உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம்!

டெல்லி:  உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். இதனால், மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக முழுமையடைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. இதில் காலியாக உள்ள நீதிபதிகளை நிரப்ப கொலிஜியம் பரிந்துரைத்து வந்தது. அதன்படி, கடந்த வாரம் 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, தற்போது மேலும்  இரண்டு நீதிபதிகளை  உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு நியமித்துள்ளது. அதன்படி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக … Read more

அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்! பாஜகவை சாடிய எடப்பாடி பழனிசாமி…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? என பாஜகவை எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு என இரு தரப்பினரும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், கூட்டணி கட்சியான பாஜக இரு அணியினரும் ஒன்றிணைந்து செயலாற்ற அழைப்பு விடுத்தது. ஆனால், அதை இபிஎஸ் ஏற்க மறுத்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பின்படி, தனது … Read more

பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளிக் கல்லூரி மாணவிகள்! இது நெல்லை சம்பவம்…

நெல்லை: போதிய பேருந்து வசதிகளை அரசு ஏற்படுத்தி தராததால், உயிரை பணயம் வைத்து, பேருந்திகளில் தொங்கியபடி பயணம் செய்து வருவதாக  பள்ளிக் கல்லூரி மாணவிகள் கூறியுள்ளனர். இந்த சோக சம்பவம், நெல்லை மாவட்டத்தில் அரங்கேறி வருகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதிகளை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தினால், அதை சென்னை போன்ற பெருநகர மக்கள்தான் அனுபவித்து வருகின்றனர். மற்ற நகரங்களில் போதுமான பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை என்பதே உண்மை நிலவரம். பெண்களுக்கு கல்விச் சலுகைகளை கொடுக்கும் தமிழ்நாடு … Read more

சமூக விரோதிகளின் கூடாரமான சென்னை சுடுகாடுகள்: மேயர் பிரியா அதிரடி உத்தரவு…

சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள பல சுடுகாடுகள் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், குற்றவாளிகளின் புகலிடமாகவும் திகழ்கின்றன. இதையடுத்து, மாநகராட்சி  மேயர் பிரியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மயானங்களில் சிசிடிவி காமிரா உள்பட சமூக விரோதிகள் பயன்படுத்த முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் கட்டணமில்லா சேவைகளை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன வசதிகளுடன் அழகுபடுத்தி பராமரித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம்  மேயர் பிரியா தலைமையில் … Read more

பலி எண்ணிக்கை 21ஆயிரத்தை கடந்தது: நிலநடுக்கத்தால் துருக்கி 5முதல் 10மீட்டர் வரை இடம் பெயர்வு!

துருக்கி மற்றும் சிரியாவில்ஏற்பட்ட சக்திவாய்த்ந நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில், துருக்கி  நிலநடுக்கம் காரணமாக  5 முதல் 10 மீட்டர் வரை துருக்கி இடம் பெயர்ந்ததாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 6ந்தேதி) அதிகாலை 4.17 மணியளவில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்த ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் … Read more

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை!

சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதை மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு உறுதிப்படுத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து, இன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாக உள்ளது. இன்று பிற்பகல் 3மணிக்கு மேல் வேட்புமனு தாக்கல் தொடர்பான இறுதி பட்டியல் மற்றும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம்  வெளியிடப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு … Read more

‘ஆசாதி சாட்’ உள்பட 3செயற்கை கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ திட்டமிட்டபடி இன்று காலை  9:18க்கு மணிக்கு எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இதில் பள்ளி மாணவர்கள் தயாரித்த ஆசாதி சாட் உள்பட 3 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டு உள்ளன. புவி கண்காணிப்பிற்காக இஓஎஸ் 7, ஆசாதி சாட் 2 மற்றும் ஜேனஸ் 1 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களை புவிவட்ட சுற்றுப்பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்துகிறது.. இதில், இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட இஓஎஸ் 7 செயற்கைக்கோள் சுமார் 156 கிலோ எடை கொண்டதாகும். ஆசாதி சாட்2 செயற்கைக் கோளை, … Read more

சீனா, சிங்கப்பூர் விமானப் பயணிகள் RT-PCR பரிசோதனை கட்டாயம் இல்லை

புதுடெல்லி: சீனா, சிங்கப்பூர் விமானப் பயணிகள் RT-PCR பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மகான்களில் உலக நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சீனாவின் கணக்கிட முடியாத அளவிற்கு கொரோனா பரவல் இருந்தாகவும், லட்ச கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின. சீனாவை தொடர்ந்து ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. … Read more

வார ராசிபலன்: 10.2.2023  முதல் 16.2.2023  வரை! வேதாகோபாலன்

மேஷம் வேலையில் இருந்த பிராப்ளம்ஸ்லாம் முடிவுக்கு வரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவை. பேச்சில் நிதானம் வெரி மச் அவசியம். அவசரப்பட்டு பிராமிஸ் செய்து மாட்டிக்க வேணாம். குடும்பத்துல உள்ளவங்களுடன் பேசும் போது நிதானம் தேவை விட்டுக்கொடுத்து செல்லவும். பிசினஸ்ல பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேணாங்க. கூடுதல் விழிப்புணர்வு தேவை. ப்ளீ’ஸ். பி கேர்ஃபுல். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு சேரும். தடைபட்டு வந்த காரியங்கள் தடைநீங்கி நல்லமுறையில் நடக்கும். பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் … Read more

எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டா: எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இஸ்ரோவின்’ புவி கண்காணிப்பு உட்பட மூன்று சிறிய செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான, ‘கவுன்ட் டவுன்’ இன்று அதிகாலை துவங்கியது.