கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யும் நிலையில் 3 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்- சிபிஐக்கு, சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: 250-க்கும் மேற்பட்ட சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.   இந்த வழக்கு சம்பந்தமாக கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி  கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான … Read more

ராமேஸ்வரம், மதுரை, திருவண்ணாமலை கோவில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம்- அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- கடந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அதில் 90 சதவீத பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் இந்தாண்டு மானியக் கோரிக்கையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 165 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படுத்தப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இக்கூட்டத்தில் … Read more

ஞானவாபி மசூதி வழக்கு: வாரணாசி மாவட்ட நீதிபதி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது.  இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றததில் மனு தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை … Read more

ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிபதி விசாரிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது.  இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றததில் மனு தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை … Read more

சிறுமியை ஏமாற்றியதாக புகார்… விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்த வாலிபர் மரணம்

போபால்:  மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 24 வயது வாலிபர் விஷம் அருந்தி விட்டு காவல் நிலையத்திற்கு வந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து போலீஸ் சூப்பிரெண்டு கூறியதாவது:-  குவாலியர் கோல் பாதியா பகுதியில் வசித்து வந்தவர்  கிருஷ்ணா ஜெயின் (வயது 24). இவர் மைனர் சிறுமியை ஏமாற்றியதாக இரண்டு நாட்களுக்கு முன்பு ஜனக்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் வியாழக்கிழமை இரவு கிருஷ்ணா ஜெயின், அந்த மைனர் பெண்ணுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். … Read more

பா.ஜ.க. பக்கம் திரும்புகிறதா தி.மு.க.?- மாறும் அரசியல் சூழ்நிலையால் பரபரப்பு

சென்னை: பேரறிவாளன் விடுதலை  விவகாரத்தில் தி.மு.க. மீது காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால் அந்த கட்சியை கை கழுவிவிட்டு பா.ஜனதா பக்கம் திரும்புவதற்கு தி.மு.க. தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் நடக்க உள்ளது. தற்போதைய நிலையில் பா.ஜனதாவுக்கு 9,194 வாக்குகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சில மாநில கட்சிகளின் ஆதரவை பெற பா.ஜனதா முயற்சித்து வருகிறது. இந்த சூழலில்தான் வருகிற 28-ந்தேதி கருணாநிதி சிலையை திறக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைக்கப்பட்டுள்ளார். … Read more

அமெரிக்காவை விட இந்தியாவில் பணவீக்கம் குறைவாக உள்ளது- பாதுகாப்புத்துறை மந்திரி கருத்து

புனே: இந்தியாவில் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதமாக உயர்ந்தது. மொத்த விற்பனை பணவீக்கம் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 15.1 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் பாஜக தொண்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது: அதிகரிக்கும் பணவீக்கம் பற்றி நாட்டில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று அதிகரித்திருந்த காலத்தில் சர்வதேச அளவில் ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்தது.  ஆனால், … Read more

குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி – பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டுவீட்

புது டெல்லி: குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க பிரசாந்த் கிஷோர் சில யுக்திகளை வகுத்து அக்கட்சியின் தலைமையிடம் கொடுத்தார். பின் அவர் காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் பேசப்பட்டது. இறுதியில் அவர் காங்கிரஸில் இணையவில்லை என்பது உறுதியானது.  பிரசாந்த் கிஷோர் கொடுத்த பரிந்துரைகளை காங்கிரஸ் ஏற்கவிலை என்பதாலும், அவர் காங்கிரஸில் இணைவதில் சில தலைவர்களுக்கு  உடன்பாடு இல்லை … Read more

திருமண விழாவில் ரகளை- கற்களை வீசி தாக்கியதில் 3 போலீசார் காயம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் திருமண விழாவில் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த விருந்தினர்கள் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் என மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 8 பேர் பிடிபட்டிருப்பதாகவும் … Read more

தங்கையின் கணவரை பழிவாங்க விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

பெங்களூரு: பெங்களூரு தேவனஹள்ளி அருகே கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து டெல்லி, சென்னை, தூத்துக்குடி, ஐதராபாத், உப்பள்ளி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலைய போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை 3.30 மணி அளவில் போன் வந்தது. போனில் பேசியவர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அவரது பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார்.  இதையடுத்து போலீசார் மற்றும் … Read more