கரோனா தடுப்புப் பணிகளுக்கு மட்டும் ரூ.310 கோடி செலவு செய்த சென்னை மாநகராட்சி 

சென்னை: சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டில் கரோனா தடுப்புப் பணிகளுக்கு மட்டும் ரூ.310 கோடி செலவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கரோனா தொற்றின் 2-வது அலை உச்சத்தில் இருந்தது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்ட வந்த காரணத்தால் பலருக்கும் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ‘கோவிட் கேர் மையங்கள்’ உள்ளிட்ட பல கரோனா சிகிச்சை மையங்களை தமிழக அரசு உருவாக்கியது. சென்னையில் மட்டும் 100-க்கும் … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் 

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக, கடலூர், புதுக்கோட்டை, … Read more

பள்ளிகளில் இந்தி கட்டாயம்: அமித் ஷா பேச்சுக்கு வடகிழக்கு மாநில மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு 

இந்தியா : பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு வடகிழக்கு மாநில மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்றும், இந்தியை பயிற்றுவிக்க 22 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதற்கு வடகிழக்கு மாநிலங்களின் மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பேசிய இந்த அமைப்பின் தலைவர் … Read more

கரோனா பூஸ்டர் தடுப்பூசி: தமிழகத்தில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தொடக்கம்

சென்னை : 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இன்று தொடங்கியுள்ளது. கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தனியார் மருத்துவமனை தடுப்பூசி மையங்களில் இன்று முதல் 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.மேலும் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு ரூ.225 விலையாக நிர்ணயம் செய்து இருந்தது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் … Read more

இலவசங்களைக் கொடுப்பது அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு; அதில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: இலவசங்களை அறிவிப்பதும், கொடுப்பதும் அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு. அதில் தலையிட முடியாது என இந்தியத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அஸ்வின் உபாத்யாய என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர், “அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் சாத்தியமற்ற இலவசங்களை அறிவிப்பது லஞ்சம் வழங்குவதற்கு சமம். இது வாக்காளர்களை மறைமுகமாக நிர்பந்திக்கும் செயல். நேர்மையான, நியாயமான தேர்தல் முறைக்கு எதிரானது. அதனால் இதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று … Read more

தமிழகம் முழுவதும் நடந்த குருத்தோலை ஞாயிறு பவனி: கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (ஏப்.10) ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, குருத்தோலை பவனி நடைபெற்றது. கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது … Read more

கீவ் நகரை கைப்பற்றுவதில் தோல்வி: உக்ரைன் போருக்கு புதிய படைத் தளபதியை நியமித்த புதின்

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் ஒன்றரை மாதத்திற்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் சூழலில் புதிய படைத் தளபதியை நியமித்து ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ராணுவத் தாக்குதலை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். அன்றிலிருந்து ஒன்றரை மாதமாக தாக்குதல் நடந்து வரும் நிலையில், உக்ரைனின் தலைநகரான கீவ் நகரைக் கைப்பற்றுவதில் ரஷ்யாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் ரஷ்யா தனது போர் இலக்காக கிழக்குப் பகுதியை மாற்றியுள்ளது. … Read more

கல்லூரி தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான கட்டணங்கள் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும், சில இனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “முப்பது வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் … Read more

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பரிசோதனை – 60 லட்சம் பேரில் 24 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம்: ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 60 லட்சம் பேரில் 24.03 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 16.50 லட்சம் பேருக்கு நீரிழிவு நோயும் இருப்பது தெரியவந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த பின்புஅவர் பேசியதாவது: தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இதுவரை சுமார் 60 லட்சம் பேரை பரிசோதித்துள்ளோம். அவர்களில் 24.03 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம், … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தவில்லை என தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அவமதிப்பு வழக்கு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீதிமன்ற உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று கூறி, மாநில தேர்தல் ஆணையம், தமிழக உள்துறைச் செயலர், டிஜிபிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக் கோரி அதிமுகஅமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தலுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகள் மீதான விசாரணையின்போது, ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடத்தப்படும். உரியபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு … Read more