ருமேனியாவில் ரஷ்ய தூதரகம் மீது கார் மோதல்; மர்ம நபர் பலி: போலீஸ் விசாரணை

ருமேனியாவில் ரஷ்ய தூதரகம் மீது மர்ம நபர் ஒருவர் காரை மோதி வெடிக்கச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் யார், இது விபத்தா அல்லது திட்டமிட்ட சம்பவமா என்பன தொடர்பான விசாரணைகள் தொடங்கியுள்ளன. உக்ரைனின் அண்டை நாடு ருமேனியா. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்குப் பின்னர் ருமேனியாவுக்கு மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலையில் ருமேனிய தலைநகர் புச்சாரஸ்டில் உள்ள ரஷ்ய தூதரகம் வாயில்கதவில் அதிவேகமாக வந்த கார் … Read more

உதவி ஆய்வாளர் பணிகளுக்கான விண்ணப்ப காலத்தை நீட்டிக்க வேண்டும்: ஈபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவை நீட்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடுசீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழக காவல் துறைக்கு 444 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்ய அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் ஏற்கெனவே காவல் துறையில் பணிபுரிந்து வரும் தகுதியுடைய காவலர்களுக்கு 20 சதவீத … Read more

சஞ்சய் ராவத் மனைவி உள்ளிட்டோரின் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கம்

மும்பை: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் உள்ளிட்ட 3 பேரின் ரூ.11.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இருந்து குரு ஆசிஷ் என்ற கட்டுமான நிறுவன உரிமையாளர் பிரவீன் ராவத் முறைகேடாக ரூ.100 கோடி கடன் பெற்றதாகவும் அந்தப் பணத்தை தன் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சஞ்சய் ராவத்தின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை போட்டதாகவும் புகார் எழுந்தது. … Read more

இலங்கை, பாகிஸ்தானை ‘விழுங்கிய’ பெல்ட் அண்ட் ரோடு திட்டம்: கடன் வலையில் சிக்க வைத்த சீனா

கொழும்பு: இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பிற நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கும் சீனாவின் ராஜதந்திர நடவடிக்கை உலகம் முழுவதையும் தற்போது திரும்பி பார்க்க வைத்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு (பிஆர்) … Read more

ஏப்ரல் 15-ல் சீதா- ராமர் திருக்கல்யாணம்: முதல்வர் ஜெகன்மோகன் பங்கேற்பு

கடப்பா: ஒருங்கிணைந்த ஆந்திராவில் ராம நவமியை முன்னிட்டு, சீதா-ராமர் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் பத்ராசலம் ராமர் கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், தனி தெலங்கானா மாநிலம் உருவானபோது, பத்ராசலம் தெலங்கானாவுக்கு சென்றுவிட்டது. ஆதலால், ஆந்திராவுக்கென கடப்பா மாவட்டத்தில் உள்ள சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோதண்டராமர் கோயில் தேர்வு செய்யப்பட்டது. இக்கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, இதனை பராமரித்து வருகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி விழா வெகு விமரிசையாக … Read more

சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக வெளிநடப்பு: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்தில், அதுவும் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருந்து விட்டு, தேர்தல் முடிந்தவுடன் வாக்களித்த மக்களுக்கு பரிசாக சொத்து வரியை உயர்த்தியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவை எதிர்gகட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. முன்னதாக,”உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்து தற்போதுள்ள நிலையில் எதையும் … Read more

இந்தியாவில் அறிமுகச் சலுகையுடன் விற்பனைக்கு வந்தது ரியல்மி C31 ஸ்மார்ட்போன்

இந்தியச் சந்தையில் இன்று விற்பனையை தொடங்கியுள்ளது ரியல்மி நிறுவனத்தின் C31 (realme c31) ஸ்மார்ட்போன். இந்த போனுக்கு அறிமுகச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி, இந்தியாவில் பட்ஜெட் விலை போனாக C31 ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட்போனை மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சாட், தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ள மற்றும் பிரவுசிங் செய்வது போன்ற அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்தும் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போன் இது. குறைவான … Read more

'சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது' – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: “உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்து தற்போதுள்ள நிலையில் எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால், இந்த சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. முன்னதாக கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது சொத்து வரி உயர்வு குறித்து எழுப்பப்பட்ட முதல்வர் ஸ்டாலின் … Read more

'நாம் தேசபக்தியோடு இருக்கிறோம்; சில கட்சிகளுக்கு குடும்ப பக்தி மட்டும்தான் இருக்கிறது' – பாஜகவின் 42-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘நாம் தேசபக்தியோடு இருக்கிறோம்; சில கட்சிகளுக்கு குடும்பபக்தி மட்டும்தான் இருக்கிறது’ என்று பாஜகவின் 42-வது நிறுவன தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். பாஜகவின் 42வது நிறுவன நாளான இன்று (ஏப்ரல் 6) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, “பாஜக தேசபக்தியோடு அர்ப்பணிப்புடன் இயங்குகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு குடும்ப பக்தி மட்டும் தான் தெரியும். இன்று இந்த உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது. இரண்டு பெரும் … Read more

3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன் தகவல்

சென்னை: கடந்த ஆண்டுக்கும், இந்த ஆண்டுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. முதல் நாளான இன்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை … Read more