மும்பையை தொடர்ந்து குஜராத்திலும் எக்ஸ்இ கரோனா?

அகமதாபாத்: கரோனா புதிய திரிபான எக்ஸ்இ தொற்று மும்பையில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் நிலையில் குஜராத்திலும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதனை மத்திய சுகாதார அமைச்சகம் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனை அடுத்து கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்ள்ளன. வெளிநாட்டு விமான சேவையும் மீண்டும் தொடங்கின. இதனிடையே பிரிட்டனில் முதன்முதலாக இந்த புதிய மாறுபட்ட கரோனா திரிபு கண்டறியப்பட்டது தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்இ எனும் … Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட் | பள்ளிகளில் காலை சிற்றுண்டி முதல் பாலின சமத்துவக் குழு வரை.. முக்கிய அறிவிப்புகள் என்ன?

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியின் 2022-23 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மேயர் பிரியா ராஜன் இன்று (ஏப்.9) தாக்கல் செய்தார். மாநகராட்சிப் பள்ளிகளில் பாலின சமத்துவ குழுக்கள் அமைத்தல், காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துதல், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பெருநகர சென்னை மாநகராட்சியில் 119 தொடக்கப் பள்ளிகளும், 92 நடுநிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளும் … Read more

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: பள்ளி மாணவர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை பேணிக்காத்து கல்வியை திறம்பட கற்றிட ஏதுவாக சென்னையில் 23 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மேலும் பல பள்ளிகளுக்கு விரிவுபடுத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், “சென்னை பள்ளிகளில் ஏழைக் குழந்தைகள் காலையில் சிற்றுண்டிகள் கிடைக்காத நிலையில் வகுப்பில் சோர்வு நிலையில் உள்ளதால் கல்வி கற்பதில் தொய்வு ஏற்படுவதை நீக்கும் பொருட்டு காலைச் சிற்றுண்டி … Read more

அதிகரிக்கும் கரோனா: 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை; 5 நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவுரை

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை முடிந்து படிப்படியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த வார புள்ளிவிவரப்படி 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக கேரளாவில் கடந்த வாரம் புதிதாக 2,321 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த இந்திய பாதிப்பில் 31.8 சதவீதம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனாவில் கரோனா மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் தற்போது பிஏ.2 என்ற ஒமிக்ரான் வகை கரோனா வைரஸ் … Read more

'வெளிமாநில தொழிலாளர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்க சட்டம் நிறைவேற்றுக' – அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இதற்காக, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால், காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்தை முன்னிலைப்படுத்து அக்கட்சி இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, … Read more

கர்நாடகாவில் ஏசி வெடித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஏ.சி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந் தைகள் உட்பட‌ 4 பேர் பரிதாபமாக பலியாயினர். கர்நாடக மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மரிய மானஹள்ளியை சேர்ந்தவர் வெங்கட் பிரசாந்த் (42). அவர் தன‌து மனைவி சந்திரகலா (38), மகன் ஆத்விக் (6) மகள் பிரேரனா (8)ஆகியோருடன் வீட்டில் வியாழக்கிழமை இரவு தூங்கினார். நேற்று அதிகாலை வேளையில் திடீரென ஏ.சி. வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் … Read more

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்: 35 பேர் உயிரிழப்பு

கீவ்: உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. 44 நாட்கள் கடந்த பின்னரும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் நேற்று உக்ரைனில் உள்ள ரயில் நிலையம்ஒன்றைக் குறி வைத்து ரஷ்யராணுவம் தாக்குதல் நடத்தியது. கிழக்கு உக்ரைனின் கிராமடோர்ஸ் நகரில் உள்ள ரயில் நிலையத்தைக் குறி வைத்து ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. இந்த … Read more

கூட்டுறவு சங்கங்களை கலைப்பதற்கான நடவடிக்கையை கண்டித்து அதிமுக வெளிநடப்பு: சட்டப்பேரவையில் பேச்சுரிமை பறிக்கப்படுவதாக பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: கூட்டுறவு சங்கங்களை கலைக்கமசோதா கொண்டு வரப்பட்டதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரின் பேச்சுரிமை பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சிதலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு சங்கம் தொடர்பாக பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதை கண்டித்துஅதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புசெய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கூட்டுறவு தேர்தல் ஆணையம், 2 முறை கூட்டுறவு அமைப்பு தேர்தலை நடத்தியது. இதில் வெற்றி பெற்று உறுப்பினர்கள், தலைவர்கள் தேர்வாகிநல்ல முறையில் கூட்டுறவு … Read more

முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய கர்நாடக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் கடந்த மாதம் பஜ்ரங் தள நிர்வாகி ஹர்ஷா மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தலைமையில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் முஸ்லிம் அமைப்பினரை கடுமையாக விமர்சித்தார். மேலும், ‘‘முஸ்லிம் குண்டர்களே ஹர்ஷாவை கொலை செய்துள்ளனர்” என குற்றம் சாட்டினார். இந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதுகுறித்து ஷிமோகாவை சேர்ந்த ரியாஸ் அகமது, அமைச்சர் ஈஸ்வரப்பா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு பேசியதாலேயே வன்முறை ஏற்பட்டது. பாஜக … Read more

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்க செய்ய இம்பீச்மென்ட் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் முடிவு

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஒருபுறம் அரசியல் குழப்பங்கள் மறுபுறம் என நாளுக்கு நாள் சிக்கல் வலுத்துவரும் நிலையில், அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகய (எஸ்ஜேபி) கட்சி அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானாமும் அதிபரை விசாரணைக்கு உட்படுத்தும் இம்பீச்மென்ட் தீர்மானமும் கொண்டு வரத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் … Read more