உ.பி.யில் முதல்கட்டத் தேர்தல் தொடங்கியது: 58 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்.10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், … Read more

'ஆப்பிள் ஒன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் ‘ஆப்பிள் ஒன்’ என்கிற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று ஆப்பிள் நிறுவனம், டைம் ஃப்ளைஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. வழக்கமாக பொது மேடையில் நடக்கும் புதிய கருவிகளின் அறிமுக நிகழ்ச்சி இம்முறை இணையம் மூலமாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் புதிய ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிளின் புதிய சேவையான ஃபிட்னஸ்+ ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ‘ஆப்பிள் ஒன்’. இந்த ஒரே திட்டத்தின் மூலம் ஆப்பிள் மியூஸிக், ஆப்பிள் … Read more

புதுக்கோட்டை பள்ளி சிறுவன் உயிரிழப்பு: பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எதிர்பாராத விதமாக உயிரிழந்த புதுக்கோட்டையை சேர்ந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், முதல்வர் ஸ்டாலின் சிறுவனின் பெற்றொர்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பாப்பான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து. இவரது 9 வயது மகன் நிதிஷ்குமார் அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் பள்ளிக்குச்சென்ற சிறுவன் வகுப்பில் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக ஆசிரியர்கள் … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று  67,084; தினசரி பரவல் விகிதம் 4.44%

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 67,084 என்றளவில் உள்ளது. அன்றாட கரோனா பரவல் விகிதமும் 4.44% என்றளவில் சரிந்தது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறிந்த பிறகு கரோனா பரவல் மீண்டும் அதிகரித்தது. நாடுமுழுவதும் 3-வது அலை ஏற்பட்டு நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்தன. பின்னர் பிப்ரவரி … Read more

முடிவுக்கு வருகிறது ஃபார்ம்வில் விளையாட்டு: டிசம்பர் 31க்குப் பிறகு ஃபேஸ்புக்கில் இருக்காது

ஃபேஸ்புக் பயனர்களிடையே மிகப் பிரபலமாக இருந்து வந்த ஃபார்ம்வில் விளையாட்டு வருகிற டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கப்படவுள்ளது. ஃபேஸ்புக் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வந்த சமயத்தில் கேண்டி க்ரஷ் போல பிரபலமான இன்னொரு எளிமையான விளையாட்டு ஃபார்ம்வில் (Farmville). விவசாயம் செய்து சம்பாதிப்பது தான் இந்த விளையாட்டின் எளிய அமைப்பு. பப்ஜி யுகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஃபார்ம்வில் பிடிக்காமல் போகலாம் ஆனால் ஃபார்ம்வில்லை உருவாக்கிய ஸிங்கா நிறுவனத்துக்கு அது மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. ஃப்ளாஷ் … Read more

6 பள்ளிக்கல்வி அதிகாரிகள் தேசிய விருதுக்கு தேர்வு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் 6 பேர் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல்நிறுவனம், கல்வி நிர்வாகத்தில் புதுமைகளையும், சிறந்த நடைமுறைகளையும் உருவாக்குவோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2018-2019-ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழகத்தில் இருந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இரா.சுவாமிநாதன், திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் … Read more

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: 58 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்.10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், … Read more

நேபாள நாட்டுப் பகுதிகள் ஆக்கிரமிப்பு: சீனா மீது புகார்

காத்மாண்டு: நேபாள நாட்டுப் பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அந்நாடு முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளது. நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை இமயமலையை ஒட்டி சுமார் 1,400 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைந்துள்ளது. இந்நிலையில், சீனா தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக புகார் கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான எல்லை இருக்கும் நிலையில், சீனாவின் அத்துமீறல் குறித்த நேபாள அரசின் குற்றச்சாட்டு குறித்த அறிக்கை பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் கிடைத்துள்ளது. மேற்கு … Read more

கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சவால்: பேடிஎம் உருவாக்கியுள்ள புதிய ப்ளே ஸ்டோர்

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனமே ப்ளே ஸ்டோர் போன்ற ஒரு தளத்தைத் தொடங்கியுள்ளது. ஆண்ட்ராய்ட் மினி ஆப் ஸ்டோர் என்கிற இந்தத் தளம் இந்தியாவில் செயலிகளை உருவாக்குபவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களது பொருட்களை மக்களிடம் எடுத்துச் செல்ல ஏதுவாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் தங்கள் தளத்தில் சூதாட்ட விதிமுறைகளை மீறியதாகக் கூறி ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலியை கூகுள் நீக்கியது. ஆனால், கூகுளின் ஒருதலைப்பட்சமான விதிமுறைகளுக்குக் கட்டுப்பட நிர்பந்திக்கப்படுவதாகவும், அது சந்தையில் … Read more

தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்குநோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, கட்டமைப்புமற்றும் வசதிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவமனை இயக்குநர் நாராயணசாமி, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆகி யோர் உடன் இருந்தனர். … Read more