\"மனித மூளையுடன் வரும் ரோபோ..\" பகீர் கண்டுபிடிப்பு.. இந்த சீனா அடங்காது போலயே.. இது ஏன் ரொம்ப ஆபத்து

பெய்ஜிங்: இந்த காலத்தில் ரோபோ தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோக்கள் ரொம்பவே முக்கியமானதாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் ஏஐ மாடல் ரோபோக்களை தூக்கிச் சாப்பிடும் வகையில், சீன ஆய்வாளர்கள் மனித மூளையுடன் கூடிய அதிசயமான ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். அது குறித்து நாம் பார்க்கலாம். என்ன தான் இப்போது Source Link

சீட்டு கட்டாய் சரிந்த 5 மாடி கட்டடம்.. பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு.. குஜராத்தில் பெரும் சோகம்

காந்தி நகர்: குஜராத்தின் சூரத் அருகே 5 மாடிகளை கொண்ட கட்டடம் நேற்று திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் ஏராளமானவர்கள் சிக்கிய நிலையில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் சிக்கி உள்ளதாக சந்தேகிக்கப்படும் சூழலில் 2வது நாளாக மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என Source Link

ஐநா நடத்தி வந்த பள்ளி மீது குண்டு வீச்சு.. 13 பேர் பலி! நாளுக்கு நாள் உக்கிரமாகும் இஸ்ரேல் தாக்குதல்

காசா: காசாவில் ஐநா நடத்தி வந்த பள்ளியின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த Source Link

சீட்டுக்கட்டு போல சரிந்த 6 மாடி கட்டிடம்.. பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்.. குஜராத்தில் பரபரப்பு

சூரத்: குஜராத்தின் சூரத் அருகே 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தற்பொது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குஜராத்தின் தொழில நகரம் என்று அழைக்கப்படும் சூரத் அருகே உள்ள சச்சின் பாலி Source Link

இது லிஸ்ட்லயே இல்லையே.. பொத்தி பொத்தி செல்லமா வளர்த்து.. கடைசியில் அந்த \"எருமை\" செய்த வேலையை பாருங்க

கான்பூர்: வித்தியாசமான வழக்கு ஒன்று போலீஸ் ஸ்டேஷன் வந்துள்ளது.. அதைவிட வித்தியாசமான முறையில் இந்த வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அஸ்கரன்பூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் நந்தலால் சரோஜ்.. இவர் ஒரு விவசாயி ஆவார். எனவே சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார். மாடுகள்: இந்த மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றாலும், Source Link

மிக பெரிய ட்விஸ்ட்.. ஈரான் அதிபராகும் சீர்திருத்தவாதி பெசெஷ்கியன்! அடுத்து வரும் மேஜர் மாற்றங்கள்

தெஹ்ரான்: ஈரான் நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு நடந்த அதிபர் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்ருள்ளார். ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில் பழமைவாதியாக அறியப்படும் சயீத் ஜலிலியை வீழ்த்தி மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Source Link

இதென்ன நாக தோஷமா? இந்தோனேசியாவில் மனிதர்களை விழுங்கும் மலைப்பாம்பு! தொடரும் சோகம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 36 வயது பெண்ணை மலைப்பாம்பு ஒன்று உயிருடன் விழுங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று 36 வயதான சிரியாட்டி எனும் பெண் தனது Source Link

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் எப்போது? அமித்ஷா நடத்திய முக்கிய கூட்டம்! வெளியான தகவல்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், அமர்நாத் யாத்திரை முடிந்த பின்னர் தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று Source Link

கள்ளக்குறிச்சி தெய்வானை.. ஆண் நண்பர் கிட்ட பேசிட்டே இருந்தாரு.. டக்கென \"கட்டையை\" எடுத்த கணவர்.. ஏன்?

கள்ளக்குறிச்சி: அண்ணன் – தம்பி இருவரையும் கைது செய்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்? கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது அ.குறும்பூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருகிறார் வீரமணி.. கூலித்தொழிலாளியான இவருக்கு 33 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் தெய்வானை.. 28 வயதாகிறது. திருமணம்: கடலூா் மாவட்டம் விருத்தாசலம் Source Link

ரூ.100 கோடி சொத்து! 21 ஏக்கரில் பங்களா! 'போலே பாபா'வின் அண்டர் கிரெளண்ட் சாம்ராஜ்ஜியம்!

ஹத்ராஸ்: சர்ச்சையில் சிக்கியுள்ள போலே பாபாவுக்குக் கிட்டத்தட்ட உபி முழுவதும் 24 ஆசிரமங்கள் உள்ளன என்றும் அவருக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.  உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக விழாவில் கலந்து கொண்டவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சுமார் Source Link