அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்) திருக்கோயில், திருப்புனவாசல்

அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்) திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசலில் அமைந்துள்ளது. “ஓம்” என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார். இலிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் “பிரம்ம தீர்த்தம்” என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், இலிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் … Read more

இரட்டை முக பைரவர், பெரிச்சிகோயில்

இரட்டை முக பைரவர், சிவகங்கை மாவட்டம், பெரிச்சிகோயிலில் அமைந்துள்ளது. ஒருமுகம் கொண்ட பைரவரையே தரிசனம் செய்திருப்பீர்கள். பைரவரை மூலவராகக் கொண்ட திருவாரூர் மாவட்டம் தகட்டூர் கோயிலில் கூட பைரவரை ஒருமுகத்துடன்தான் தரிசிக்க முடியும். ஆனால், முன்னும் பின்னுமாக இரண்டு முகங்களுடன் காட்சி தரும் கோயிலை அஷ்ட பைரவத்தலங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோயிலில் காணலாம். இப்பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஒருசமயம், ஒரு போரில் வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக, சிவனுக்கு கோயில் … Read more

பிப்ரவரி 12: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 267-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 267-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை.. இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதல்

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி நேற்று முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது. அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, … Read more

சென்னையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் சிரமம்

சென்னை: சென்னையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவி வருவதால் அதிகாலையில் வாகனத்தை ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். கோயம்பேடு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு பயணம் செய்கின்றனர். சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது.

ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு அபராதம்

புதுடெல்லி: விதிமுறை மீறல் தொடர்பாக ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விமானகளின் பயிற்சி தொடர்பான விதிமுறைகளை மீறியதாக ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ஏர் ஆசிய நிறுவன பயிற்சி தலைவரை மூன்று மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் 67.73 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.81 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.99 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.98 கோடி ஒதுக்கீடு!

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்படி, ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கடற்பாசி பூங்காக்கள் அமைக்க ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையிலும் மூத்த குடிமக்கள், குழந்தைகள் பயன்படுத்தும் … Read more

106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

சென்னை: நெல்மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில், 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ரூ. 105.08 கோடி மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து,  , … Read more

ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாத கார் ஓட்டுநருக்கு அபராதம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்திம் அருகே  ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாத கார் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறாம் தேதி புங்கம்பள்ளி கிராமத்தில் மூன்று மாத குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டது. இந்நிலையில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்சுக்கு வழி விடாமல், ஆம்புலன்சை முந்திக் கொண்டு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பல கிலோ மீட்டர் வரை ஆம்புலன்ஸ்-க்கு வழி விடமால் கார் சென்றுள்ளதை அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள், அந்த காருக்கு அபாரதம் விதித்தனர். … Read more