குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடல் திருச்சி வந்தது..அமைச்சர்கள் அஞ்சலி

International oi-Jeyalakshmi C குவைத்: சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடல் குவைத்தில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முத்தக்குமரன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி-கொரடாச்சேரி பிரதான சாலை தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். 40 வயதான இவர் கூத்தாநல்லூர் பகுதியில் பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு வியாபாரம் … Read more

இந்தியாவின் வேகமான வளர்ச்சி! ஷாங்காய் மாநாடு.. சீனா, ரஷ்யா அதிபர்கள் முன் பிரதமர் மோடி பேசியது என்ன?

International oi-Mani Singh S சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரமாக நாங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேசினார். மேலும் ‘இந்தியா உற்பத்தி மையமாக மாற நாங்கள் விரும்புகிறோம்’ என்றும் அவர் பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி நேற்று உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு … Read more

உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற விருப்பம்! ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

International oi-Halley Karthik சமர்கண்ட்: உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட்டில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதில் பேசிய அவர், “கொரோனா தொற்று மற்றும் ரஷ்ய-உக்ரைன் போர் உலக விநியோக சங்கிலியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார். இந்தியாவில் இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், பிரதமரின் இந்த உரை நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டமைப்பு ஜனநாயக மற்றும் … Read more

பாதுகாப்பாக இந்தியா வரும் சீட்டாக்கள்.. விமானத்தில் என்னென்ன ஏற்பாடுகள் தெரியுமா?

India oi-Mani Singh S போபால்: நமீபியாவில் இருந்து சீட்டாக்கள் இந்தியா கொண்டுவரப்பட உள்ள நிலையில், சீட்டாக்களுக்கு பயணத்தின் போது எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விமானத்தின் உள்ளே மரக்கூண்டு மற்றும் வெட்னரி டாக்டர்கள் என முன்னெச்செரிக்க ஏற்பாடுகள் தீவிமாக செய்யப்பட்டுள்ளன. சிறுத்தைகளில் மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கினமானனது சீட்டா (சிவிங்கி புலிகள்). மற்ற சிறுத்தைப்புலி இனங்களை காட்டிலும் இது சற்று வித்தியாசமானது. பின்னங்கால்கள் முன் கால்களை விட சற்று நீளமாக இருப்பதால் இந்த … Read more

'நட்பு நாடுகள் கூட எங்களை பிச்சைக்காரர்கள் என நினைக்கிறாங்க'.. புலம்பும் பாகிஸ்தான் பிரதமர்

International oi-Mani Singh S இஸ்லாமாபாத்: ”நட்பு நாடுகள் கூட நம்மை பிச்சைக்காரர்கள் என இப்போது நினைக்க தொடங்கி விட்டனர் என்றும், நமது நட்பு நாட்டிற்கு நாம் சென்றாலோ அல்லது போன் செய்தாலோ கூட.. பணம் கேட்டு பிச்சை எடுக்க வந்துவிட்டார்கள் என்பதே அவர்களின் நினைப்பாக உள்ளது என்றும்” பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத கனமழை பெய்ததால், நாட்டின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. குறிப்பாக அந்நாட்டின் மூன்றில் … Read more

காதில் நிற்காத ஹெட்போன்.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸை பார்த்து குபீரென சிரித்த ரஷ்ய அதிபர் புதின்

International oi-Nantha Kumar R சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டையொட்டி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த வேளையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காதில் ஹெட்போன் நிற்காமல் கீழே விழுந்து கொண்டே இருந்ததால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேடையிலேயே குபீரென சிரித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் … Read more

தமிழகத்தை மிஞ்சிய ஜார்க்கண்ட்… அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு 77% ஆக அதிகரிப்பு

India oi-Mathivanan Maran ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 77%ஆக உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியாவில் மாநிலங்களில் இடஒதுக்கீடு அளவு 50%-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் சாராம்சம். ஆனால் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதற்கு அரசியல் சாசனப் பாதுகாப்பும் பெறப்பட்டுள்ளது. இந்த 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. … Read more

வேலையை காட்டும் காலநிலை மாற்றம்.. பாகிஸ்தானில் 1400 பேர் கன மழையால் பலியான பின்னணி

International oi-Mani Singh S இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையால் 1,400-க்கும் அதிகமானோர் பலியாகினர், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் பெய்த இந்த மழைக்கு, அங்கு ஏற்பட்ட காலநிலை மாற்றமே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் ஒருபுறம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வரும் நிலையில், மறுபுறம் அந்நாட்டில் மழையினால் மேலும் அந்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து விடாமல் கொட்டித்தீர்த்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு … Read more

நோ யூஸ்.. கொரோனாவுக்கு எதிராக இந்த 2 மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.. மொத்தமாக தூக்கிய \"ஹு\"

International oi-Halley Karthik ஜெனிவா: கொரோனா தொற்றுக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட இரண்டு மருந்துகளை பரிந்துரை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது உலக சுகாதார அமைப்பு. கொரோனா தொற்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்னமும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி மற்றும், கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா தொற்றுக்கு எதிராக இந்த இரண்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என்று WHO அறிவித்திருந்தது. உலக பாதிப்பு இன்றைய நிலவரப்படி … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு.. இந்தியாவின் \"மாஸ்டர் பிளான்\".. உஸ்பெக்கிஸ்தானில் இறங்கிய மோடி!

International oi-Shyamsundar I சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். உஸ்பெக்கிஸ்தானில் நடக்கும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாநாட்டில் கலந்து கொள்ள உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தானில் இருக்கும் சமர்கண்ட் நகரத்தில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. உக்ரைன் போருக்கு பின்பாக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொள்ளும் முக்கியமான முதல் கூட்டம் இதுதான் … Read more