நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி…

இம்பால்: பிரதமர் மோடி நாளை மணிப்​பூர் செல்ல  இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையொட்டி,  அங்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் பலப்​படுத்​தப்​பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொடிய இன வன்முறை நடந்த மணிப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கால் பதிக்க உள்ளார். மேலும், ரூ.8,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார். மணிப்பூரில் கடந்த இரு ஆண்டுகளாக இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில், இதில் 250-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர்.  இதையடுத்து மத்திய பாதுகாப்பு … Read more

மாணவர் மட்டும் சிறப்பு பேருந்து திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு…

சென்னை: மாணவர் மட்டும் சிறப்பு பேருந்து திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  இந்த திட்டத்தை முறையாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.  அரசு மற்றும்  அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பொதுப் பேருந்துகளில் சந்திக்கும் நெரிசலைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேகமாக இயக்கும் பேருந்துகள் சேவையை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.  இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 25 அரசு உதவிபெறும் … Read more

சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி 12ந்தேதி தொடக்கம்…!

சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி 12ந்தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சி சுமார் 25 நாட்கள் நடைபெறுகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி மதி விற்பனைக் கண்காட்சி நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் 12.09.2025 முதல் 05.10.205 வரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு … Read more

சென்னையில் தினசரி 10ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு! டெண்டர் கோரியது மாநகராட்சி…

சென்னை: சென்னையில் தினசரி 10ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும்  வகையில், சென்னை மாநகராட்சி  டெண்டர் கோரி உள்ளது. சென்னையில் தூய்மை பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 11 மண்டலங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் மேலும் 2 மண்டலங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டன. இதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மீதமுள்ள இரண்டு மண்டலங்களையும் தனியாருக்கு தாரை வார்க்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. … Read more

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் வெடிபொருட்களுடன் கைது!

ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடன் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய  5 பயங்கரவாதிகள்  வெடிபொருட்களுடன் கைது செய்யப் பட்டுள்ளனர். இதன் காரணமாக பெரும்  சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து, ஐஇடி வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பதற்காக  வைத்திருந்த பொருள்களையும் காவல்துறை யினர் பறிமுதல் செய்துள்ளனர். தலைநகர் டெல்லியில், hயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து மத்திய புலனாய்வுத் துறையிடம் இருந்து வந்த தகவலைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக  பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை … Read more

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்! உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: நடிகர் சங்க தேர்தல்  நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,   நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?  கேள்வி எழுப்பி உள்ளது.  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி  தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவி காலம் 2024-ம் ஆண்டு முடிவடைந்தது. இதையடுத்து புதிய தேர்தல் நடத்தப்படாமல், அவர்களுக்கே பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து,  நடிகர் சங்க உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் … Read more

‘ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் ‘ என பொருள்! தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

ஓசூர்: ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என ஓசூர் தொரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் எனப்பொருள் என்பதால் உறுதியுடன் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே ருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் அமைய உள்ள ஓசூர் விமான நிலையத்துக்கு, சூளகிரி தாலுகாவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.  இதை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்  இன்று தொடங்கியுள்ள முதலீட்டாளர்கள் … Read more

ஆளுநரிடம் மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் மீது எப்படி குற்றம் கூற முடியும்! உச்சநீதிமன்றம்…

டெல்லி: பல ஆண்டுகளாக ஆளுநரிடம் மசோதாக்கள் நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் தவறான எச்சரிக்கையை எழுப்புகின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்?  என மத்திய அரசிடம்  உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை சரி பார்க்க மாட்டோம் என்றும் கூறியது. முன்னதாக, எதிர்க்கட்சிகள் ஆளும் கர்நாடகா, பஞ்சாப், கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் செவ்வாய்க்கிழமை  விசாரணையின்போது,  உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா அரசியலமைப்பிற்கு … Read more

லைட்டா கண் அசந்தேன்… வேலை நேரத்தில் தூங்குவதை பெரும்பாலான பைலட்டுகள் ஒப்புக்கொண்டுள்ளனர்…

ஜெர்மனியைச் சேர்ந்த வெரினிகுங் காக்பிட் தொழிற்சங்கம் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் பெரும்பாலான பைலட்டுகள் வேலை நேரத்தில் கண் அயர்வதை ஒப்புக்கொண்டுள்ளனர். விமானப் பயணங்களின் போது தூங்குவது அதன் உறுப்பினர்களுக்கு “கவலைக்குரிய யதார்த்தமாக” மாறிவிட்டது, இது அத்துறையில் “அதிகரித்து வரும் சோர்வு” குறித்த எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளது. 900 க்கும் மேற்பட்ட விமானிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 93 சதவீதம் பேர் ஒருமுறையாவது தூங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். 44 சதவீதத்தினர் வழக்கமாக தூங்குவதாகவும், 12 சதவீதம் பேர் ஒவ்வொரு பயணத்தின் … Read more

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை நடத்துவது நாட்டின் கண்ணியத்திற்கும் மக்களின் உணர்வுக்கும் எதிராக தவறான செய்தியை வழங்குவதாக உள்ளது என ஊர்வசி ஜெயின் தலைமையிலான நான்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பான மனு நீதிபதிகள் ஜே.கே. … Read more