நேபாளத்தில் 2வது நாளாக நீடிக்கும் போராட்டம் – இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை
புதுடெல்லி: நேபாளத்தில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரிகள் வெளியிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேபாளத்தில் போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், “நேபாளத்தில் நேற்று … Read more