உக்ரைனில் ஒரு நகரமே சிதைந்து கிடக்கும் பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் புகைப்படம்

 உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 31வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது. அதேசமயம் உக்ரைனின் மரியுபோல், கெர்சன் நகரங்களில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகிறது. மரியுபோல் நகரில் மோதல் தீவிரமடைந்துள்ளதால், நகர மக்கள் தண்ணீர், மின்சாரமின்றி தவித்துவருகின்றனர். 4 லட்சம் பேர் மரியுபோல் நகரில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ள உக்ரைன் அரசு, அவர்களை … Read more

பிரித்தானியாவில் காலியாக இருக்கும் ஏராளம் பணியிடங்கள்: தகுதியுடையோர் பயன்படுத்திக்கொள்ளலாம்

பிரித்தானியாவில் பல நிறுவனங்கள் அவசரமாக பணியாளர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன. பணியிடங்கள் வரலாறு காணாத அளவுக்கு காலியாக உள்ளன. தகுதியான பணியாளர்களைக் கண்டுபிடிக்க பணி வழங்குவோரும் திணறிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், பிரித்தானிய அரசும், பணி வழங்குவோரும் இணைந்து Way to Work என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார்களாம். 2022 ஜூன் மாதத்திற்குள் 500,000 பேருக்கு வேலை வாய்ப்பளிக்க இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாம். வேலை தேடுவோர், gov.uk/waytowork என்ற இணையதளத்தில் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு… https://www.dailymail.co.uk/news/article-10639471/Heres-UK-Governments-Way-Work-programme-help-right-now.html  Source link

வெளிநாட்டவர்களுக்கு அதிக அளவில் குடியுரிமை வழங்கிய நாடுகள் பட்டியலில் ஜேர்மனி: எத்தனையாவது இடத்தில் உள்ளது தெரியுமா?

ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிவர அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், 2020ஆம் ஆண்டில், 729,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை அளித்துள்ளன. அந்த ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கிய நாடுகள் எதெல்லாம் தெரியுமா? இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன்! ஆக, அதிக அளவில் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதலிடத்தில் இருப்பது இத்தாலி. அந்நாடு, 2020ஆம் ஆண்டில் 131,800 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. இரண்டாவது … Read more

குடியரசு ஆகிறதா கரீபியன் நாடுகள்? பிரித்தானிய இளவரசர் பரபரப்பு பேச்சு

கரீபியன் நாடுகள் தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கும் எந்தவொரு சுதந்திர முடிவுக்கும் ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக பிரித்தானிய இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் இருவரும் ராஜமுறைப் பயணமாக கரீபிய தீவு நாடுகளான பெலிஸ், பஹாமாஸ் மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், பஹாமாஸ் நாட்டின் தலைநகர் நாசாவ்-வில் உரையாற்றிய இளவரசர் வில்லியம், ”அடுத்த ஆண்டு நீங்கள் உங்களது 50வது சுகந்திர தினத்தை … Read more

இலங்கையில் அதிகரித்த தங்கத்தின் விலை ! இன்றைய நிலவரம் (26-03-2022)

 இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (26-03-2022) என்னவென்று தெரிந்து கொள்வோம்.   தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 570,719.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,140.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 161,100.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,470.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 147,700.00 … Read more

உக்ரைன் ஜனாதிபதியின் கடுமையான விமர்சனத்தைத் தொடர்ந்து சுவிஸ் நிறுவனம் எடுத்துள்ள முடிவு

உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சில நாட்களுக்கு முன் ரஷ்யாவில் தொடர்ந்து இயங்கி வரும் சுவிஸ் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான விமர்சனம் முன்வைத்தார். உக்ரைனில் தங்கள் பிள்ளைகள் கொல்லப்படும் நிலையிலும், இந்த சுவிஸ் நிறுவனங்கள் தொடர்ந்து ரஷ்யாவில் இயங்கிவருவதாக தெரிவித்தார் அவர். அவை ரஷ்யாவில் இயங்குவதை நிறுத்தவேண்டும் என்றும், அந்நாட்டு செல்வந்தர்களுடைய வங்கிக்கணக்குகளை சுவிஸ் வங்கிகள் முடக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் அவர். குறிப்பாக, நெஸ்ட்லே நிறுவனத்தை பெயர் குறிப்பிட்டே விமர்சித்திருந்தார் ஜெலன்ஸ்கி. இந்நிலையில், நேற்று … Read more

கனடா வழங்கும் இந்த பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு job offer கூட தேவையில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

கனடா பல ஆண்டுகளாக பணியாளர் பற்றாக்குறையால் தடுமாறி வருகிறது. அதுவும் பெருந்தொற்று காலத்தின்போது அந்த நிலை மேலும் மோசமாகிவிட்டது. அந்த இழப்பை ஈடுகட்ட, அடுத்த மூன்று ஆண்டு காலகட்டத்திற்குள், 1.3 மில்லியன் புலம்பெயர்வோரை வரவேற்க கனடா இலக்கு நிர்ணயித்துள்ளது கனடா. அப்படி புலம்பெயர்வோருக்காக கனடா உருவாக்கியுள்ள புலம்பெயர்தல் வழிமுறைகள் மற்றும் பணி அனுமதிகளில் Open Work Permit என்பதும் ஒன்று. இந்த Open Work Permit என்னும் பணி அனுமதி, தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு (Labour … Read more

உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது: நாள் குறித்த ரஷ்யா

உக்ரைன் மீதான படையெடுப்பு 30 நாட்களை கடந்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியின் நாஜி படைகளை ரஷ்ய துருப்புகள் வென்ற மே 9ம் திகதி, உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டு தோறும் மே 9ம் திகதியை போர் வெற்றி விழாவாக ரஷ்யா கொண்டாடி வரும் நிலையில், தற்போது, அதே நாளில் … Read more

உக்ரைன் வந்தடைந்த ஜெர்மன் போர் ஆயுதங்கள்: பத்திரிக்கை நிறுவனம் தகவல்!

ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு ஆதரவாக ஜெர்மனி அனுப்பிவைத்த 1,500 “Strela” விமான எதிர்ப்பு ஏவுகணைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) உக்ரைனை வந்தடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில்-ரஷ்யா 31வது நாளாக தாக்குதல் நடத்தியும் இன்னமும் தலைநகர் கீவ் மற்றும் துறைமுக நகரான மரியுபோல் ஆகிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்ற முடியாமல் திணறிவருகிறது. பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும் தீர்வுகள் மற்றும் சமாதான உடன்படிக்கைகள் ஏதும் இதுவரை ஏற்படாததால் வரும் நாள்களில் இந்த நகரங்களின் மீதான தாக்குதலலை ரஷ்ய … Read more

ரஷ்யாவை சமாளிக்க புதிய புரட்சிகர திட்டம்: உக்ரைன் துணை பிரதமர் அதிரடி அறிவிப்பு!

உக்ரைனை அழிக்க ரஷ்யா டாங்கிகளை பயன்படுத்துகிறது, ஆனால் நாங்கள் புரட்சிகரமான பிளாக்-செயின்(blockchain) தொழில்நுட்பத்தை நம்பி இருக்கிறோம் என உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் மைக்கைலோ ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா தனது போரை தொடங்கிய நான்கு நாள்களிலேயே அந்த நாட்டின் ராணுவ நிதியை அதிகரிக்கும் நோக்கில், பழமையான போர் நிதி சேகரிப்பு முறையான நாட்டின் சொத்து கடன் பத்திரங்களை வெளியிட்டது. அந்தவகையில், தற்போது உக்ரைனின் ராணுவ நிதியை மேலும் மேம்படுத்தும் நோக்கியில் புதிய மற்றும் புரட்சிகரமாக முறையில் … Read more