கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்…

மதுரை: மதுரை மீனாட்சிஅம்மனை தரிசித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும் தெரிவித்தார். மறைந்த தமிழ்நாடு முதல்வர்  “ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய இடமாகவும் இருந்து வந்த கோடநாடு எஸ்டேட்டில், அவரது மறைவுக்கு  பிறகு 2017, ஏப்ரல் 24ஆம் தேதியன்று  கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதில், அங்கிருந்த காவல்காரர்  ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு காவலாளியான  கிருஷ்ணபகதூர் என்பவர் … Read more

திருச்சியில் இருந்து ஐதராபாத்துக்கு 60 மாணவா்கள் விமானப் பயணம்! பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு…

திருச்சி:  அரசு பள்ளிகளின் தரத்தை உயர்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வரும் பள்ளிக்கல்வித்துறை, சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு, திருச்சி யில் இருந்து ஐதராபாத்துக்கு 60 மாணவா்களை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதும், அரசு பள்ளிகள் மற்றும் மாணவ மாணவிகளின் தரம் உயர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு (2022) மாணவர்களுக்கு இணையவழி வினாடி வினா போட்டிகளை நடத்தி, மாவட்ட மற்றும் மாநில அளவில் வினாடி … Read more

சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மோடி அரசு போலியான நல்லெண்ணத்தை காட்ட வருகிறது என கார்கே கண்டனம்…

டெல்லி: மத்தியஅரசு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும்  நிலையில்,  மக்களிடையே மோடி அரசு போலியான நல்லெண்ணத்தை காட்ட வருகிறது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், மத்தியஅரசு ரூ. 200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ200 குறைக்கப்படுவதாக  அறிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் … Read more

முதல்வர் இன்று சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் ஆய்வு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். தமிழகத்தில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் அதற்கு முன்னேற்பாடாக மழைநீர் தேங்காமல் இருக்கப் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். சென்னையில் பாடி, திரு.வி.க. நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை … Read more

மீண்டும் மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு : இருவர் மரணம் – 7 பேர் படுகாயம்

இம்பால் மீண்டும் மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம் அடைந்து 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்து  இதனால்  அங்கு கடும் வன்முறை ஏற்பட்டது.  இதனால் அங்குள்ள மக்கள் மட்டுமின்றி நாடே கடும் பீதியில் ஆழ்ந்தது. மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் … Read more

15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு

டில்லி கர்நாடகாவுக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. இன்று டில்லியில் காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசு நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் காவிரியில் … Read more

கடலூர் மாவட்டத்தில் பாமக ஆண்டு விழா கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

 ன்னை சென்னை உயர்நீதிமன்றம் பாமகவின் 35ஆம் ஆண்டு விழா கூட்டத்தைக் கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி துவங்கி 35 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த பாமக சார்பில் அனுமதி  கோரப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கடலூரில் அண்மையில் என்.எல்.சிக்கு எதிராக பாமக போராட்டம் நடத்திய இடத்திலேயே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டதால், அங்குச் சட்டம் … Read more

நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடக்கம்

திருவண்ணாமலை நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இந்தக் கோவில் விளங்குகிறது. மலையையே இந்த திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடப்படுகிறது. எனவே அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நாளை … Read more

போலி இந்திய பாஸ்போர்ட்டுடன் 8 வருடங்கள் : வங்கதேச நபர் கைது

டில்லி போலி இந்திய பாஸ்போர்ட்டுடன் 8 வருடங்களாகச் சுற்றிய வங்கதேச நபர் டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் தென் கொரியாவில் இருந்து இந்தியா வந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை டில்லியில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.  பாஸ்போர்ட்டில் அவருடைய பெயர் அனுபம் சவுத்ரி என்றும் மராட்டிய மாநிலம் நாக்பூரைப் பூர்விகமாகக் கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பயணியிடம் நடந்த விசாரணையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருடைய நிஜ பெயர் … Read more

கோரண்டன் விமானங்களில் அடல்ட் ஒன்லி பகுதி அமைக்கத் திட்டம்

ஆம்ஸ்டர்டாம் கோரண்டன்  விமான நிறுவனம் தங்கள் விமானங்களில் வயது வந்தோர் மட்டும் பகுதி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. பொதுவாகச் சிலர் விமானங்களில் பயணம் செய்யும்போது குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக்கொண்டே பயணிப்பார்கள். வேறு சிலர் தங்களின் குழந்தைகளுடன் விளையாடுவார்கள். அவ்வப்போது குழந்தைகள் அழுகை சத்தமும் கேட்கும். அமைதியாக பயணிக்க விரும்புவோருக்கு இத்தகைய சூழல் இடையூறாக இருக்கும். இது தொடர்பாக சில சமயங்களில் வாக்குவாதமும் ஏற்படுகிறது. ஆகவே, குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக பயணிக்கும் நபர்களுக்கு, குழந்தைகளின் சத்தம் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க விமானங்களில் … Read more