'நரக வாழ்க்கை' – கார்கிவில் கடும் தாக்குதல், குண்டு மழையில் கீவ்… – அண்டை நாடுகளில் 10 லட்சம் பேர் தஞ்சம்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா இன்று 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கே இயல்பு நிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தெருக்களில் ரஷ்ய, உக்ரைன் படைகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உள்ளது. தலைநகர் கீவ் மீதும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. காலையில் இருந்தே கீவ் நகரில் வெடிகுண்டுச் சத்தம் விண்ணைப் பிளப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய நகரங்களைப் … Read more

நீட் தேர்வு ரத்தே உடனடி இலக்கு: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: மருத்துவக் கல்வி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதே உடனடி இலக்காக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்விகட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக்கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டுக்கு சென்று படித்த கர்நாடக மாநிலத்து மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த … Read more

கடுமையாக உயரும் கச்சா எண்ணெய் விலை: 8 ஆண்டுகளில் இல்லாத லாபம் ஈட்டும் ஓஎன்ஜிசி

புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகமாக இறக்குமதி செய்யும் இந்தியா பாதிக்கப்படும் என அச்சம் உள்ள நிலையில் கச்சா எண்ணெய் தோண்டி எடுக்கும் இந்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து … Read more

தெர்மோபேரிக், க்ளஸ்டர் குண்டுகள்: உக்ரைன் போரில் அதிபயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டம்

மாஸ்கோ: உக்ரைன் உடனான போரில் க்ளஸ்டர் குண்டுகள், தெர்மோபேரிக் ஆயுதங்கள் என தன்னிடம் உள்ள அதிநவீன மிக மோசமான நாககர விளைவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களையும் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் 8வது நாளை எட்டியுள்ள நிலையில், எதிர் தரப்பிலிருந்து பின்வாங்கும் அறிகுறி தென்படாததால் இன்றைய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அடுத்தக்கட்டத் தாக்குதலுக்கு ரஷ்யா தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், க்ளஸ்டர் குண்டுகள், தெர்மோபேரிக் ஆயுதங்கள் என தன்னிடம் உள்ள அதிநவீன மிக … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்ச் 7 முதல் நேரடி விசாரணை நடைபெறும்: தலைமை நீதிபதி அறிவிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்ச் 7 முதல் நேரடி விசாரணையில் மட்டுமே வழக்குகள் விசாரிக் கப்படும் என்றும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவித்துள்ளார். கரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் கடந்த 2020 மார்ச் இறுதி வாரத்தில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு, வழக்குகள் காணொலி விசார ணையாக நடைபெற்றது. அதன்பிறகு கரோனா பரவல் குறைந்ததும் காணொலி மற்றும் … Read more

'இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை': வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: உக்ரைனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுச் செயலர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில், உக்ரைனில் உள்ள இந்தியர்களுடன் அங்குள்ள நமது தூதரகம் தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் உதவியுடன் நேற்று நிறைய இந்திய மாணவர்கள் கார்கிவ்வில் இருந்து வெளியேறினர். இதுவரை இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு எந்தத் … Read more

கிழக்கு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் ரஷ்யா வழியாக மீட்கப்படுவர்: இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தகவல்

கிழக்கு உக்ரைனில் தவித்து வரும் இந்தியர்களை ரஷ்ய நிலப்பகுதி வழியாக அழைத்து வருவது விரைவில் சாத்தியமாகும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் இந்தியர்கள் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கார்கிவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் பிற இடங்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்காக நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அங்கு … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதுஅடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த … Read more

இந்தியர் அனைவரும் மீட்கப்படுவார்கள்: உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மீட்கப்படுவர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது. நேற்று வரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உ.பி.யின் சோன்பத்ராவில் நடைபெற்ற தேர்தல் … Read more

3-வது உலகப் போர் மூண்டால் அணு ஆயுதங்கள் பங்கு பெறும்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் மீது கடந்த 7 நாட்களாக ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே நேற்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது: உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கையை ரஷ்யா கடந்தவாரம் தொடங்கியது. இதனிடையே உக்ரைன் நாடானது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால்அது பேரழிவை ஏற்படுத்தும். அது மிகவும் பயங்கரமானதாக இருக்கும். இது 3-வது உலகப் போராகஅமைந்தால் அது அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாகவும்,பேரழிவை … Read more