எல்.ஐ.சி. கடந்த ஆண்டைவிட 27% உயர்வு, வரிக்குப் பிறகு 3வது காலாண்டு லாபம் ரூ.6,334 கோடி…

டெல்லி: LIC Q3 லாபம் கடந்த ஆண்டின் காலாண்டை விட 27 மடங்கு உயர்ந்துள்ளது, Q3 PAT ரூ 6,334 கோடியாக உயர்ந்துள்ளது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) 2.47% முன்னேறி ரூ. 628.50 ஆக இருந்தது,  நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ. 6,334.2 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. டிசம்பர் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் காப்பீட்டாளரின் மொத்த பிரீமியம் வருமானம் 14.51% அதிகரித்து ரூ.1,11,787.60 கோடியாக இருந்தது, முந்தைய ஆண்டின் இதே … Read more

திமுக எம்.பி. ஆ.ராசா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 22ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: திமுக எம்.பி. ஆ.ராசா தீமதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையின்போது, நாடாளுமன்றம் நடைபெறுவதை ராசா தரப்பு காரணம் காட்டியதால் வழக்கை சிறப்பு நீதிமன்றம் வரும் 22ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. திமுக துணை பொதுச்செயலாளரும், தற்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசாவுக்கு சொந்தமான இடங்களில் சென்னை, திருச்சி, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. சுமார் … Read more

2047க்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற பிஎஃப் அமைப்பு முயற்சி! ஏடிஎஸ் குற்றப்பத்திரிகையில் தகவல்..

மும்பை: 2047க்குள் இந்தியாவை ஷரியாவுக்கு இணங்க இஸ்லாமிய நாடாக மாற்ற PFI விரும்புகிறது என மகாராஷ்டிர ஏடிஎஸ் (Maharashtra Anti-Terrorist Squad (ATS)) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து உள்ளது. அதாவத, கலப்பு திருமணம் (லவ்ஜிகாத்) மூலம் இஸ்லாமிய சமூகத்தை பெருக்க திட்டமிட்டு வந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு 5 ஆண்டுகள் … Read more

பிப்ரவரி 11: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 266-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 266-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில்

அரங்கநாதரின் பக்தனான நங்கசோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும்படி ரங்கநாதர் அனுப்பினார். ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, “கமலவல்லி” (கமலம்– தாமரை) என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் … Read more

பிபிசி-க்கு தடை விதிக்கக்கோரிய மனு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி…

டெல்லி:  பிரதமர் மோடிக்கு ஆவணப்படம் வெளியிட்டு பிபிசி இந்தியாவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்தியாவில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிபிசி நிறுவனம், 20ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கோத்ரா ரெயில் சம்பவம் தொடர்பாக, தற்போதைய பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் … Read more

புதிதாக பொறுப்பேற்ற மாவட்டஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்..!

சென்னை: முதலமைச்சரின் களஆய்வுக்கு பிறகு சில மாவட்ட கலெக்டர்கள்  மாற்றப்பட்டு புதிய கலெக்டர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்களுக்கு தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு  தலைமை செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், புதிதாக பொறுப்பேற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஆட்சிப் பணியில் பலரும் இணைவதற்கு ஆட்சித் தலைவர் பணியே அச்சாரமாக அமைந்திருக்கிறது. அதுவே பலரையும் இப்பணிக்கு ஈர்க்கும் உந்து சக்தியாகவும் விளங்குகிறது. இப்பணியில் நீங்கள் ஆற்றும் … Read more

238 வாக்குச்சாவடிகள்: ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டி!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். இந்த  இடைத்தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பதிவு செய்ய  238 வாக்குசாவடிகளும்,  1,404 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு,  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி … Read more

கொரோனாவால் பெற்றோரை இறந்த அனைவருக்கும் வேலை – வட்டியில்லா கடன், ரூ.500க்கு கேஸ்! ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: கொரோனாவால் பெற்றோர் இறந்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும், ரூ.500க்கு கேஸ், குடும்ப காப்பீடு ரூ.25லட்சமாக உயர்வு, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், விவாயிகளுக்கு 200யூனிட் இலவச மின்சாரம் உள்பட ஏராளமான அறிவிப்புகளை  ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு  இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்தநிலையில், இன்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த … Read more

சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள் – தர்மஅடி வாங்கும் தமிழ்நாடு காவல்துறை! ஜெயக்குமார் கடும் விமர்சனம்…

ஈரோடு: தலைமைச் செயலத்தில் தேர்தல் ஆணையரை சந்தித்துவிட்டு திரும்பிய ஜெயக்குமார், சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள் என்று விமர்சித்ததுடன், டிடிவி கூறியதுபோல,  இரட்டை இல்லை சின்னத்திற்கு மவுசு குறையவில்லை, என கூறியவர், தமிழ்நாடு அரசு காவல்துறை, பொது மக்களிடம் தர்ம அடி வாங்கும் காவல் துறையாக  உள்ளது என்றும் விமர்சித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற … Read more