பெரும் முதலாளிகளின் 10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது.. பாரதிய கோடி கட்சி.. விளாசிய ஆம் ஆத்மி

News oi-Mani Singh S அகமதாபாத்: பாஜக அரசு பெரும் முதலாளிகளின் 10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது என்றும் இனிமேல் இக்கட்சியின் பெயர் பாரதிய கோடி கட்சி என்றும் பாஜகவை ஆம் ஆத்மி கட்சி சாடியுள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லியில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. பாஜகவின் இந்த ஆபரேஷன் லோட்டஸ் தோல்வி அடைந்துவிட்டதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. ஆனால், ஆம் ஆத்மியின் … Read more

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. ஆடிப்போன தைவான்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!

International oi-Yogeshwaran Moorthi தைபே: தைவானின் யூஜிங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்சர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதால், சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைவானின் யுஜிங்கில் இருந்து கிழக்கே 85 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் 12:14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்கள், சாலைகள் குலுங்கியுள்ளன. … Read more

தின்பண்ட தீண்டாமை.. கடைக்கு வர கூடாதா? இனி நீங்க ஊருக்கே வர முடியாது.. குற்றவாளிகளுக்கு அதிரடி தடை!

Tamilnadu oi-Shyamsundar I தென்காசி: தென்காசியில் தீண்டாமையை கடைபிடித்த குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். சங்கரன்கோவிலில் உள்ள கிராமத்தில் நிலவி வரும் ஜாதி ரீதியிலான பாகுபாடு தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இப்போது தமிழ்நாட்டில் ஜாதி ரீதியாக இப்படி ஒரு கிராமம் இருப்பது மக்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவியர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் … Read more

பீரங்கி குண்டு வடிவில்.. 2 டைனோசர் முட்டைகள் சீனாவில் கண்டுபிடிப்பு.. ஆய்வாளர்கள் தகவல்!

International oi-Mani Singh S பீஜிங்: பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர்களின், பீரங்கி குண்டு வடிவிலான 2 பெரிய முட்டைகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து வந்த உயிரினங்களில் ஒன்று டைனோசர். ஆனால் இந்த உயிரினம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய உயிரினமான டைனோசர் விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த பெரிய விண்கல் காரணமாக இந்த இனம் … Read more

\"பிளேபாய்\" வேலைக்கு ஆட்கள் தேவை.. நகரம் முழுவதும் முளைத்த போஸ்டர்கள்! போலீஸ் ஸ்டேஷனையும் விடவில்லை

India oi-Vigneshkumar டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் கோட்வார் நகர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேலையின்மை என்பது நமது நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவறான பாதைகளில் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கிடையே உத்தரகண்ட் மாநிலத்தில் வேலை இல்லாத இளைஞர்கள் குறி வைத்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. போஸ்டர் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டங்களில் உள்ள … Read more

கள்ளக்குறிச்சி மோடி போஸ்டர் கிழிப்பு! போலீசாரை நோக்கி பீர் பாட்டிலை வீசி பாஜகவினர் ரகளை! இருவர் கைது

Tamilnadu oi-Vigneshkumar கள்ளக்குறிச்சி: கடையில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட போஸ்டர் விவகாரத்தில் போலீசாரை பாஜகவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல தமிழ்நாட்டிலும் பாஜகவும் பல நிகழ்ச்சிகளை நடத்தியது. மோடியின் பிறந்த நாளுக்காகப் பல இடங்களில் அவரை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. போஸ்டர் இதற்கிடையே கள்ளக்குறிச்சி … Read more

கைவிட்டு போன அதிமுக.. அத்தனையிலும் அவ்வளவு அடி..ராமேஸ்வரத்தில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை- ஸ்பெஷல் யாகம்!

Tamilnadu oi-Mathivanan Maran ராமேஸ்வரம்: அதிமுக தொடர்பான அத்தனை வழக்குகளிலும் கடும் பின்னடைவை சந்தித்துள்ள அக்கட்சியின் ஓபிஎஸ் கோஷ்டியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ராமேஸ்வரம் கோவிலில் சிறப்பு பூஜைகள், யாகத்துடன் தரிசனம் செய்தார். அதிமுக இப்போது ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகளாக உடைந்துள்ளது. இது தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் ஓபிஎஸ் கோஷ்டிக்கு கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி நடத்திய ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம், … Read more

நிகான் கேமிராவில் கெனான் லென்ஸ் கவர்…திரிணாமுல் எம்பி பகிர்ந்த படம்…ஆனால் நிஜம் என்ன தெரியுமா?

India oi-Halley Karthik போபால்: இந்தியாவுக்கு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பிறகு சிவிங்கி (Cheetah) வகை சிறுத்தை புலிகள் வந்து சேர்ந்துள்ளன. பிரதமர் மோடி இதனை மத்தியப் பிரதேச தேசிய பூங்காவுக்கு அர்ப்பணித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி இந்த சிறுத்தைகளை திறந்து விட்ட பின்னர் அவற்றை புகைப்படம் எடுத்தார். ஆனால் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதாவது இந்த புகைப்படத்தில், பிரதமர் மோடி சஃபாரி தொப்பியுடன் கையில் கேமிராவுடன் காட்சியளித்தார். இந்த கேமிராவில்தான் பஞ்சாயத்து. … Read more

ஹிஜாப் அணியாததால் 22 வயது பெண் கொலை.. ஈரானில் போராட்டத்தில் குதித்த பெண்களால் பரபரப்பு

International oi-Halley Karthik தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண் ஒருவர் கலாச்சார காவலர்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது. அதே நேரத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்துள்ளனர். இப்போராட்டம் … Read more

என் குரு கலைஞர்.. அரசியலுக்கு “நோ” சொன்ன நெப்போலியன்! திமுக டூ பாஜக தாவிய நடிகரின் இறுதி முடிவு

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali செங்கல்பட்டு: கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன், இனி அரசியலில் ஈடுபடப்போவது இல்லை என்று அறிவித்து இருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அதன் நிறுவனரும் நடிகருமான நெப்போலியன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அதன் பின்னர் அவர் … Read more