நிர்வாணமாக விமான நிலையத்திற்குள் நுழைந்த நபர்! பரபரப்பு காணொளி

கஜகஸ்தானில் நபர் ஒருவர் நிர்வாணமாக விமான நிலையத்திற்குள் அத்துமீறி நழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கஜகஸ்தானின் அல்மாட்டி விமான நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. இணையத்தில் வெளியான வீடியோவில், நபர் ஒருவர் நிர்வாணமாக, அத்துமீறி விமான நிலையத்தின் இரும்பு தடுப்பு வேலி மீது ஏறி உள்ளே குதிக்கிறார். பின், விமான நிலையத்திற்குள் நிர்வாணமாக ஓடியுள்ளார். அந்த நபர் மது போதையில் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய … Read more

கொல்லப்பட்ட உக்ரைன் மேயர் ரஷ்யா தொடர்பில் கூறிய கடைசி வார்த்தை

உக்ரைன் பெண் மேயர் ஒருவர் ரஷ்ய துருப்புகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படும் முன்னர் தமது கிராம மக்களுக்கு அளித்த செய்தி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உக்ரைன் நகர மேயரான Olga Sukhenko ரஷ்ய துருப்புகளால் கடத்தப்பட்டு, அவரது சடலமானது கணவர் மற்றும் மகன் உடல்களுடன் பள்ளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. Olga Sukhenko வசித்துவந்த குடியிருப்பில் இருந்தே குடும்பத்துடன் ரஷ்ய துருப்புகளால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு, படுகொலை செய்து வனப்பகுதியில் ஒரு பள்ளத்தில் சடலத்தை வீசிச் சென்றுள்ளனர். ரஷ்ய துருப்புகளுக்கு … Read more

வெளிநாடு ஒன்றிலிருந்து பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட வாழைப்பழங்கள்: பரிசோதித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொலம்பியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த வாழைப்பழங்கள் அடங்கிய பார்சல்களைத் திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஆம், அந்த பார்சல்களுக்குள், வாழைப்பங்களுக்கு இடையே எக்கச்சக்கமான போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையும், தேசிய குற்றவியல் ஏஜன்சியும் இணைந்து மேற்கொண்ட ஆபரேஷனில் சிக்கிய, சுமார் 3.7 டன் எடை இருந்த அந்த போதைப்பொருளின் மதிப்பு, 302 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இது குறித்து பேசிய பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல், … Read more

பெண்களை தீவிரமாக பாதிக்கும் Endometriosis! இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க

 பெண்களை சமீப காலமாக தீவிரமாக பாதிக்கக் கூடிய பல நோய்களுள் எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) ஒன்றாகும். எண்டோமெட்ரியோசிஸ் இடப்படும் கருப்பையை பாதிக்கக் கூடிய ஒரு குறைபாடாகும். 1 ல் 10 பெண்கள் எண்டோமெட்ரியோசிஸால் பாதிக்கப்படுகின்றனர். இப்பாதிப்பு குறித்து பொதுவாக பெண்களுக்கு அவ்வளவு விழிப்புணர்வு இல்லை. அந்தவகையில் இந்தபாதிப்பு ஏன் ஏற்படுகின்றது? இதன் அறிகுறிகள் என்ன? இதிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதை இங்கே பார்ப்போம். Endometriosis என்றால் என்ன?  மாதவிடாயின் போது கருப்பையின் உள்ளார்ந்த புறணி உடைந்து துண்டுகளாக இரத்தப்போக்கின் … Read more

உயிருடன் இருக்கும்போதே வெட்டி எடுக்கப்படும் இதயம்: சீனாவில் அரங்கேறும் கொடூரம்

சீனாவில் கைதிகள் உயிருடன் இருக்கும் போதே அவர்களின் இதயத்தை மருத்துவர்கள் வெட்டி நீக்கி தண்டனை நிறைவேற்றப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தொடர்புடைய விவகாரத்தை அவுஸ்திரேலிய பல்கலைக்கழக அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டு அம்பலப்படுத்தியுள்ளது. சீனாவின் ரகசிய உறுப்பு அறுவடை வர்த்தகம் தொடர்பில் இதுவரை வெளிவராத பல முக்கிய ஆவணங்களை குறித்த ஆய்வில் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். சீனா முழுவதும் 56 மருத்துவமனைகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது, அந்த ஆய்வில் அம்பலமாகியுள்ளது. மரண காரணம் தொடர்பில்,சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானது … Read more

அஸ்வின் வீசிய Free hit பந்தில் இமாலய சிக்சரை பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக்! வைரலாகும் வீடியோ

ஐபிஎல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய ப்ரீ ஹிட் பந்தை தினேஷ் கார்த்திக் சிக்சருக்கு விளாசிய வீடியோ வைரலாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் 13வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிய நிலையில் பெங்களூர் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது தினேஷ் கார்த்திக் தான். அவர் 23 பந்துகளில் அதிரடியாக 44 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் பெங்களூர் அணியை வெற்றி பாதைக்கு … Read more

தெரியாம கூட இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு விடாதீர்கள்! ஆபத்தை ஏற்படுத்தும்

உணவே மருந்து என்பது முன்னோர்கள் சொன்ன பொக்கிஷமான வார்த்தைகள். ஏனெனில் உடலின் ஆரோக்கியம் என்பது முழுக்க முழுக்க நாம் சாப்பிடும் உணவுகளை நம்பித்தான் இருக்கிறது. ஆரோக்கியமாகவும், நோய் நொடிகள் இன்றியும் வாழ சமைக்கும் உணவுகளோடு சமைக்கும் பாத்திரத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? எந்தெந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது மற்றும் ஆபத்தானது? செம்பு உணவை சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் செம்பு பாத்திரங்கள் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. ஆனால் உப்பு அதிகமிருக்கும் உணவுகளை செம்பு பாத்திரத்தில் … Read more

உக்ரைனில் மாமியார் சடலத்தை கூட பார்க்காத மருமகள்! படகில் மாயமான 4 வயது மகன் குறித்து வந்த அதிர்ச்சி தகவல்

உக்ரைன் முழுவதும் தேடப்பட்டு வந்த 4 வயது சிறுவன் Sasha சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான். உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி போர் சண்டை தொடங்கிய நிலையில் ரஷ்ய வீரர்களால் உக்ரைன் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். பாட்டியுடன் படகில் ஏறி சென்ற சிறுவன் போர் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை பலரும் இழந்து தவிக்கின்றனர். அந்த வகையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 10ஆம் திகதி Sasha என்ற 4 … Read more

ரொனால்டோவாக மாறினால்…முதலில் மூளையை ஆய்வு செய்வேன்: விராட் கோலி!

நான் ரொனால்டோவாக மாறினால் எனது மூளையை முதலில் சோதித்து பார்ப்பேன் என இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பெங்களூரு அணியின் முன்னணி வீரர் விராட் கோலி தனக்கு பிடித்த விளையாட்டு வீரர் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டா என தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளின் மத்தியில் பெங்களூரு அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட போட்டோஷுட் நிகழ்ச்சியின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு விராட் … Read more

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய குடும்பம்: தந்தை மற்றும் மகன் பரிதாப உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய குடும்பத்தின் தந்தை மற்றும் மகன் திடீரென ஏற்பட்ட பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் ப்ளூ மவுண்டன்ஸ் தேசிய பூங்காவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில், நடைபாதையில் புஷ்வாக்கிங் செய்து கொண்டு இருந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் ஒன்பது வயது மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 50 வயதுடைய பெண் மற்றும் 14 வயதுடைய சிறுவன் என இருவர் மிக ஆபத்தான நிலையில் … Read more