ஒரு மாவட்ட செயலாளருக்கு ஒரு மண்டலம் – மாநகராட்சியில் பதவிகளுக்கு மதுரை திமுகவின் அடுத்த ‘ரேஸ்’

மதுரை: மதுரை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், மண்டலத் தலைவர்கள் பதவிக்கு அடுத்தக்கட்டமாக திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக இந்திராணி பொன்வசந்த் அறிவிக்கப்பட்டார். அதனால், மேயர் வேட்பாளர் போட்டியில் இருந்த மற்ற கவுன்சிலர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது அடுத்தக்கட்டமாக அவர்கள், மண்டலத் தலைவர்கள் பதவிக்கு முயற்சி செய்து வருகின்றனர். மாநகராட்சியில் மொத்தம் 5 மண்டலங்கள் உள்ளன. மேயர் வேட்பாளர் பரிந்துரையில் மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக … Read more

ஆபரேஷன் கங்கா | இதுவரை 6,200 இந்தியர்கள் மீட்பு; அடுத்த 2 நாட்களில் 7,400+ பேரை மீட்க திட்டம்

ஆபரேஷன் கங்கா செயல்திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனிலிருந்து 6,200-க்கும் அதிகமான இந்தியர்கள் திரும்பியுள்ளனர் என்றும், அடுத்த இரண்டு நாட்களில் 7,400-க்கும் அதிகமான இந்தியர்கள் வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை திரும்ப அழைத்து வர ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில், மீட்பு நடவடிக்கைகளை இந்தியா பெருமளவில் மேற்கொண்டு வருகிறது. இந்திய மாணவர்களை வெகு வேகமாக இந்தியாவிற்கு … Read more

எங்களிடம் இழக்க ஒன்றுமில்லை. ஆனால்… – உக்ரைன் அதிபரின் ஆவேசமும், ரஷ்யா தந்த அப்டேட்டும்

கீவ்: “உக்ரைனின் ஒவ்வொரு நகரையும், ஒவ்வொரு தெருவையும்… ஏன் ஒவ்வொரு வீட்டையும் கூட மீட்டமைப்போம்“ என்று ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸிகி சவால் விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 8-வது நாளாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. துறைமுக நகரான கெர்னாஸ்கைக் கைப்பற்றியது. கார்கிவ் பெரும்பாலும் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட வீடியோவில், “எங்கள் நாட்டின் மீது படையெடுத்ததற்கான விலையை ரஷ்யா நிச்சயம் கொடுக்கும். இழப்பீடு என்றொரு வார்த்தைக் … Read more

தமிழகத்தில் இன்று 300க்கும் கீழ் குறைந்த கரோனா தொற்று; சென்னையில் 83 பேர் பாதிப்பு: 778 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 292 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,50,333. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,08,373`. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 83 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

உக்ரைனில் இருந்து தாயகம் புறப்பட்ட பஞ்சாப் மாணவர் மாரடைப்பால் மரணம்

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து நாடு திரும்புவதற்குப் புறப்பட்ட பஞ்சாப் மாணவர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், வினிஸ்தியா நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் நிகழும் ரஷ்யப் போரால் அங்குள்ள வெளிநாட்டினர் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. இதற்காக மத்திய அரசால் ‘ஆப்ரேஷன் கங்கா’ எனும் பெயரில் விமானங்களில் மீட்கப்படும் மாணவர்கள் டெல்லிக்கு வந்து சேருகின்றனர். தாயகம் திரும்புவதற்காக உக்ரைனின் எல்லையில் உள்ள ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, போலாந்து, செக்கஸ்லேவேகியா … Read more

'இந்த முழு உலகமும் என் கதையைக் கேட்க வேண்டும்…' – உக்ரைன் போர் பூமியில் இருந்து ஒரு வேதனைக் குரல்

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. 2000-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தரப்பு தெரிவிக்கிறது. இந்தச் சூழலில், போர் பூமியிலிருந்து தன் மனைவியை, உடைமைகளை இழந்த ஒருவர் இந்த உலகுக்கு சொல்லும் சேதி என்ன தெரியுமா? – தனது கதையை இந்த உலகம் முழுவதும் கேட்க வேண்டும் என்றே அவரே சொல்கிறார். ஓலெக் ரூபக். இவர் உக்ரைனின் ஜைட்டோமிர் நகரில் வசித்து வந்தார். கீவ் நகரிலிருந்து 150 … Read more

நகராட்சி மன்றத்‌ தலைவர் பதவி – மாவட்ட வாரியாக திமுக பட்டியல்

தி.மு.கவின் சார்பாக போட்டியிடும்‌ நகராட்சி மன்றத்‌ தலைவர்கள் பட்டியலை மாவட்ட வாரியாக அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: திருவள்ளூர்‌ கிழக்கு மாவட்டம்‌ – நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌ பொன்னேரி _ டாக்டர்‌ பரிமளம்‌ திருவள்ளூர்‌ மத்திய மாவட்டம்‌ – நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌ பூவிருந்தவல்லி – காஞ்சனா சுதாகர்‌ திருவேற்காடு – இ. கிருஷ்ணமூர்த்தி திருநின்றவூர்‌ – உஷாராணி திருவள்ளூர்‌ மேற்கு மாவட்டம்‌ – நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌ திருவள்ளூா – உதயமலர்‌ பாண்டியன்‌ திருத்தணி – … Read more

உற்பத்தி துறையில் ஆற்றல் மிக்கதாக இந்தியாவை உலகம் காண்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: உங்களின் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்கள் மீது பெருமிதம் கொள்ளுங்கள், அதே போல் இந்தப் பெருமித உணர்வை உங்களின் இந்திய வாடிக்கையாளர்களிடம் நிலை நிறுத்துங்கள் என இந்திய உற்பத்தி நிறுவனங்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை ஏற்பாடு செய்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திரு மோடி இன்று உரையாற்றினார். பிரதமரால் உரை நிகழ்த்தப்பட்ட பட்ஜெட்டுக்குப் பிந்தைய எட்டாவது இணையவழிக் கருத்தரங்காகும் இது. இந்தக் கருத்தரங்கிற்கு உலகத்துக்காக … Read more

பூமியின் ’நரகம்’ காசா – உக்ரைன் குண்டுச் சத்தங்களுக்கு இடையே பாலஸ்தீனர்களின் குரலையும் கேளுங்கள்!

”பூமியில் நரகம் உள்ளது என்றால், அது காசாதான்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியா குத்தேரஸ் ஒருமுறை பேசியிருந்தார். நரகம் என்ற சொல் காசாவுக்கு எப்போதும் பொருத்தமாகவே இருந்திருக்கிறது. யாசர் அராஃபத்தின் மறைவுக்குப் பிறகு அரபு நாடுகளால் பாலஸ்தீனம் முற்றிலுமாக கைவிடப்பட்ட தேசமாகிவிட்டது. இதற்குச் சான்றுதான் சமீபத்தில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்யபட்ட கிழக்கு ஜெருசலேமின் டமாஸ்கஸ் கேட் பகுதியில் நடந்த மனதை பதைபதைக்கும் காட்சிகள். மார்ச் 1-ஆம் தேதி, முகமது நபிகள் விண்ணேற்றத்தைக் குறிக்கும் … Read more

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க கோரிக்கை: தேனி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானத்தால் சலசலப்பு

சென்னை: சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றி நேற்று பெரியகுளத்தில் நடந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நகர்ப்புற தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்தநிலையில் அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தநிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் … Read more