திடீரென பின்னாலிருந்து யாரோ தாக்கியதுபோல் உணர்ந்த இளம்பெண்: திரும்பியபோது காத்திருந்த அதிர்ச்சி

இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.  அப்போது, திடீரென பின்னாலிருந்து தன் தலையில் யாரோ தாக்கியது போல உணர்ந்த Hattie Atkinson Smith (27) என்னும் அந்த இளம்பெண், திடுக்கிட்டுத் திரும்பியுள்ளார். பார்த்தால், ராட்சத பறவையொன்று அவரது பின்னலைப் பிடித்து விழுங்க முயன்றுகொண்டிருந்திருக்கிறது. 6 அடி நீளமுள்ள அந்த பறவை தன் தலையை விழுங்க முயன்றதைக் கண்ட Hattie, மீண்டும் அதௌ தாக்கலாம் என்று அஞ்சி, அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறார். பின்னர் வீட்டுக்குச் சென்று, இணையத்தில் … Read more

லட்சக்கணக்கான மக்கள் சாகும்வரை காத்திருக்காதீர்கள்., மீண்டும் நேட்டோவிடம் கெஞ்சும் உக்ரைன் அதிபர்

உக்ரைனில் No Fly Zone அறிவிக்குமாறு ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மீண்டும் நெட்டோவோடம் கோரிக்கை வைத்துள்ளார். மூன்றாம் உலகப்போர் தொடங்கும் வரை பொறுமையாக காத்திருந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோகும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி எச்சரித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைனால் மட்டும் தனித்து நின்று நிறுத்தமுடியாது, அதற்கு நேட்டோ நாடுகளின் உதவி வேண்டும் வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார். மேற்குலகம் முன்வந்து உக்ரைன் வான்பரப்பில் No Fly Zone சாத்தியம் என்று அவர் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார். … Read more

ரஷ்ய டாங்கிகளை ஓடஓட சுட்டுவீழ்த்திய உக்ரைன் பெண்கள்: பரபரப்பு வீடியோ காட்சிகள்

உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்ய ராணுவப்படைகளின் டாங்கிகளை ஓடஓட சுட்டுவீழ்த்தி அந்தநாட்டின் பெண்கள் பாதுகாப்பு படை மிரட்டியுள்ளது. உக்ரைனில் ரஷ்யா இன்றுடன் 15வது நாளாக தனது தாக்குதலை நடத்திவரும் நிலையில், உக்ரைன் படை வீரர்களின் தொடர் தடுப்பு தாக்குதலால் ரஷ்ய ராணுவத்தின் முன்நகர்வு பெரும்பாலான இடங்களில் நிதானமடைந்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் ரஷ்ய போருக்கு உக்ரைனில் எதிர்ப்பு அதிகரித்து கொண்டு வருவதால், ஆண்கள் பெண்கள் மற்றும் முதியவர்கள் என பெருவாரியான மக்கள் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துவருகின்றனர். Ювелірна робота нашої … Read more

உலகநாடுகளுக்கு உணவு ஏற்றுமதியை நிறுத்திய உக்ரைன்: ஐரோப்பிய நாடுகளின் விலைவாசி உயரும் அபாயம்.

ரஷ்ய போரின் விளைவாக, உக்ரைனில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமை, ஓட்ஸ், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் என அனைத்தையும் தடைசெய்வதாக அந்த நாட்டின் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா தனது போரை கடந்த 24ம் திகதி தொடங்கியது. இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை போன்ற இன்னல்களை உக்ரைன் இனிவரும் நாள்களில் பயங்கரமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம் … Read more

ஐரோப்பாவுக்கு ஆபத்து! செர்னோபில் அணு உலையை உடனடியாக சீரமைக்க போர்நிறுத்தம் கோரும் உக்ரைன்

கதிர்வீச்சு அபாயத்திற்கு மத்தியில் செர்னோபில் மின்பாதையை சரிசெய்வதற்காக உக்ரைன் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, செர்னோபில் அணுமின் நிலையம் புதன்கிழமை முற்றிலுமாக மூடப்பட்டது. அப்பகுதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமா நிலையத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும், இது அணுசக்தி பொருட்களை குளிர்விப்பதற்கான அமைப்புகளை பாதிக்கலாம் என்றும் உக்ரைன் கூறியுள்ளது. மின் தடைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் புதிய கவலைகளை எழுப்புகிறது. உலகின் மிக மோசமான … Read more

தொப்பை முதல் புற்றுநோய் வரையுள்ள நோய்களை குணமாக்க வேண்டுமா? வெந்தயத்துடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டு பாருங்க

பொதுவாக நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மசாலா பொருட்களும் மருத்துவ குணங்களைக் கொண்டவை. அதில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகமும் ஒன்று. இந்த இரண்டு விதைகளையும் சரியான அளவில், சரியான வழியில் உட்கொண்டு வந்தால், அது உடலுக்கு பல வழிகளில் நன்மைகளை அளிக்கும். அந்தவகையில் வெந்தையத்தை கருஞ்சீரகத்துடன் சேர்த்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து, அந்நீரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது குடித்து வர … Read more

ரஷ்ய விமானங்களை வீழ்த்த உலகின் அதிவேக ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கும் பிரித்தானியா

ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. ரஷ்ய ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு உதவியாக உக்ரைனுக்கு ஸ்டார்ஸ்ட்ரீக் அதிவேக போர்ட்டபிள் ஏவுகணைகள் (Starstreak high-velocity portable missiles) ஒப்படைக்கப்படும் என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் நேற்று இரவு நாடளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார். ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும் இந்த வகை ஏவுகணை ஒவ்வொன்றும் மூன்று ஈட்டிகளாகப் பிரிந்து போர்க்கப்பல்கள் அல்லது போர் விமானங்களை துளைத்து … Read more

உக்ரைன் அரசு கவிழ்க்கப்படுமா? அதிகாரபூர்வ தகவலை தெரிவித்த ரஷ்யா

உக்ரைன் அரசை கவிழ்க்கும் நோக்கத்திற்காக அந்நாட்டின் மீது போர் தொடுக்கவில்லை என ரஷ்யா மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மரியா ஸகாரோவா கூறுகையில், உக்ரைன் விவகாரத்துக்குத் தீா்வு காண்பதற்கான நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவாா்த்தை நடைபெறும். உக்ரைனின் தற்போதைய அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அங்கு ராணுவ … Read more

பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் புதைபட… உக்ரைனில் ரஷ்யாவின் கோரமுகம்

உக்ரைனில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று ரஷ்ய வான் தாக்குதலில் சிக்க, 17 பெண்கள் காயங்களுடன் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட குறித்த வான் தாக்குதலில் தரைமட்டமான மருத்துவமனையின் இடிபாடுகளில் சிக்கி பச்சிளம் குழந்தைகள் புதைக்கப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இருதரப்பும் போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்ட நிலையிலேயே, ரஷ்யா அத்துமீறி இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட ஜெலென்ஸ்கி, இதுவரை 17 பெண்கள் … Read more

மெளனம் கலைத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மனைவி! வெளியிட்ட முக்கிய உண்மைகள்

உக்ரைன் நாட்டின் முதல் பெண்மணியும், ஜனாதிபதியின் மனைவியுமான Olena Zelenska ரஷ்யப் படையெடுப்பு குறித்து உலக ஊடகங்களுக்கு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ள நிலையில் அதில் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வருகிறது. உலக நாடுகளின் கண்டனங்களையும் பொருட்படுத்தாமல் பல அத்துமீறல் செயல்களை அந்நாட்டு வீரர்கள் அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச சமூகத்தை நோக்கி உக்ரைன் நாட்டின் முதல் பெண்மணியும், ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மனைவியுமான Olena Zelenska கடிதம் ஒன்றை … Read more