திராவிட மாடல் இந்தியாவுக்கே வழிகாட்டும்: விழுப்புரம் அருகே சமத்துவபுரத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் கருத்து

விழுப்புரம்: இந்திய திருநாடே சமத்துவ நாடாக வும் சமூகநீதி நாடாகவும் மாற வேண்டும். அதற்குத் தமிழகமும், நமது திராவிட மாடலும் தொடர்ந்து வழிகாட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொழுவாரி கிராமத்தில் ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அங்கு நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையையும் திறந்து வைத்தார். தொடர்ந்து ஒழுந்தியாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற … Read more

ஒலிபரப்புத் துறையில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க தனி இணையதளம் தொடங்கியது மத்திய அரசு

ஒலிபரப்புத் துறை சார்ந்த தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் நோக்கில் அதற்கென்றுதனி இணையதளத்தை நேற்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ப்ராட்கேஸ்ட் சேவா போர்ட்டல்’ என்ற அந்த தளம் மூலமாக, ஒலிபரப்புத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் தொழிலுக்கான அனுமதி, உரிமம், பதிவு,புதிப்பித்தல் உள்ளிட்ட நடைமுறைகளை எளிமையாக மேற்கொள்ள முடியும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ‘‘தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை குறுகிய காலத்தில் … Read more

தமிழகத்தில் தாமரையின் மலர்ச்சி உறுதி செய்யப்பட்டு விட்டது – அண்ணாமலை நம்பிக்கை

தமிழகத்தில் தாமரையின் மலர்ச்சிஉறுதி செய்யப்பட்டு விட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய நாட்டில் நிலையற்ற தன்மை நிலவியபோது, ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியோடு தொடங்கப்பட்ட ஓர் இயக்கம்.இன்று உள்நாட்டில் வெற்றிகளையும், வெளிநாட்டில் நன்மதிப்பையும் பெற்று வருகிறது. நரேந்திர மோடியின் நல்லாட்சிக்கு தந்த பரிசாக தமிழகத்திலும் தற்போது பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தாமரையின் மலர்ச்சி உறுதி செய்யப்பட்டு விட்டது. இனி தாமரையின் … Read more

தீ விபத்தில் சிக்கிய பெண் குழந்தை உள்ளிட்ட 4 பேரை காப்பாற்றிய போலீஸ் – பதவி உயர்வு வழங்கி ராஜஸ்தான் முதல்வர் பாராட்டு

தீ விபத்தில் சிக்கிய 3 பெண்கள், ஒரு குழந்தையைக் காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிளுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் அவருக்கு பதவி உயர்வு வழங்கி பாராட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டம் நதவுட்டி ஒன்றியம் படா காவோன் பகுதியைச் சேர்ந்தவர் நேத்ரேஷ் சர்மா (31). கோட்வாலி போலீஸ் நிலையத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். அண்மையில் கோட்வாலி மார்க்கெட் பகுதியிலுள்ள கடைப் பகுதியில் திடீரென தீ விபத்து … Read more

'நான் இந்தியா, அமெரிக்க எதிர்ப்பாளன் அல்ல' – பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் இம்ரான் கான்

’நான் இந்தியா அல்லது அமெரிக்க எதிர்ப்பாளன் அல்ல, பரஸ்பர மரியாதை அடிப்படையில் நல்ல உறவுகளை விரும்புபவன்’ என்று பாகிஸ்தான் இடைக்கால பிதரமர் இம்ரான் கான் கூறினார். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் இம்ரான் கான் அரசுக்கான ஆதரவை கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொண்டன. இதையடுத்து அவரது அரசுக்கு எதிரானநம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார். இடைக்கால பிரதமராக பதவியில் நீடிக்கும்படி இம்ரான் … Read more

தமிழினம் சற்றே தேங்கிவிட்ட நிலையை சீரமைக்கிறோம்: சமத்துவபுர நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “சமத்துவபுரம் கட்டிடங்களால் மட்டும் ஆனதல்ல, பெரியார், அண்ணா, கருணாநிதியின் சமதர்ம கொள்கை கனவுளால் ஆனது” என்று விழுப்புரத்தில் சமத்துவபுரத்தைத் திறந்து வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம், ஒழுந்தியாம்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரையில், “பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், ஈரோட்டுச் சிங்கம் தந்தை பெரியார் பெயரிலே அமைந்திருக்கக்கூடிய சமத்துவபுரத்தினுடைய திறப்பு … Read more

எஸ்.ராமகிருஷ்ணன், விஸ்வநாதன் ஆனந்த், டி.எம்.கிருஷ்ணா… – தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு அமைப்பு

சென்னை: தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி த.முருகேசன் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்துத் தொழிற்கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமை … Read more

சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியதே திமுக அரசின் சாதனை: ஆர்ப்பாட்டத்தில் தங்கமணி பேச்சு

நாமக்கல்: “கடந்த 10 மாத காலத்தில் திமுக அரசு எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியதே திமுக அரசின் சாதனை“ என அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேசினார். தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசியது: “தமிழக அரசு, அடித்தட்டு மக்களும் பாதிக்கும் வகையில் பல … Read more

இலங்கையிலிருந்து தப்பி வந்த இளைஞர் – பல நாள் தேடலுக்கு பிறகு சேலத்தில் கைது

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து பைபர் படகு மூலம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிக்கு தப்பி வந்த இலங்கை இளைஞரை தேவிபட்டினம் மரைன் போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே ஜமீன்தார்வலசை கடற்கரை கிராமத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி நள்ளிரவில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கி நின்றது. இதனையறிந்த தேவிபட்டினம் மரைன் போலீஸார் படகை கைப்பற்றி, அன்றைய தினமே நடுக்கடலிலும், கடற்கரை பகுதிகளிலும் யாரும் மர்ம நபர்கள் அல்லது கடத்தல்காரர்கள் வந்துள்ளனரா … Read more

நள்ளிரவு முதல் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் ரத்து – கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் ஏப்ரல் 1ம் தேதி நடைமுறைக்கு வந்த அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்துள்ளார் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. பல தசாப்தங்களுக்கு பிறகு இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி இது. இதனால் நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை … Read more