ஜெயலலிதா மரணம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு இட்டுள்ளது. ஜெயலலிதா ஃபால்லோயர்ஸ் கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான பி ஏ ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்   தாக்கல் செய்த மனுவில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி A.ஆறுமுகசாமி ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. ஆணையம், தனது அறிக்கையை … Read more

வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து : மின் உற்பத்தி பாதிப்பு

மீஞ்சூர் வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.   சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இதில் 2-வது யூனிட்டில் இரண்டாவது அலகில் உள்ள ஜெனரேட்டர் செயல்பட்டு டிரான்ஸ்பார்மருக்கு மின் கடத்தப்பட்டு தேவையான அளவிற்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. … Read more

‘ஜவான்’ பட ரிலீஸை அடுத்து திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்த ஷாருக்கான்

‘ஜவான்’ படம் செப்டம்பர் 7 ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார் ஷாருக்கான். மனைவி கவுரி கான் மகள் சுஹானா கான் என குடும்பத்துடன் சென்ற ஷாருக்கான் அதிகாலை சுப்ரபாத சேவையின் போது சாமி தரிசனம் செய்தார். ஷாருக்கான் குடும்பத்துடன் நயன்தாராவும் தனது குடும்பத்துடன் திருமலை சென்றது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் சாமி தரிசனம் செய்தது எப்படி என்று கேள்வி எழுப்பப்பட்டு … Read more

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட வேண்டும்… ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்…

சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையாக்கப்பட்டது.   இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 196 பிரிவின் கீழ் அமைச்சர் உதயநிதி மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

புறநகர்ப் பகுதியில் மழை : சென்னை ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் சென்னை ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது.. இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரையிலான 24 … Read more

ஆன்லைன் மோசடி : இந்தியாவில் 72 லட்சம் வாட்ஸ் அப்  கணக்குகள் தடை

 ல்லி ஆன்லைன் மோசடி காரணமாக இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 72,28,000 வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக ஆன்லைன் வாயிலாக நடைபெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலான ஆன்லைன் மோசடிகள் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு நிகழ்த்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் 72 லட்சத்து 28 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கணக்குகள் ஆன்லைன் மோசடி … Read more

தமிழகத்தில் புதிய இ-ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு பெர்மிட் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!

சென்னை: தமிழகத்தில் புதிய இ-ஆட்டோரிக்ஷாக்களுக்கு பெர்மிட் வழங்க 8 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்துள்ளது.  இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்கும் ஆட்டோரிக்ஷாக்களை பதிவு செய்ய அனுமதிக்க மாநில போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டு மாசு அதிகரிப்பதை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழ்நாடு அரச, தற்போது,  இ-ஆட்டோ ரிக்ஷாக்கள், இ-டாக்சிகள் ஆகியவற்றை பதிவு செய்யும் வகையில் தமிழக அரசு கொள்கையில் திருத்தம் செய்துள்ளது.  அதன்படி, பசுமை வாகனங்களை ஊக்குவிப்பது மற்றும் ஒழுங்குமுறை … Read more

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா… பிரபலங்களுக்கு மிரட்டல் விடுப்பதை வேலையாகக் கொண்டவர்…

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா இதற்கு முன் பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் யாதவ் மற்றும் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு மிரட்டல் விடுத்து சர்ச்சை ஏற்படுத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. உ.பி. மாநிலம் அயோத்தியில் இருந்துகொண்டு நாடுமுழுவதும் உள்ள பிரபலங்களை மிரட்டி வரும் இவரை அந்த மாநில அரசோ அல்லது மத்திய பாஜக அரசோ இதுவரை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. சனாதன கோட்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் … Read more

உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது… ரோஹித் சர்மா கேப்டன்

உலகக்கோப்பை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியல் இன்று வெளியானது. அக்டோபர் 5 ம் தேதி துவங்க உள்ள உலகக்கோப்பை போட்டிகள் நவம்பர் 19 ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக் குழுவின் தலைவரான அஜித் அகார்கர் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். வீரர்கள் விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, … Read more

65 பேருக்கு மீன்வளத்துறை ஆய்வாளர் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 65 பேருக்கு மீன்வளத்துறை ஆய்வாளர் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மீனவளத்துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன்படி,   தமிழகம் முழுவதும் மீன்வளத்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 பேருக்கு  பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.