இனி மருத்துவமனை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை : புதிய சட்ட திருத்தம் அமல்..!!

கேரளா அரசு மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணியாற்றி வந்தவர் வந்தனா தாஸ் (வயது 22) . இந்நிலையில், சிகிச்சைக்காக வந்த நபரை வந்தனா தாஸ் சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது, அந்த நபர் திடீரென டாக்டரை கத்தியால் குத்தி கொலை செய்தார். . கொட்டாரக்கரா தாலுக்கா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் வந்தனா தாஸ் கொல்லப்பட்ட பிறகும் களமசேரி மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்களை பாதுகாக்க முடியாவிட்டால், … Read more

நாளை கர்நாடகா முதல்வர் பதவியேற்பு..?

கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. பாஜக 66, மஜத 19, சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். இந்நிலையில் சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் ஏற்பட்ட போட்டி வெளிப்படையாகவே வெடித்தது. சிவகுமாரின் ஆதரவாளர்கள் பெங்களூருவில் முக்கிய இடங்களில் ‘அடுத்த முதல்வர் டி.கே.சிவகுமார்’ என நேற்று பேனர் வைத்தனர். அவரது … Read more

தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை அரசு தடை செய்யவில்லை..!!

கேரளவில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு பின்னர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைக்கப்படுகின்றனர் என்ற கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இத்திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், படத்தை வெளியிட மேற்கு வங்க மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் திரையரங்க உரிமையாளர்கள் இத்திரைப்படத்தை திரையிடுவதில்லை என முடிவெடுத்தனர். இதற்கு எதிராக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த … Read more

அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம்..!!

அமேசான் ஊழியர்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. உலகளவில் பல்வேறு ஊழியர்கள் வேலையிழந்த நிலையில், இந்தியாவில் உள்ள அமேசான் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்தியாவில் எத்தனை ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 … Read more

மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது சாராயம் அல்ல ‘மெத்தனால்’..!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் என்னும் மீனவக் கிராமத்தில், கள்ளச் சாராயம் அருந்திய 13 பேர் பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர்த்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கிராமங்களில் 5 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தனர். விழுப்புரம் சம்பவத்தில் 66 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச் சாராயம் அல்ல என்றும், தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் சேர்க்கப்பட்ட விஷச் சாராயம் என்று காவல் … Read more

ரஜினிக்கு வில்லனாகும் பொன்னியின் செல்வன் நடிகர் ?

ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினிகாந்த் ‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் ரஜினி ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கிறதாம். தற்போது அப்டேட் என்னவென்றால் இந்த படத்தில் மிகவும் சக்தி வாய்ந்த வில்லன் தாபாத்திரம் இருக்கிறதாம். எனவே இந்தப் படத்தில் பெரிய நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் … Read more

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 7 பேர் பலி..!!

மேற்கு வங்காளத்தின் கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் ஈக்ரா நகரில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்று திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதனை கிழக்கு மித்னாப்பூர் காவல் கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த சம்பவம் பற்றி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்ட செய்தியில், வெடிவிபத்து சம்பவம் பற்றி அறிந்து வருத்தம் அடைந்தேன். காயமடைந்த நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். … Read more

இது தெரியுமா ? வாட்ஸ் அப்பில் அறிமுகமான வேற லெவல் அப்டேட்..!

வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் சாட்களை தனியே ஒரு ஃபோல்டர் உருவாக்கி அதில் பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ளலாம். தனிப்பட்ட சாட்கள் மட்டுமின்றி க்ரூப் சாட்களையும் இந்த ஃபோல்டரில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மெசேஜ் பிரீவியூக்கள் எதுவும் தெரியாது. இந்த அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. “இந்த அம்சம் அடிக்கடி தங்களது மொபைல் போனினை … Read more

கொளுத்தும் வெயிலில் 7 கி.மீ தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம் ஒசர் வீரா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சோனாலி வாகத் (21). இவர் நிறைமாத கர்ப்பிணி இருந்தார். இந்த நிலையில், இவர் கடந்த வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர் வீட்டில் இருந்து 3.2 கிலோ மீட்டர் தூரம் நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தார். அங்கு இருந்து ஆட்டோ மூலம் தவா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் ஆட்டோ மூலம் சிறிது தூரம் சென்று, அங்கிருந்து … Read more

ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை..நிறுவனத்தின் மீது வழக்கு… நீதிபதி அதிரடி தீர்ப்பு..!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இங்கிலாந்தில் உள்ள இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் இயன் கிளிஃபோர்ட். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் இருந்து வருகிறார். லிங்க்ட்இன் தளத்தில் இவர் குறிப்பிடப்பட்டுள்ள சுயவிவரத்தின்படி, இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ‘மருத்துவ ரீதியாக ஓய்வு பெற்றவராக’ (Medically Retired) இருக்கிறார். ஐபிஎம் நிறுவனத்துடன் இயன் கிளிஃபோர்ட் 2013-ம் ஆண்டு செய்துகொண்ட சமரச ஒப்பந்தத்தின்படி, அவர் … Read more