ரஷ்யாவால் மொத்தமாக சிதைக்கப்பட்ட நகரம்: பட்டினியால் சாவின் விளிம்பில் மக்கள்

உக்ரைனின் முக்கிய துறைமுக நகரம் ரஷ்ய துருப்புகளால் 90% அளவுக்கு சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள மக்கள் பட்டினியால் சாவின் விளிம்பில் சிக்கியுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்ன் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய துருப்புகள் சுற்றிவளைத்து கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது. இதுவரை 90% அளவுக்கு ரஷ்ய துருப்புகளால் மரியுபோல் நகரம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய தாக்குதலுக்கு அஞ்சி நாடக அரங்கம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது முன்னெடுத்த தாக்குதலில் சுமார் 300 பேர்கள் கொத்தாக கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் தகவல் … Read more

உக்ரைனில் 7 ரஷ்ய ஜெனரல்கள் கொலை

உக்ரைன் போரில் இதுவரை 7 ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர் என்று மேற்கத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். மேற்கத்திய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை உக்ரைனில் நடக்கும் போரில் இதுவரை ஏழு ரஷ்ய ஜெனரல்கள் கொள்ளத்தனர் மற்றும் மற்றொருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டனர். சமீபத்தில் ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டத்தில் 49-வது ஒருங்கிணைந்த ஆயுத இராணுவத்தின் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ஸ்டெவ் (Yakov Rezanstev) இறந்தார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். Yakov Rezanstev இதற்கிடையில், 6-வது ஒருங்கிணைந்த … Read more

வடகொரியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா!

உலகின் மிக பயங்கரமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தற்காக வடகொரியா நாட்டின் நிறுவனங்களின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்கா ஏற்கெனவே விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனிடையே கொரோனா தொற்று பரவல் அந்நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இருப்பினும் அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாக மாற வேண்டும் என்ற நோக்கிலும் அமெரிக்காவுக்கு அழுத்தம் தரும் நோக்கிலும் வட கொரியா அடிக்கடி ஏவுகணைகளை … Read more

பேருந்தில் மது குடித்த பள்ளி மாணவ-மாணவிகள்! வைரலாகும் வீடியோ

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. செங்கல்பட்டில் திருக்கழுக்குன்றத்திலிருந்து தச்சூருக்கு செல்லும் வழியில் பேருந்து ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட வீடியோ என்பது காவல்துறையினர் தெரிவிக்கும் தகவலாக இருக்கிறது. இந்த வழியில் பேருந்து சென்று கொண்டிருக்க, கும்பலாக சில மாணவர்கள் – மாணவிகள் என இரு பாலினரும் பேருந்துக்குள் வைத்து மது பாட்டில்களை திறந்து, குடிக்க ஆரம்பித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட கல்வி … Read more

சொந்த படையினரால் டாங்கி ஏற்றி கொல்லப்பட்ட ரஷ்ய தளபதி!

உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் தனது சொந்த படையினரால் டாங்கியால் இடித்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய இராணுவத்தில் 37-வது மோட்டார் ரைபிள் படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் யூரி மெட்வடேவ் (Colonel Yuri Medvedev), அவரது பிரிவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கோபமடைந்த அவரது படையினரால் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு தாக்கப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் ஆரம்ப அறிக்கையின்படி கர்னல் மெட்வெடேவ் “கொல்லப்பட்டதாக” கூறப்பட்டது, ஆனால் அவர் காலில் காயம் அடைந்து பெலாரஸுக்கு வெளியேற்றப்பட்டார் … Read more

உங்களுக்கு வறண்ட சருமமா? இதற்கு நிவாரணம் பெற இதோ சில டிப்ஸ்!

பொதுவாக ஒருவருடைய சருமம் மற்றொருவருடைய சருமம் போல ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சாதாரண சருமம், மென்மையான சருமம், எண்ணெய் பிசுக்குள்ள சருமம், வறண்ட சருமம் என்று சரும வகைகள் நீண்டு கொண்டே செல்லும்.  அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்கள் எவ்வளவுதான் மேக் அப் போட்டாலும், தோல் வறட்சியுடன் இருப்பது, பொலிவு இழந்த தோற்றத்தைக் கொடுக்கும்.  இதற்கு தனிப்பட்ட முறையில் பராமரிப்பு கொடுக்கும் பொழுது தான் நிவாரணம் கிடைக்கும். அந்தவகையில் வறண்ட சருமம் இருப்பவர்கள் என்ன மாதிரியான பராமரிப்புக்களை … Read more

பஹாமாஸில் படகு போட்டிக்கு கலக்கலான உடையில் வந்த கேட், வில்லியம்! வைரலாகும் புகைப்படங்கள்

கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் பஹாமாஸில் படகுப்போட்டியில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகிவருகிறது. பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம் ஜூபிலியை குறிக்கும் வகையில் கரீபியன் தீவுகளுக்கு பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் ஆகிய இருவரும் சுற்றுப்பயணம் செய்துள்ளனர். கொரோனா தோற்று காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு கரீபியன் தீவான பஹாமாஸில் பிரபலமான Regatta படகுப்போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், பஹாமாஸில் இன்று நியூ பிராவிடன்ஸில் உள்ள மாண்டேகு … Read more

'முடிந்தது முதல் கட்ட நடவடிக்கை' உக்ரைன் போரில் ரஷ்யா பரபரப்பு அறிக்கை

உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் முதல் கட்டம் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாகவும், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக “விடுதலை” செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது, ஆனால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் சளைக்காமல் பதில் தாக்குதல் கோட்னுத்துவரும் நிலையில், ரஷ்யா அதன் வரையறுக்கப்பட்ட இலக்குகளை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது. ரஷ்ய செய்தி நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ரஷ்ய … Read more

2021-ல் 17 லட்சம் உயிரினங்களை கொன்று குவித்த திட்டம்! அமெரிக்காவில் வெளியான அதிச்சியூட்டும் அறிக்கை

அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆம் ஆண்டில் 1.75 மில்லியன் விலங்குகள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் அறிக்கை வெளியாகியுள்ளது. விவசாய உற்பத்தி, அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் மனித ஆரோக்கியத்தை பாதுகாக்க விலங்குகளை கொன்று வருவதாக வனவிலங்கு சேவைகள் தெரிவிக்கின்றன. ஒரு மணிநேரத்திற்கு சுமார் 200 உயிரினங்கள் என்ற வீதத்தில், 2021-ஆம் ஆண்டில் அமெரிக்கா முழுவதும் 1.75 மில்லியன் (17.5 லட்சம்) விலங்குகளை கொன்றதற்கு அமெரிக்க விவசாயத் துறையின் கீழ் உள்ள ஒரு பிரிவு பாதுகாப்பு குழுக்களின் … Read more

புடின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இங்கிலாந்து வந்தடைந்துள்ள விசேஷ விமானம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரஸ்ஸல்ஸ் வந்துள்ள நிலையில், புடின் ஒருவேளை அணு ஆயுதத்தை பிரயோகிக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அணுக்கதிர் வீச்சைத் தாக்குப்பிடிக்கக்கூடிய ’பறக்கும் பென்டகன்’ என்று அழைக்கப்படும் விசேஷ விமானம் பிரித்தானியா வந்தடைந்துள்ளது. அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த அந்த விமானம், ஒரு வேளை அணு ஆயுத தாக்குதல் துவங்கினால், அந்த நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி அந்த விமானத்தில் பறந்தவண்ணம் அமெரிக்க அணு நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் அணு ஆயுதங்கள் ஏவும் … Read more