இரசாயன தாக்குதல் நடத்த சாக்குப்போக்கை தேடும் ரஷ்யா: நேட்டோ தலைவர் எச்சரிக்கை!

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் வியாழனன்று உக்ரைனை இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களால் தாக்குவதற்கு ரஷ்யா ஒரு சாக்குப்போக்கைக் கண்டுபிடிக்கக்கூடும் என்று எச்சரித்தார். பொது மக்கள் மீது பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு நேட்டோ தலைவரின் கருத்துக்கள் வந்துள்ளன. நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “உக்ரைன், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகிவிட்டதாகக் குற்றம் சாட்டி சில வகையான … Read more

சுவிட்சர்லாந்தில் 6 பில்லியன் டொலர் மதிப்புள்ள ரஷ்ய சொத்துக்கள் முடக்கம்!

உக்ரைனுக்குள் ரஷ்ய இராணுவம் படையெடுத்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரஷ்யர்களின் சொத்துக்களை அடையாளம் கண்டு முடக்க சுவிஸ் வங்கிகள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள சுமார் 5.75 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் ($6.17 பில்லியன்) மதிப்புள்ள ரஷ்ய சொத்துக்களை சுவிஸ் அரசாங்கம் முடக்கியுள்ளது என பொருளாதார விவகாரங்களுக்கான செயலகம் (SECO) பொருளாதாரத் தடைகளை மேற்பார்வையிடும் நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அதில், சுற்றுலா விடுதிகளாக செயல்பட்ட மண்டலங்களில் உள்ள பல சொத்துக்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், … Read more

நண்பர்களுடன் பிரான்சுக்கு சென்ற பிரித்தானியருக்கு நேர்ந்த பரிதாபம்!

பிரான்சில் பேஸ் ஜம்பிங் விளையாட்டில் ஈடுபட்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் மேற்கு நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள நியூன்ஹாம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபர், தனது 5 நண்பர்களுடன் பிரான்சுக்கு விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். பேஸ் ஜம்பிங் வீரரான அவர் தென்கிழக்கு பிரான்சில் போர்ன் கோர்ஜஸில் உள்ள போர்னிலன் (Bournillon) குன்றிலிருந்து குதித்துள்ளார். ஆனால் அவரது பாராசூட் சரியான நேரத்தில் திறக்கப்படவில்லை என்பதை அவரது நண்பர்கள் கவனித்துள்ளார். அவர்கள் எச்சரிக்கை ஒலி … Read more

தடைசெய்யப்பட்ட ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா!

Courtesy: BBCNews தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது. வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) 2017-க்குப் பிறகு முதல் முறையாக சோதித்துள்ளதாக தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணை 1,100 கி.மீ. தூரம் (684 மைல்கள்) ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பறந்த பிறகு ஜப்பானிய கடல் பகுதியில் விழுந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர். அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் … Read more

சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்த குடும்பம்: பகீர் கிளப்பிய சம்பவம்

சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் நால்வர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ள நிலையில், ஐந்தாவது நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். Montreux பகுதியில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டிடத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வாட் மாநில பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் உறுதி செய்துள்ளதுடன், விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் பொலிசார் … Read more

இனி ஆரஞ்சு பழத்தின் தோலை தூக்கி வீசாதிங்க.. முகத்திற்கு இப்படி கூட பயன்படுத்தலாம்!

பொதுவாக ஆரஞ்சு பழம் இயற்கையாகவே உடலுக்கு பலவகையான நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக அதன் பலமே விட்டமின் சி தான். ஆனால் அது பழத்தைக் காட்டிலும் தோலில்தான் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் கசப்புத் தன்மையால் சாப்பிட முடியாத காரணத்தால் இதனை பலரும் தூக்கி எறிந்து விடுகிறார்கள். உண்மையில் இதன் தோல் சருமத்திற்கு பலவகையில் நன்மை தருகின்றது.      தற்போது ஆரஞ்சு பழ தோலினை எப்படி எல்லாம் முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.  ஆரஞ்ச் … Read more

மூட்டுவலியால் ரொம்ப அவஸ்தைப்படுறீங்களா? இதனை எளிய முறையில் போக்க இதோ சில எளிய மருத்துவங்கள்

 பொதுவாக இன்றைக்கு பலரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். சிலர் இளம் வயதிலேயே கூட மூட்டுவலிக்கு உள்ளாகிறார்கள். மூட்டுகளில் வலி உண்டானால் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற அன்றாட வேலைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. ஏன் நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்படுபவர்கள். இவற்றை ஆரம்பத்திலே சரி செய்ய ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் … Read more

ஐரோப்பிய நாட்டில் ஆயுதங்களை குவிக்கும் ரஷ்யா.. புடினின் திட்டத்தை போட்டுடைத்த உக்ரைன் தளபதி

 கீவ் நகரை கைப்பற்றுவதற்கான ரஷ்யாவின் திட்டத்தை உக்ரைன் தளபதி வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 29வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடும், புடினின் நட்பு நாடான பெலராஸ் மற்றும் கிரிமியாவுக்கு கூடுதல் ராணுவ உபகரணங்களை ரஷ்ய அனுப்பியுள்ளதாகவும், உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றிவளைக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரேனிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். இதனிடையே, கீவ் சுற்றி வளைக்க  ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் மற்றும் Donetsk, … Read more

பெண்களே ஹார்மோன் சுரப்பை சீராக வைத்து கொள்ள வேண்டுமா? அப்போ அவசியம் இந்த உணவுகளை எடுத்துகோங்க

  பொவதுவாக உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன. ஹார்மோன்களின் சுரப்பு சீராக அமையாதபோது உடலில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்திலும், கர்ப்பக்காலத்திலும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இவற்றை எளியமுறையில் சமாளிக்க ஒரு சில எளியவழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், அவகோடா எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சுத்தமான நெய் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்தவற்றை பயன்படுத்தலாம்.  ஆளி விதை, சியா எனும் சப்ஜா விதை, நார்ச்சத்து … Read more

உக்ரைனில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது! ரஷ்யா தகவல்

  உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Maria Zakharova, உக்ரேனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடங்கி சரியாக ஒரு மாதம் ஆகிறது என கூறினார். உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று அழைக்கப்படும் மோதல்கள் திட்டமிடப் படி நடந்து வருகிறது, அறிவிக்கப்பட்ட அனைத்து இலக்குகளும் அடையப்படும் என்று கூறியுள்ளார். மேலும், ஏற்கனவே உக்ரைன் படைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் … Read more