத்துகளை சொல்ல உரிமை இருக்கிறது. அவருக்கு எத்தனை மிரட்டல்கள் வருகின்றன என்பதை நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் நீதிமன்றம் செல்லுங்கள். இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதற்காக நாங்கள் அன்றாடம் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். நீங்களும் அதையே செய்யுங்கள். அதைவிடுத்து … Read more

2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல்: அங்கன்வாடி மையங்களிலேயே தொடர கல்வித் துறை முடிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து, அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் 2019-ல் தொடங்கப்பட்டன. 3-4 வயது குழந்தைகள் எல்கேஜி வகுப்பிலும், 4-5 வயது குழந்தைகள் யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கியதால் பெற்றோரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்துவந்தனர். அந்த வகையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள்தற்போது மழலையர் வகுப்பில்படிக்கின்றனர். … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 5000ஐ கடந்தது

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 5000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கரோனா தொற்று நிலவரம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,233 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் இதுவரை மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,90,282 என்றளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 3,345 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,26,36,710 என்றளவில் … Read more