டெல்லி மெட்ரோ ரயிலில் சிறுமி முன் சுயஇன்பத்தில் ஈடுபட்டதாக ஒருவர் கைது…

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரக்ஷாபந்தன் பண்டிகையை ஒட்டியை அடுத்து விடுமுறை தினமான நேற்று டெல்லி மெட்ரோ ரயிலில் கூட்டம் அலைமோதியது. ரித்தாளா முதல் ஷாஹீத் ஸ்தல் வரை உள்ள ரெட் லைன் வழித்தடத்தில் சென்ற மெட்ரோ ரயிலில் இரவு 8:30 மணி அளவில் கூட்ட நெரிசலில் பயணம் செய்த சிறுமியிடம் ஒருவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு சுயஇன்பத்திலும் ஈடுபட்டுள்ளான். சீலாம்பூர் ரயில்நிலையத்தில் இறங்க … Read more

எந்த வேறுபாடும் இல்லாத இந்தியா கூட்டணி கட்சிகள் : சஞ்சய் ராவத்

மும்பை சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் இந்தியா கூட்டணிக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை எனக் கூறி உள்ளார். இன்று மும்பை நகரில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமில்லாதது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கூறி உள்ளது. அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் , ”காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையின் கீழ் நாடு பணியாற்ற விரும்புகிறது.  ஆனால் பாஜகவில் பயம் நிலவுகிறது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 2024 … Read more

கர்நாடக மாநிலத்தில் தண்ணீரே இல்லை : டி கே சிவகுமார் அதிரடி

டில்லி கர்நாடக மாநிலத்தில் தண்ணீரே இல்லை என அம்மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் கூறி உள்ளார். தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்குத் திறந்துவிடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று முன் தினம் உத்தரவிட்டு இருந்தது. தற்போது இதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார் அவசரமாக டில்லி சென்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து … Read more

செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்…

செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடும் நிலையில் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 அமர்வுகள் மட்டுமே நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள விஷயங்கள் குறித்து எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்ற போதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுமா … Read more

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மீதான பொங்கல் பரிசு முறைகேடு வழக்கு! செப்.11-ல் இறுதி விசாரணை

சென்னை: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்கியதில்  முறைகேடு நடைபெற்றதாக  அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமிமீது தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 11ந்தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதரு. திமுக ஆட்சிக்கு பிறகு, கடந்த ஆண்டு (2022) பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளjக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. … Read more

காலை உணவுத் திட்டம் பற்றி அநாகரீகமாக செய்தி வெளியிட்டது குறித்து தினமலர் ஆசிரியர் விளக்கம்…

தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு தமிழக முதலமைச்சர் தொடங்கி தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி… pic.twitter.com/M8H94rVn68 — … Read more

ஆட்சியாளர்களுக்கு ஏற்ப விஜிலென்ஸ் துறை பச்சோந்தியாக மாறுகிறது! ஓபிஎஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்…

சென்னை: அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் அடுத்தடுத்து  ரத்து செய்யப்படுவது குறித்து  அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆட்சியாளர்களுக்கு ஏற்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையான  விஜிலென்ஸ் துறை பச்சோந்தியாக மாறியுள்ளது என ஓபிஎஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கடந்த  2001 முதல் 2006 ஆண்டுக்கு இடையே அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த ஓபிஎஸ் மீது,  வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.73 கோடி சொத்து சேர்த்ததாக, அடுத்து வந்த திமுக ஆட்சியில்  வழக்கு தொடரப்பட்டது.  … Read more

செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1…!

பெங்களூரு: சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயார் செய்துள்ள ஆதித்யா எல்-1 செயற்கை கோள் செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது . அன்றைய தினம் காலை 11.50 மணிக்கு  ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது. விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1-ன் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த ஆதித்யா எல்1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே … Read more

மக்களவை செயலகம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கத்தை ரத்து செய்தது

டில்லி காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடை நீக்கத்தை மக்களவை செயலகம் ரத்து செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த தொடரில் மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பி இருந்தன.   இதனால் பலமுறை அவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடரின் நிறைவு நாள் அன்று மக்களவையில் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் … Read more

புதுவையில் எரிவாயு விலை ரூ.500 குறைப்பு : முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எரிவாயு விலையில் ரூ.500 குறைத்து உத்தரவிட்டுள்ளார்.   நேற்று வீட்டு உபயோக ஏரோவாயு சிலிண்டருக்கு ரூ.200, மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ரூ.400 என விலையைக் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த விலைச் சலுகை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று புதுச்சேரியில் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 குறைத்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ”சிவப்பு அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானிய குறைப்பும் சேர்த்து … Read more