சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை: காரணம் இதுதானா?

சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நேற்று காலை 7.00 மணியளவில், சுவிட்சர்லாந்தின் Montreux நகரிலுள்ள ஏழு தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மாடியிலிருந்து, பிரான்ஸ் நட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஐந்து பேர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களில் அந்தக் குடும்பத்தின் தலைவரான 40 வயது ஆண், அவரது மனைவியான 41 வயது பெண், … Read more

ரஷ்யாவிடம் பிணைக்கைதியாக வர தயார்: உக்ரைன் போலீஸ் அதிகாரி அறிவிப்பு

 மரியுபோல் நகரில் இருந்து பத்திரமாக குழந்தைகளை வெளியேற்ற, ரஷ்ய ராணுவத்திடம் பிணைக்கைதியாக வர உக்ரைன் பொலிஸ் ஜெனரல் வியாசஸ்லாவ் அப்ரோஸ்கின் (Vyacheslav Abroskin) முன்வந்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் கிட்டத்தட்ட 30 நாள்களை தொட்டிருக்கும் இந்த வேளையில், உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய ராணுவத்தினர் முழுமூச்சுடன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தீவிர தாக்குதலுக்கு முன்னதாக, மரியுபோல் நகரில் உள்ள அனைத்து உக்ரைன் ஆயுதப்படைகளும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடையுமாறு ரஷ்யா … Read more

நேட்டோ இனி வேடிக்கை பார்க்காது: ரஷ்யாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ நாடுகள் வேடிக்கை பார்க்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறித்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் ஜோ பைடன் குறிப்பிடவில்லை என்றே தெரிய வந்துள்ளது. ஐரோப்பாவில் தமது நட்பு நாடுகளின் தலைவர்களுடன் கலந்தாலோசனையில் பங்கேற்க சென்றுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவை காட்டமாக விமர்சித்துள்ளார். ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி … Read more

ரஷ்யப் படைகள் உக்ரைன் படைகளால் சுற்றி வளைப்பு?: உக்கிரமாக திருப்பி அடிக்கும் உக்ரைன்

உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற்றி வளைக்கப்படும் அபாயத்துக்குள்ளாகியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யப் படைகளை உக்ரைன் உக்கிரமாக திருப்பித் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் தலைநர் Kyivக்கு மேற்கே உள்ள Makariv மற்றும் Moschun என்னும் இரு நகரங்களை உக்ரைன் படைகள் ரஷ்யப்படைகளிடமிருந்து மீட்டிருக்கலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்படி அந்த நகரங்கள் உக்ரைன் வீரர்களால் மீட்கப்பட்டிருக்குமானால், ஏற்கனவே Bucha மற்றும் … Read more

ஐரோப்பாவின் மெத்தனம்… உக்ரேனிய மக்களின் அவஸ்தைக்கு காரணம்: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தற்போது நான்கு வாரங்களை கடந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் எந்த நடவடிக்கைகளையும் தாமதப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய கவுன்சில் உச்சி மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் ஏற்பட்ட சேதங்களை பட்டியலிட்ட ஜெலென்ஸ்கி, இந்த இக்கட்டான சூழலில் தங்களுக்கு ஆதரவளித்துவரும் ஐரோப்பாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யாவின் படையெடுப்பை தடுக்க ஐரோப்பா … Read more

விளாடிமிர் புடினின் மொத்த சொத்துமதிப்பு இதுதான்: அம்பலமாகும் இரகசியங்கள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தனிப்பட்ட இரகசியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அ,ம்பலமாகிவருகின்றன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்து நான்கு வாரங்களாகியுள்ளன. மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றி, தங்கள் பலத்தை நிரூபிப்போம் என களமிறங்கிய ரஷ்யா தற்போது 30 நாட்கள் கடந்தும் உக்ரைனில் போரிட்டு வருகிறது. ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராகவும், அவருக்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள், நிறுவனங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவர் மீதும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் … Read more

பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை திருடும் செயலி! போனில் இருந்து உடனே டெலிட் பண்ணுங்க

கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் ஒரு செயலி ஆபத்தானது என தெரியவந்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் பல ஆயிரம் செயலிகள் கொட்டி கிடக்கின்றன. பெரும்பான்மையான செயலிகள் இலவசமாக கிடைப்பதால் நாமும் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். ஆனால் இத்தகைய செயலிகளால் நமது பாதுகாப்பு பறிபோகும் அபாயம் உள்ளது என்பதை உணராமல் இருக்கிறோம். அந்த வகையில் ப்ரேடோ என்ற நிறுவனம் craftsart cartoon photo tools என்ற செயலி குறித்து எச்சரித்துள்ளது. நமது புகைப்படத்தை கார்டூனாக மாற்றித்தரும் இந்த செயலியை … Read more

கேப்டன் பதவியை துறந்த தோனியை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத ரெய்னா! புதிய கேப்டனுக்கு வாழ்த்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் ரவீந்திர ஜடேஜாவுக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 15வது சீசன் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகவுள்ளார், அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜா ஏற்கவுள்ளார். இது குறித்து சுரேஷ் ரெய்னா டுவிட்டர் பதிவில், என் சகோதரனுக்கு (ஜடேஜா) முற்றிலும் மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் வளர்ந்து வந்த ஒரு அணியின் … Read more

எரிவாயு விலையை சமாளிக்க ஜேர்மனி நடவடிக்கை!

Courtesy: DW ஜேர்மனியில் அதிக எரிசக்தி விலைகளை சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஜேர்மனியில் உள்ள மக்கள் உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பினால் அதிகரித்த எரிசக்தி செலவினங்களை சமாளிக்க உதவும் தற்காலிக நடவடிக்கைகளுக்கு ஜேர்மன் கூட்டணி அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் 300 யூரோ மதிப்பில் ஒரு முறை எரிசக்தி வரி நிவாரணம் செலுத்துதல், எரிபொருளுக்கான வரியில் மூன்று மாதக் குறைப்பு மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான மாதாந்திர டிக்கெட்டுகளின் விலையில் மூன்று மாதக் குறைப்பு ஆகியவை … Read more

முதன்முறையாக மனித இரத்தத்தில் காணப்பட்ட பிளாஸ்டிக்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் – 0.2 இன்ச் (5 மிமீ) விட்டம் கொண்ட சிறிய பிளாஸ்டிக் துகள்கள் முதல் முறையாக மனித இரத்தத்தில் கண்டறியப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் 22 ஆரோக்கியமான மனிதர்களிடமிருந்து இரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில், ஒரு அங்குலத்தில் 0.00002 மடங்கு சிறிய துகள்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர. 22 தன்னார்வலர்களில் 17 பேர் (77.2 சதவீதம்) அவர்களின் இரத்தத்தில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் – இது ‘மிகவும் கவலைக்குரியது’ என்று விவரிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் பலமுறை … Read more