இந்திய பகுதியை சீனா ஆக்ரமித்துள்ளதா? மத்திய அரசு விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, லடாக் பகுதியில் அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் விரட்டி அடித்தனர். இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து சீனாவுடனான எல்லை பகுதியில் பாதுகாப்பை இந்திய ராணுவம் பலப்படுத்தி உள்ளது. … Read more

பொதுத்தேர்வுகளில் பிடிபட்ட 5 கிலோ பிட் பேப்பர்- தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 11 பேர் சஸ்பெண்டு

நாமக்கல்: தமிழகத்தில் கடந்த 5-ந் தேதி (வியாழக்கிழமை) பிளஸ்-2 பொதுத்தேர்வும், கடந்த 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பிளஸ்-1 பொதுத் தேர்வும், 6-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வும் தொடங்கியது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்1, பிளஸ்2 தேர்வுகள் 82 மையங்களில் மாணவ மாணவிகள் எழுதி வருகின்றனர். தேர்வு மையங்களுக்கு 82 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 82 துறை அலுவலர்கள், 14 கூடுதல்துறை அலுவலர்கள், 1,200 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வை கண்காணிக்க அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் தலைமையில் … Read more

மகாராஷ்டிராவில் நேருக்கு நேர் லாரிகள் மோதி தீ விபத்து- 9 பேர் பலி

மும்பை: மகராஷ்டிரா மாநிலம் சந்திரப்பூர் நகரின் அருகே உள்ள அஜய்பூர் அருகே மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி மீது டீசல் ஏற்றிக் கொண்டு வந்த டேங்கர் ஏதிர்பாரத விதமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீப்பற்றியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தானது நேற்று இரவு 10.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு பின் சென்ற தீயணைப்புத்துறையினர் சில மணி நேர போராட்டத்திற்கு … Read more

தமிழகத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்க வேண்டும்- மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று இரவு எழும்பூர் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர் இன்று காலையில் பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்படும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஐ.சி.எப். சார்பில் தயாரிக்கப்பட்ட 12 ஆயிரமாவது ரெயில் பெட்டியையும் கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்கு சமர்ப்பித்தார். பின்னர் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமரின் நோக்கம் இந்திய ரெயில்வே துறையை உலக … Read more

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சைக்கிளில் சென்று திருமணம் செய்த ஜோடி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரான்சு சமால். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர் எதை செய்தாலும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தற்போது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை அதிகமாக உயர்ந்து வருவது சுப்ரான்சு சமாலை பாதித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அரசு நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க அவர் முடிவு செய்தார். இதையடுத்து திருமண ஊர்வலத்தில் மணப்பெண்ணுடன் சைக்கிளில் … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாகிறது

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வு முடிந்து 14ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் … Read more

காதல் தோல்வி – பெண்ணை கொலை செய்த வாலிபர்

பனாஜி: கோவாவில் 26 வயதான வாலிபர் ஒருவர், தன்னுடனான காதலை முறித்த இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட தியா நாயக் (19 வயது)  கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் 26 வயதான கிஷன் கலங்குட்கரை காதலித்து  வந்துள்ளார். இவர்கள் கடந்த புதன்கிழமை தெற்கு கோவா, வெல்சன் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.   அப்போது தியா நாயக், கிஷனுடனான காதல் உறவை முறித்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்  கத்தியால் தியா நாயக்கை … Read more

கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மெரினா கடற்கரை சாலையில், எண்ணிலடங்கா கள்ளச் சாராய ஊரல்கள், போலி மது பாட்டில்கள் புதைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வெட்கக்கேடானது. இது , மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருக்கும் கள்ளச் சாராய ஊரல்கள், போலி மதுபாட்டில்களைத் தோண்டி எடுக்கும் செய்தியினை ஊடகங்களில் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது. காவல்துறைக்கு தெரியாமல் இவ்வளவும் புதைத்து வைக்க முடியாது. இதுதொடர்பாக, ஒன்றிரண்டு பெண்களை … Read more

நடுவானில் பழுதடைந்த ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் – பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி

மும்பை:  ஏர்பஸ் ஏ320நியோ என்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று பெங்களூர் செல்வதற்காக மும்பை விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது.  பறக்கத்தொடங்கிய 27 நிமிடங்களில் அந்த விமானத்தின் இன்ஜின் திடீரென்று பழுதடைந்து நின்றுவிட்டது. நிலைமையை சுதாரித்த  விமானி, விமானத்தை பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்திலேயே தரையிறக்கினார். இதையடுத்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வேறு ஏர் இந்தியா விமானத்தில் பெங்களூருவுக்கு அனுப்பி  வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விமானப் சிவில் விமானப் போக்குவரத்தின் ஒழுங்குமுறை இயக்குநரகம் … Read more

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவதா?- தி.மு.க. தலைவர்கள் மீது காங்கிரஸ் கடும் அதிருப்தி

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது காங்கிரசில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க. இதை வரவேற்றுள்ளது. ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தீவிர முயற்சி எடுத்ததில் தி.மு.க.வுக்கு பெரும் பங்கு உண்டு. மேலும் எஞ்சி உள்ள 6 பேர் விடுதலைக்காகவும் சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. பேரறிவாளன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவரும் கட்டிப்பிடித்து … Read more