உக்ரைன்-ரஷ்ய போரின் 30-வது நாள்: இன்றைய முக்கிய தகவல்கள்…

Courtesy: BBCNews உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 5-வது வாரமாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், போரின் 30-வது நாளான இன்று பதிவான முக்கிய செய்திகள் இங்கே தொகுத்து வழங்கபட்டுள்ளன. உக்ரைனின் துறைமுக நகரமாக மரியுபோலில், அரங்கத்தில் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்குப்பகுதியில் இழந்த நகரங்களையும் தற்காப்பு நிலைகளையும் உக்ரைன் படைகளால் மீட்க முடிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் … Read more

உக்ரைனில் மனிதாபிமான உதவி பெற வரிசையில் காத்திருந்த மக்கள் மீது ராக்கெட் தாக்குதல்!

உக்ரைனில் மனிதாபிமான உதவி பெற வரிசையில் காத்திருந்த மக்கள் மீது ராக்கெட் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தின் வீடியோவை உக்ரைனின் குடிமை உரிமைகளுக்கான மையத்தின் தலைவர் Oleksandra Matviichuk தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கார்கிவ் குடியிருப்பாளர்கள் மனிதாபிமான உதவியைப் பெற்றுக் கொண்டிருந்த கார்கிவில் உள்ள நோவா போஷ்டா அஞ்சல் துறை அலுவலகம் மீது ரஷ்யர்கள் தாக்குதல் நடத்தினர். வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது ராக்கெட் தாக்கியது என வீடியோவுடன் Oleksandra Matviichuk … Read more

தடை விதிக்கமாட்டோம்… ரஷ்யா தொடர்பில் சுவிஸ் திட்டவட்டமாக அறிவிப்பு

சுவிட்சர்லாந்து தனது பிரதேசத்தில் ரஷ்ய ஊடகங்களை தடை செய்யாது என்று அந்நாட்டு அரசாங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து 30வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது படையெடுக்கும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பொருளாதார தடைகளால் ரஷ்யா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. உக்ரைனில் மனிதாபிமான உதவி பெற வரிசையில் காத்திருந்த மக்கள் மீது ராக்கெட் … Read more

அதிசாரமாக இடப்பெயரவுள்ள குரு! விபரீத ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார்?

Courtesy: oneindia குருபகவான் இன்னும் சில நாட்களில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் ஏற்படப்போகிறது . அவர்கள் யார் யார் என பார்ப்போம். மேஷம் மேஷ ராசிக்கு 9,12க்குடைய குரு 12ல் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இந்த குரு பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தர இருக்கிறது. 12க்கு உடையவன் 12ஆம் வீட்டில் அமரப்போவது விபரீத ராஜயோகத்தைத் தரப்போகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு … Read more

உக்ரைன் மக்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா: உள்விவகாரத்துறை அதிரடி அறிவிப்பு!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலில் இருந்து தப்பித்து பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள 20,000 குடும்பங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான விசா வழங்கபட்டு இருப்பதாக பிரித்தானியாவின் உள்விவகாரத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தீவிர தாக்குதலில் இருந்து உயிர்களை பாதுகாத்து கொள்வதற்காக சுமார் 3.7 மில்லியன் மக்கள் வெளியேறி இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உக்ரைனை விட்டு வெளியேறிய பொதுமக்கள் போலந்து, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர், மேலும் சிலர் … Read more

ஐரோப்பிய நாடு மீது புடின் அணு ஆயுத தாக்குதலை நடத்தக்கூடும்! முன்னாள் நேட்டோ தளபதி எச்சிரிக்கை

 ஐரோப்பிய நாடும், நேட்டோ உறுப்பினர் நாடான போலந்து மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என முன்னாள் நேட்டோ தளபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 30வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதற்கு மத்தியில் ஜெனரல் வெஸ்லி கிளார்க் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜெனரல் வெஸ்லி கிளார்க் கூறியதாவது, ரஷ்ய தலைவர் நேட்டோவைத் தடுக்க குறைந்த சக்தி கொண்ட அணு ஆயுதத்தை பயன்படுத்தக்கூடும். உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்யா! வெளியான வீடியோ … Read more

புடின் பதவிக்கு வந்துள்ள ஆபத்து… புத்திசாலித்தனமாக காய் நகர்த்தும் படலம் துவக்கம்

சோவியத் யூனியனின் அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலினுக்கு 1953ஆம் ஆண்டு கடுமையான பக்கவாதம் தாக்கியபோது, அவருக்கு நெருக்கமான நான்கு மூத்த அதிகாரிகள் அவரைக் காண ஓடோடி வந்தார்களாம். பேருக்குதான் அவர்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமனாவர்கள். உண்மையில், அவர் உயிருடன் இருப்பதைக் காண அவர்களில் யாருக்குமே விருப்பம் இல்லை. ஆனாலும், அவர் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்ற பயம் வேறு ஆட்டிப்படைக்க, அப்போதைய இரகசிய பொலிஸ் துறை தலைவரான Lavrentiy Beria, ஏன் இப்படி நடுங்குகிறீர்கள், தோழர் ஸ்டாலின் ஆழ்ந்த … Read more

விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி இறந்துவிட்டாரா? ரஷ்யாவில் சர்ச்சையை கிளப்பிய தகவல்

ரஷ்யாவின் முக்கிய அரசியல்வாதியாக கருதப்பட்டு வந்த விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி இறந்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன. ரஷ்யாவின் மிக முக்கிய லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் முக்கிய அரசியல்வாதியும், டுமா மாநில நிர்வாகியுமான விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி இறந்து விட்டதாக தகவல் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், இதனை ரஷ்யாவின் செனட்டர் அலெக்சாண்டர் ப்ரோனுஷ்கின்(Alexander Pronushkin) உறுதிப்படுத்தி இருந்தார். இந்தநிலையில், டுமா மாநில நிர்வாகி விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி இறந்து விட்டதாக வெளியான தகவலை டுமா மாநில தலைவர் வியாசஸ்லாவ் வோலோடின்(Vyacheslav … Read more

உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்யா! வெளியான வீடியோ ஆதாரம்

 உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது 30வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, உக்ரேனிய பிராந்தியத்தில் மேலும் 4 கிமீ முன்னேறியுள்ளதாக தெரிவித்தது. அதுமட்டுமின்றி உக்ரைனின் Batmanka, Mikhailovka, Krasny, Partizan, Stavki மற்றும் Troitskoye பகுதிகளை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், … Read more

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இன்றைய நிலவரம் (25-03-2022)

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (25-03-2022) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 570,719.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,140.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 161,100.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,470.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 147,700.00 21 … Read more