சேலம் பெரியார் பல்கலை.யில் முறைகேடு; நீதிபதி விசாரணை நடத்தி 4 ஊழியர்கள் பணி நீக்கம்: பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினர் இரா.அருள் பேசியதாவது: மாணவர்களின் மனநிலை மாறி வருகிறது. அவர்களை நல்வழிப்படுத்த அரசுப் பள்ளிகளில் நீதி போதனை, யோகா வகுப்புகள் நடத்த வேண்டும். ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அவசியம். நீட், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ப பாடத் திட்டத்தை வகுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூக … Read more

பாஜக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகிறார் ஆதித்யநாத் – 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளர்?

புதுடெல்லி: உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 2-வது முறை வெற்றி பெற்றதற்கு பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உள்ளார். இதன் மூலம் 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவாரா என்ற பேச்சு எழுந்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக கட்சி ஆட்சி மன்ற குழுவில் 2 உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன. மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மறைந்த பிறகு அந்த இடங்கள் காலியாகவே உள்ளன. … Read more

'இன்றே கடைசி'.. உக்ரைன் படைகளின் உருக்கமான பேஸ்புக் பதிவு! – வீழ்கிறது மரியுபோல்

கீவ்: உக்ரைனின் மரியுபோல் நகரை நீண்ட காலமாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரஷ்யா, அந்நகரை முற்றிலுமாக கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 7வது வாரமாக நீடிக்கும் சூழலில் மரியுபோல் நகரில் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போராடி வரும் உக்ரைன் ரானுவத்தின் 36வது மரைன் பிரிகேட் தனது பேஸ்புக் பக்கத்தில், இன்று தான் எங்கள் போராட்டத்தின் கடைசி நாள். எல்லா ஆயுதங்களும் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன. இதற்குப் பிறகு எங்களில் சிலருக்கு சாவும், சிலருக்கு சிறையும் … Read more

மத்திய பல்கலை.களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தீர்மானம் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று இதுகுறித்து அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து … Read more

காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாக்.,பிரதமர்: அமைதியை விரும்புவதாக வாழ்த்துச் செய்தி அனுப்பிய இந்தியப் பிரதமர் மோடி

புதுடெல்லி: பாகிஸ்தானின் 23வது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார் ஷெபாஸ் ஷெரீப். அவர் தனது முதல் உரையில் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அமைதியை விவாதிக்க முடியாது தனது முதல் பேச்சில் கூறியிருந்த நிலையில், அமைதியை நிலைநாட்டாமல் வளர்ச்சி காண முடியாது என்று வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மோடி தனது ட்விட்டரில், “பாகிஸ்தானின் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மியான் முகமது ஷெபாஸ் ஷெரீபுக்கு எனது வாழ்த்துகள். பாகிஸ்தான் பயங்கரவாதம் இல்லாத பிராந்தியமாகவும் அமைதியும், ஸ்திரத்தன்மையும் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தில் மிகக் கனமழை வாய்ப்பு

சென்னை: தென் தமிழக மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘12-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலஇடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது’’ என்று … Read more

'உக்ரைன் நிலவரம் கவலை அளிக்கிறது' – அமெரிக்க அதிபர் பைடனிடம் பிரதமர் நரேந்திர மோடி வேதனை

புதுடெல்லி: உக்ரைன் நிலவரம் கவலை அளிப்பதாக அமெரிக்க அதிபர் பைடனிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்திய, அமெரிக்க பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் 4-வது முறையாக வாஷிங்டனில் நேற்று சந்தித்துப் பேசினர். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டனை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாலை சந்தித்தார். அப்போது பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இரு அமைச்சர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதேபோல அமெரிக்க வெளியுறவு துறை அலுவலகத்தில் அத்துறை … Read more

செங்கல்பட்டு, நாகை உட்பட 5 மாவட்டங்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.18 கோடியில் புதிய விடுதிகள்: ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 மாவட்டங்களில் ரூ.18.42 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசுவெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு திட்டங்கள் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக பொருளாதார நிலையை உயர்த்தி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி செங்கல்பட்டு, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.18.42 கோடியில் புதிதாக 5 ஆதிதிராவிடர், … Read more

'ஆர்கே ரோஜா அனே நேனு' – விமர்சனம், அவமானங்களை தாண்டி சாதித்த 'மினிஸ்டர்' ரோஜா

‘ஆர்கே ரோஜா அனே நேனு’ என ஆந்திர தலைநகர் அமராவதி மைதானத்தில் ஒலித்த வார்த்தைகள் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காத்திருப்புக்கும் அவமானங்களுக்கும் பழிச்சொல்லுக்கும் கிடைத்த வெற்றி. ஆம், நடிகையாக இருந்து இப்போது ‘மினிஸ்டர்’ ஆகியிருக்கும் ரோஜா, இந்த நிலையை எட்ட கொடுத்த உழைப்புகளும், சந்தித்த அவமானங்களும் ஏராளம். ஒரு நடிகையாக ரோஜாவை பலருக்கும் தமிழகத்தில் தெரியும். ஆனால் ஒரு அரசியல்வாதியாக ரோஜாவை தமிழகத்தில் பலருக்கு அவ்வளவாக தெரியாது. மிக குறுகிய காலத்தில் திரைத்துறையில் உச்சம் தொட்ட அவர், … Read more

இலங்கை பொருளாதார நெருக்கடி ஏன்? – மகிந்த ராஜபக்ச விளக்கம்

கொழும்பு: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் அவர்கள் பதவி விலக மறுத்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்கு முன்னதாகவே நாம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதை அறிந்திருந்தும், நாம்பொது முடக்கத்தை அறிவிக்க வேண்டியிருந்தது. நமது நாட்டில் பிரச்சினை இருப்பது … Read more