3 மாத \"டார்ச்சர்\".. ரஷ்யாவின் பிடியில் கொடுமையை அனுபவித்த தமிழர்கள்.. கடைசியில் காப்பாற்றிய உக்ரைன்

International oi-Halley Karthik கீவ்: உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகளை அந்நாட்டு ராணுவம் தற்போது மீட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் பிடியிலிருந்த இலங்கை மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களில் பெரும்பாலானோர் தமிழர்களாவார்கள். கடந்த சில மாதங்களாக ரஷ்ய பிடியிலிருந்த இவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்துள்ளனர். இது குறித்து தற்போது பிபிசி செய்தி ஊடகத்திற்கு அவர்கள் பேட்டியளித்துள்ளனர். அந்த பேட்டி இங்கு மொழிப்பெயர்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. போர் கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலை … Read more

அட கொடுமையே! சாமி சிலையை தொட்டு கும்பிட்டது குற்றமா? பட்டியலின சிறுவனுக்கு ரூ.60 ஆயிரம் ஃபைன்

India oi-Jackson Singh கோப்பல்: கோயிலில் சாமி சிலையை தொட்டு கும்பிட்ட பட்டியலின சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.60,000 அபாரதம் விதிக்கப்பட்ட கொடுமை கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது என நாம் பெருமைப்பட்டு கொண்டாலும், இன்னும் ஜாதியக் கொடுமைகள் நம் சமூகத்தில் இருந்து முழுமையாக அகலவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம். நாகரீக வளர்ச்சி அடைந்த ஒரு சமூகத்தில் ஜாதிய பாடுபாடுகளும், தீண்டாமைகளும் கடைப்பிடிக்கப்படுவது என்பது இன்னும் நாம் காட்டுமிராண்டிகளாகவே இருக்கிறோம் என்பதையே நொடிக்கு … Read more

சித்தூரில் காகித ஆலையில் தீவிபத்து.. தந்தையுடன் பர்த்டே கொண்டாட இருந்த மகன் உட்பட 3 பேர் பலி

India oi-Halley Karthik அமராவதி: அந்திரப் பிரதேச மாநிலம் சித்தூரில் காகித தட்டுகளை தயாரிக்கும் ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலையின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் தீ விபத்தில் உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டடுக்கு கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள ஆலையில் நள்ளிரவில் தீ பற்றியுள்ளது. மேல் தளத்தில் இருந்துள்ள உரிமையாளர் வீட்டிற்கும் தீ பரவியதால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சித்தூரின் … Read more

\"அந்த\" மெகா தவறு! இந்தியாவின் வெற்றியை பறித்த \"பூதம்\"! ஆஸ்திரேலியாவிடம் தோற்றது எப்படி? இதான் காரணம்

India oi-Shyamsundar I மொஹாலி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் முதல் டி 20 போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்து உள்ளது. இந்திய அணி நேற்று சிறப்பாக ஆடியும் பல்வேறு இடங்களில் சொதப்பி தோல்வி அடைந்துள்ளது. மீண்டும்.. மீண்டுமா என்று சொல்லும் அளவிற்கு இந்திய அணி செய்த அதே தவறை செய்து கொண்டே இருக்கிறது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போதெல்லாம் அதிக ரன்களை குவிக்கும். 170+ ரன்களை குவிக்கும். … Read more

ஹிஜாப்புக்கு எதிராக ஈரானில் தீவிரமடையும் போராட்டம்.. 3 பேர் உயிரிழப்பு.. அடக்குமுறையை ஏவும் அரசு

International oi-Vishnupriya R தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண் ஒருவர் கலாச்சார காவலர்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்ட இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்துள்ளனர். இப்போராட்டம் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது. ஹிஜாப் கட்டாயம் இஸ்லாமிய சமயநெறிகளை கறாராக பின்பற்றும் … Read more

இந்தியா கொண்டுவரப்பட்ட சீட்டாக்களுக்கு மான்களை இரையாக கொடுக்காதீங்க.. பிஷ்னோய் சமூகம் அதிரடி கடிதம்

India oi-Jackson Singh போபால்: ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளுக்கு (சீட்டா) மான்களை தயவு செய்து இரையாக கொடுக்காதீர்கள் என்று ராஜஸ்தானின் பெருமளவு வசிக்கும் பிஷ்னோய் சமூக அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் கடந்த 1952-ம் ஆண்டில் முற்றிலும் அழிந்துவிட்ட சிறுத்தை இனமாக சிவிங்கிப் புலிகள் அறிவிக்கப்பட்டன. அன்று முதல் இப்போது வரை இந்தியக் காடுகளில் சிவிங்கிப் புலிகளே இல்லாமல் இருந்தது. இந்தக் குறையை போக்கும் வகையிலும், இந்தியக் … Read more

திண்பண்ட தீண்டாமை.. “கிரிக்கெட்” முதல் “அக்னிபாத்” வரை! “அசுரன்” படத்தை மிஞ்சும் “சாதிவெறி” பின்னணி

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali தென்காசி: தந்தை பெரியார் பிறந்தநாளன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தில் தலித் சிறுவர்களுக்கு கடையில் திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பூதாகரம் எடுத்துள்ள நிலையில் எவிடன்ஸ் அமைப்பை சேர்ந்த கதிர் அப்பகுதிக்கு நேரில் சென்று நடந்த விபரங்களை விசாரித்து விரிவான விளக்கத்தை அளித்து இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “அது ஒன்றும் ஷாப்பிங் மால் அல்ல. சுமார் 5 அடி அகலமும் 5 அடி நீளமும் கொண்ட … Read more

ராகுல் காந்தி படத்துடன் தமிழக பாஜக பிரமுகர் பகிர்ந்த ட்வீட் – ஏன் சர்ச்சையானது?

India bbc-BBC Tamil BBC ராகுல் காந்தி ராகுல் காந்தியின் படத்துடன் தமிழ்நாடு பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் மாநில தலைவர் சி.டி. நிர்மல் குமார் வெளியிட்ட ட்வீட் சர்ச்சை ஆகியிருக்கிறது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளப் பிரிவின் தலைவராக உள்ள சி.டி. நிர்மல் குமார் ஞாயிற்றுக்கிழமையன்று ராகுல் காந்தியை கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். காலில் விழும் … Read more

இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு

India bbc-BBC Tamil ஹிஜாப் அணிதல் உள்ளிட்ட ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் இரான் கலாசார காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஓர் 22 வயது இளம் பெண்ணின் மரணம் அந்நாட்டில் கடுமையான போராட்டங்களைத் தூண்டியுள்ளது. மாசா அமினி என்ற 22 வயது இரானிய பெண், இஸ்லாமிய அடிப்படைவாத காவல் குழுவால் கைது செய்யப்பட்டார். இரானில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இயங்கி வரும் காவல் அமைப்பு அது. அதாவது அடிப்படைவாத அமலாக்கக் காவல்துறை என்று புரிந்து கொள்ளலாம். இஸ்லாமிய … Read more

“5 டுவிஸ்டுகள்” – பாயும் பாஜக.. “பதுங்கும்” வங்கத்து புலி! “கப்சிப்” மம்தா -மொத்தமாக மாறும் “கணக்கு”

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தொடர்ந்து அதிரடி அரசியலை செய்து வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த சில மாதங்களாக அமைதியாக செல்வது அவரது பேச்சுக்களின் மூலம் தெரிகிறது. மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று மம்தா பானர்ஜி 3 வது முறையாக முதலமைச்சராக இருந்து வருகிறார். கடந்த முறை முதலமைச்சராக இருந்த சமயத்திலிருந்து கடந்த … Read more