இது 2வது முறை.. சர்வதேச தீவிரவாதிகளை பாதுகாக்கிறதா சீனா? இந்தியாவின் தீர்மானத்திற்கு முடக்கம்

International oi-Halley Karthik ஜெனீவா: இந்தியா மற்றும் அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான சஜித் மிர்-ஐ சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் தீர்மானத்தை சீனா நிறுத்தி வைத்துள்ளது. ஐநா சபையில் இதற்கான முன்மொழிவை அமெரிக்கா வைத்தது. இதற்கு இந்தியா தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் சீனா இந்த தீர்மானத்தை நிறுத்தி வைத்துவிட்டது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சதி திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர்தான் … Read more

கொடூரம்.. சரியாக ஹிஜாப் அணியாத இளம்பெண்.. கைது செய்து அடித்தே கொன்ற போலீசார்.. ஈரானில் பயங்கரம்

International oi-Nantha Kumar R தெஹ்ரான்: ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் மருத்துவமனையில் பலியானார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது. இங்கு பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கு 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுவெளியில் … Read more

என்னா சேட்டை! ஓசியில் பீடி கொடுக்காத ஆத்திரத்தில் சொகுசு காருக்கு தீ வைத்த இளைஞர்.. அட கொடுமையே!

News oi-Jackson Singh ஆத்தூர்: திண்டுக்கல்லில் ஓசியில் பீடி கொடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர், கடைக்காரருக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை தீ வைத்து எரித்துள்ளார். பழிக்கு பழி வாங்கும் மனப்பான்மை மனிதர்களிடம் அதிகரித்து வருகிறது. கொலைக்கு கொலை, ரத்தத்துக்கு ரத்தம் என்ற கலாச்சாரம் இன்றைய இளைஞர்களிடம் பெருகி வருகிறது. மேற்குறிப்பிட்ட பழிவாங்கல்களையாவது குற்றவாளிகள் ஓரளவுக்கு நியாப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், மிக அற்பமான விஷயங்களுக்கு எல்லாம் பழிவாங்குகிறேன் என்ற பெயரில், நம் மக்கள் செய்யும் … Read more

\"போர் வேண்டாம்.. புதினை கண்டித்து விட்டார் மோடி..\" பாராட்டும் அமெரிக்க ஊடகங்கள்!

International oi-Mani Singh S சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதனிடையே, ரஷியா அதிபர் புதினை தனியாக சந்தித்து உக்ரைன் போர் தொடர்பாக பேசினார். இதில் பிரதமர் மோடி பேசியதை அமெரிக்க ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி நேற்று முன் தினம் உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் … Read more

ஊர் கட்டுப்பாடு.. திண்பண்டம் கொடுக்க முடியாது.. பட்டியலின மாணவர்களிடம் கடைக்காரரின் தீண்டாமை

Tamilnadu oi-Vishnupriya R தென்காசி: தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாகுளம் கிராமம். இந்த கிராமத்தில் ஆதிதிராவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இங்குள்ள ஒரு கடையில் அவர்கள் தினமும் திண்பண்டங்களை வாங்கி சாப்பிடுவது … Read more

\"இது போருக்கான யுகம் அல்ல, புரிந்துகொள்ளுங்கள்\" ரஷ்ய அதிபர் புடினை மறைமுகமாக குட்டிய மோடி

International oi-Jackson Singh சமர்கண்ட்: “இது போருக்கான யுகம் அல்ல; அமைதிக்கான யுகம். புரிந்துகொள்ளுங்கள்” என்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உக்ரைன் – ரஷ்யா போர் 9 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி புதினிடம் இவ்வாறு கூறியிருப்பது சர்வதேச முக்கியத்தவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக … Read more

மெகா ஊழல்? பாக்-இல் அணை கட்ட $40 மில்லியன் திரட்டல்.. ஆனால் அதை விளம்பரப்படுத்த $63 மில்லியன் செலவு

International oi-Vigneshkumar இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடே இப்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அந்நாடு மெகா அணை கட்ட நிதி செலவழித்துள்ளது விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகின் பல நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. வளர்ந்த நாடுகள் கூட பருவநிலை மாற்றப் பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான வெப்பம் ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் வெள்ள பாதிப்பு மிக மோசமாக … Read more

லக்னோ நகரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பலி

India bbc-BBC Tamil உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். லக்னோவில் உள்ள தில்குஷா எனும் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். பெங்களூரூ வெள்ளம்: ஐ.டி. தலைநகர் நீரில் மூழ்கியபோது குடும்பங்கள் உதவிக்கு போராடியது எப்படி? கேரள பெண் விஞ்ஞானி அன்னா மணி யார்? … Read more

\"உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது நியாயம்தான்..\" சொல்வது போப் ஆண்டவர்

International oi-Jackson Singh வாடிகன்: “உக்ரைனுக்கு சில நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது நியாயப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்” என்று கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். பொதுவாக, உலகில் எங்கேனும் போர் நடந்தால், அதன் உள் விவகாரங்களில் தலையிடாமல் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றுதான் போப்பாக பதவி வகிப்பவர்கள் கூறுவார்கள். ஆனால், போர் பிரான்சிஸ் உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் 6 மாதங்களையும் தாண்டி நடைபெற்று வருகிறது. இதில் … Read more

டோல்கேட்டில் அடாவடி.. குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள்! தடுக்காமல் \"ரன்னிங் கமெண்ட்\" அடித்த ஆண்கள்

India oi-Jackson Singh நாசிக்: மகாராஷ்டிராவில் சுங்கக்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு வேலை செய்யும் பெண் ஊழியரும், காரில் வந்த பெண்ணும் குடுமிப்பிடி சண்டை போட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் சிக்னலை பார்க்க முடிகிறதோ இல்லையோ, சில கிலோமீட்டர் இடைவெளியில் கட்டாயம் ஒரு சுங்கச்சாவடியை பார்த்துவிடலாம். இவ்வாறு அதிக அளவில் சுங்கச்சாவடிகள் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சுங்கக்கட்டணத்துக்கு என்றே ஒரு குறிப்பிட்ட தொகையை … Read more