15-வது நிதிக் குழு மானியமாக தமிழ்நாட்டுக்கு ரூ.7,523.06 கோடி நிதி விடுவிப்பு…

டெல்லி:  15-வது நிதி ஆணையத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 7,523.06 கோடி ரூபாய் மானியத்தொகை விடுவிப்பு செய்துமத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 8,777.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.‘ நிதி ஆணையம் (Finance Commission) என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 280-இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும், இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான வரி வருவாய்களைப் பகிர்வதற்கும், மாநிலங்களின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கும் பரிந்துரைகளை வழங்குகிறது, மேலும் இது ஒவ்வொரு … Read more

யார் அந்த சார்? புகழ் ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம்…

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட  யார் அந்த சார்? புகழ் திமுக நிர்வாகி ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்,   அதே பல்கலையில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஞானசேகரன் என்ற பிரியாணி கடை வியாபாரியான திமுக அனுதாபி,  இருவரையும் மிரட்டி, … Read more

2026 சட்டமன்ற தேர்தல்: தமிழ்நாடு பா.ஜ.க பொறுப்பாளர்கள் 3 பேர் நியமனம்

சென்னை: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ள நிலையில், பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளது. 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள  சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக தொகுதி பங்கீடு மேலும் சில கட்சிகளை சேர்க்கும் வகையில்,   பாஜக தேசிய தலைமை தமிழ்நாடு  பா.ஜ.க  பொறுப்பாளர்களாக 3 மத்திய அமைச்சர்களை நியமனம் செய்துஅறிவித்து உள்ளது., அதன்ப, தேர்தல் பொறுப்பாளராக  … Read more

கருணை அடிப்படையில் அரசு பணியில் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளை கேட்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி:  கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுபவர்கள் பின்னர் உயர் பதவியைக் கோர முடியாது என தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. “கருணை அடிப்படையில் பதவிக்கு விண்ணப்பிப்பவர் உயர் பதவிக்குத் தகுதி பெற்றவராக இருக்கலாம், ஆனால் அதற்காக அந்தப் பதவியில் நியமிக்கப்படுவதற்கு அவருக்கு உரிமை உண்டு என்று அர்த்தமல்ல,” என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. மேலும்,   கருணை அடிப்படையில் அரசு பணி கிடைக்கப்பெற்றவர்கள், அதே கருணையை காரணம் காட்டி உயர் … Read more

மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை! நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வாதம்

மதுரை: மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை, இதுபோன்ற  தூண் சமண மலையிலும் உள்ளது என்றும்   நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வாதம் செய்தது. திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (டிசம்பர் 15) 2வது நாளாக நடந்து வருகிறது. மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், … Read more

சென்னை வரை பரவிய காற்று மாசு… சிக்கலை சமாளிக்க GRAP தரச் செயல் திட்டம் அமலாகுமா ?

டெல்லியில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் காற்று மாசு மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம் தொடங்கி குளிர்காலம் வரும்போது, டெல்லியின் காற்று மாசு தேசிய அளவில் விவாதமாக மாறுகிறது. காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக டெல்லி உள்ளபோதும் அதிகம் பேசப்படாத தெற்கு மற்றும் மேற்கு இந்திய நகரங்களிலும் சமீப காலமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையில் காற்று மாசு அதிகரித்தது நாடு முழுவதும் … Read more

சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,000 கோடி கடன்!

சென்னை: சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன்  ( $240 Million Loan )வழங்கி உள்ளது. சென்னையில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக அல்லல்பட்டு வந்த மக்களிடையே  மெட்ரோ ரயில் சேவை பெரும், வரவேற்பை  பெற்றுள்ளது. இதன் காரணமாக மெட்ரோ ரயில் சேவை புறநகர்  பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  சென்​னை​யில்  ஏற்கனவே முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையை தொடர்ந்து, தற்போது 2ம் … Read more

தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம் – 100% பதிவேற்றம்! தேர்தல் ஆணையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம்  செய்யப்பட்டு,  அவை பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டு,  இணையதளத்தில் 100% பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இம்மாதம் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியர் சீர்திருத்த பணிகள் (எஸ்ஐஆர்)   நவம்பர்  4ந் தேதி முதல் டிசம்பர் 4ந்தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.  இதற்கான அரசு அலுவலகர்கள் வீடு வீடாக சென்று எஸ்ஐஆர் பாரங்களை கொடுத்து,  அதை பூர்த்தி செய்ய … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 45

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 45 பா. தேவிமயில் குமார்   மழைக் காதலன் யாரிடம் கோபம் எதற்காக கண்ணீர்? என்னோடு வா!! தூரத்தில் இருந்த நீ எனக்கு துணையாக மாறினாய்! கார்முகில் துண்டால் என் கருங்கூந்தல் துவட்ட வந்தாயோ?? என்வீட்டு முற்றம் முன்பாக உனை மறந்து நிற்பதேன்?? உனை தடுப்பது யார்? கலர் குடை பிடித்து காதலனே உனை கரம் பற்றிடுவேன்!! பருவம் தவறாது எனை பார்க்கவே பயணம் செய்து வருகிறாயோ? மழைக் … Read more

மீண்டும் கைது? சவுக்கு சங்கர் வீட்டை சுற்றி போலீஸ் குவிப்பு….

சென்னை: பிரபல பத்திரிகையாளரான சவுக்கு சங்கர் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.   அவரை  கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை முடிவு செய்துள்ளது.  இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல யுடியூபரான சவுக்கு சங்கர்,  திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.  மேலும் காவல்துறையினரின் அராஜகம்  அத்துமீறல் உள்பட பல தகவல்களை மக்களிடையே வெளியிட்டு வருகிறார்.  இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சமூக ஊடங்களிலும் அவரது பேட்டி, வீடியோ வைரலாகி … Read more