உக்ரைன் போர் இந்திய பொருளாதாரத்தை பெரிதாக பாதிக்காதது ஏன்? – சர்வதேச நிதிய அதிகாரி கருத்து

வாஷிங்டன்: கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பின்னடைவை பொருளாதார சீர்திருத்தங்களால் இந்தியா வெற்றிகரமாக சமாளித்ததன் காரணத்தாலேயே தற்போது உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் இந்தியாவால் சமாளிக்க முடிகிறது என்று சர்வதேச நிதியத்தின் இந்தியாவுக்கான அதிகாரி நட்டா சவுரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. நடப்பாண்டில் அதன் வளர்ச்சி 8.2% எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக பொருளாதார நலனுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. அந்த வகையில் 8.2% பொருளாதார … Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட அறிவிப்பு: தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் 21-ம் தேதி தென் தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். … Read more

நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை – பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் இரு பிரிவினரிடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. வன்முறை நடந்த இடங்களில் புல்டோசர்கள் மூலம் வீடுகள், கடைகளை இடிக்கும் பணி நடைபெற்றது. இதற்கு ஒரு தரப்பினரின் வீடுகள் குறிவைத்து இடிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி, மத்திய பிரதேசத்தில் வன்முறை நடந்த இடங்களில் புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிக்கப்படுகின்றன. நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை … Read more

ஆளுநர் வாகனம் மீது தாக்குதல்: அமித் ஷாவிடம் நேரடியாக முறையிடுவோம் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனம் தாக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நேரடியாக முறையிடுவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ‘பாரதப் பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் – புதிய இந்தியா 2022’ என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுநர் காரின் மீது தாக்குதல் நடந்தது … Read more

கொல்கத்தாவில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நபர்களால் நடத்தப்படும் உணவகம்

கொல்கத்தா: இணையளதளங்களில் சுவாரஸ்யமான செய்திகள் பல கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பல, நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளன. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் உணவகங்கள் பல உள்ளன. டெல்லியில், ‘எக்கோஸ்’ என்ற உணவகம், காது கேளாதோர் மற்றும் பேச்சு குறைபாடு உடையவர்களால் நடத்தப்படுகிறது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோல் மும்பையில் திருநங்கைகளால் நடத்தப்படும் ஒரு உணவகமும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. தற்போது கொல்கத்தாவில் ஒருஉணவகம், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 7 … Read more

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் முடிவை இங்கிலாந்து அரசிடம் ஒப்படைத்தார் நீதிபதி

லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை, வழக்கு விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பும் முடிவை இங்கிலாந்து அரசு எடுக்கலாம் என வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க ராணுவம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோக்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியிட்டார் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இதனால் விக்கிலீக்ஸ் மீது குற்ற விசாரணையை அமெரிக்கா தொடங்கியது. இதனிடையே, இங்கிலாந்தில் இருந்த ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு … Read more

முல்லை பெரியாறு கண்காணிப்புக் குழு தொழில்நுட்ப வல்லுநர் நியமனம்

சென்னை: முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு மே.7-ம் தேதி வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில், முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக்காக 3 பேர் அடங்கிய கண்காணிப்புக் குழுவை மத்திய நீர்வளத் துறை அமைத்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு அந்த கண்காணிப்புக் குழுவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அணை மேலாண்மைக்காக, 2 தொழில்நுட்ப வல்லுநர்களை தமிழகம் மற்றும் கேரளா சார்பில் சேர்க்கும்படி அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், காவிரி தொழில்நுட்பக் குழு … Read more

பாகிஸ்தான் உளவு பார்ப்பதாக புகார் – ராணுவ ரகசிய தகவல்கள் கசிந்ததா என விசாரணை

புதுடெல்லி: ராணுவ அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ள வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் ராணுவ ரகசிய தகவல்கள் கசிந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சீனா மற்றும் பாகிஸ்தான் உளவு ஏஜென்டுகள் ஆன்லைன் மூலமாக இந்திய ராணுவ ரகசியங்களை பெறும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இந்திய ராணுவ அதிகாரிகளை, ஆன்லைன்மூலம் குறிவைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் இதுபோல் பல சம்பவங்கள் … Read more

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் பாதுகாப்பு ஆலோசகராகிறார் இந்திய வம்சாவளி பெண்

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் பாதுகாப்பு ஆலோசகராக, அமெரிக்க போர் கப்பலின் கமாண்டராக பணியாற்றிய இந்திய வம்சாவளி பெண் சாந்தி சேதி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் பிறந்தவர் சாந்தி சேதி. இவரது தாய் கனடாவைச் சேர்ந்தவர். தந்தை இந்தியாவிலிருந்து கடந்த 1960-களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர். சாந்தி சேதி கடந்த 1993-ம் ஆண்டில், அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார். கடந்த 2010 முதல் 2012-ம் ஆண்டு வரை யுஎஸ்எஸ் டெகாடர் என்ற … Read more

காவல்துறையில் 90 சதவீதம் அதிகாரிகள் ஊழல்வாதிகள் என்ற தனி நீதிபதியின் கருத்து நீக்கம் – உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

சென்னை: தமிழக காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகள் என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் கருத்தை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீக்கி உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் நாமக்கல் மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தங்களது குடும்பச் சொத்தை நடேசன், ராஜவேலு ஆகியோர் போலி ஆவணங்கள் மூலமாக மோசடியாக விற்பனை செய்துள்ளதாகக் கூறி, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், வசந்தி அளித்த புகார் … Read more