உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்கிய 1500 'ஸ்டெர்லா' ஏவுகணைகள்!

ஜேர்மனி உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குவதாக உறுதியளித்தபடி, ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டதாக ஜேர்மன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் கூறினார். ஜேர்மன் பிரஸ் ஏஜென்சியின் அறிக்கைகளின்படி, ஜேர்மனியிலிருந்து 1,500 “ஸ்ட்ரெலா” ஏவுகணைகள் (anti-air missiles) மற்றும் 100 MG3 இயந்திர துப்பாக்கிகள் (machine guns), கூடுதலாக 8 மில்லியன் தோட்டாக்கள் வந்துள்ளன என்று உக்ரைனிய அரசாங்கத்தின் ஆதாரம் தெரிவிக்கிறது. MG3 இயந்திர துப்பாக்கிகள் Bundeswehr-ன் (ஜேர்மனியின் ஆயுதப் படைகள்) நிலையான துப்பாக்கியாகும், இது பல படைகளின் … Read more

லிவிவ் நகரில் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா! வெளியான வீடியோ ஆதாரம்

 உக்ரைனின் லிவிவ் நகரில் ரஷ்யா போர் விமானங்கள் குண்டு போட்டு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் நகரில் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதை அடுத்து கரும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. லிவிவ் நகரில் மூன்று குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், ஒரு தகவல் தொடர்பு கோபுரம் குறிவைக்கப்பட்டதாக நகர சபை மற்றும் ஆளுநர் தெரிவித்துள்ளனர். உக்ரேனியர்கள் பிரித்தானியா வருவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது! போட்டுடைத்த லண்டன் … Read more

IPL 2022: முதல் வெற்றியை பதிவுசெய்த கொல்கத்தா! சென்னைக்கு ஏமாற்றம்..

2022 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் … Read more

தோனியை கட்டிப்பித்துக்கொண்டு விடமறுத்த கோஹ்லி! வைரலாகும் வீடியோ

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 தொடங்குவதற்கு முன்னதாக மும்பையில் நடந்த பயிற்சி அமர்வின் போது விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி இருவரும் கட்டிப்பிடித்த காட்சி ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) ஆகிய இரு அணிகளும் DY Patil மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டன. இரு அணிகளின் பயிற்சியின் போது கோஹ்லி தோனியிடம் நடந்து சென்று அவருடன் கட்டிப்பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கோஹ்லி … Read more

பீஸ்ட் இஸ் பேக்! IPL வரலாற்றில் தோனி புதிய சாதனை

15-வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி அரைசதம் விளாசி 2 வருட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எம்எஸ் தோனிக்கு தற்போது வயது 40 ஆகிவிட்ட காரணத்தினால் அவரது பேட்டிங் பாதிக்கப்பட்டதாக பல விமர்சனங்கள் எழுந்தன. தோனி கடந்த 2021-ஆம் ஆண்டு சீசனில் 16 போட்டியில் விளையாடி 114 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தார். அதேபோல், 2020-ஆம் ஆண்டு சீசனில் தோனி 200 ஓட்டங்கள் மட்டுமே அடித்தார். இந்த … Read more

'மஞ்சள் ஜெர்சியில் வர ஆசைப்படுறேன்'' ரசிகர்களை கண்கலங்கவைத்த ரெய்னா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தான் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து மைதானத்திற்குள் செல்ல விரும்புவதாக கூறி ரசிகர்களை கண்கலங்கவைத்துள்ளார். 2022 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், 6 விக்கட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி சென்னையை வீழ்த்தியது. இந்த போட்டி தொடங்கும் முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் … Read more

IPL 2022: ஆரம்பமே சொதப்பல்., ரொம்ப அசால்டாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்., தோனி அரைசதம்

2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் போட்டியிலேயே படுமோசமாக சொதப்பி வருகிறது. 2008-ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்கியது. 2022- ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more

ரஷ்ய விமானங்களை கைப்பற்றிய பிரித்தானியா!

 பொருளாதார தடை விதிக்கப்பட்ட ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான இரண்டு தனியார் ஜெட் விமானங்கள் பிரித்தானியா அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன. ரஷ்ய பில்லியனரும், எண்ணெய் நிறுவன தொழிலதிபருமான Eugene Shvidler-க்கு சொந்தமான விமானங்களே கைப்பற்றப்பட்டுள்ளது. Eugene Shvidler-க்கு சொந்தமான ஜெட் விமானங்கள், பிரித்தானியாவின் Farnborough மற்றும் Biggin Hill விமான நிலையங்களில் மூன்று வாரங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. இந்நிலையில், உக்ரைனில் அப்பாவி மக்கள் இறக்கும் போது, புடினின் நண்பர்கள் ஆடம்பரங்களை அனுபவிக்க கூடாது என்று பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் கிராண்ட் … Read more

உக்ரேனியர்கள் பிரித்தானியா வருவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது! போட்டுடைத்த லண்டன் மேயர்

பிரித்தானியா வர முயற்சிக்கும் அகதிகளுக்கு விரோதமான சூழலை அரசாங்கம் உருவாக்கி வருவதாக லண்டன் மேயர் சாதிக் கான் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சாதிக் கான் கூறியாவது, லண்டன் பல்வேறு கலாச்சாரங்களை ஒருங்கிணைக்கு இடம், நகரம் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது. லண்டன்வாசிகள் காட்டும் குணத்திற்கும், நாடு முழுவதும் உள்ள பிரித்தானியர்கள் காட்டும் குணத்திற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. எங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், சிக்கலான விசா படிவங்கள், அகதிகள் பிரித்தானியா வருவதை மிகவும் கடினமாக்குகின்றன. ரஷ்யா அணு … Read more

ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பு! ஜப்பான் பிரதமர் பேட்டி

 ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக ஜப்பான் பிரதமர் Fumio Kishida தெரிவித்துள்ளார். உலகில் அணு ஆயுத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முதல் நகரமான ஹிரோஷிமாவுக்கு வருகை தந்த ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் Rahm Emanuel-ஐ வரவேற்ற போது Fumio Kishida இவ்வாறு கருத்து தெரிவித்தார். ஹிரோஷிமாவுக்கு வருகை தந்த Rahm Emanuel உடன் நகரின் அமைதி நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு Fumio Kishida சென்றார். பின் பேட்டியளித்த Fumio Kishida, ரஷ்யா அணு ஆயுதங்களைப் … Read more