சீனா, சிங்கப்பூர் விமானப் பயணிகள் RT-PCR பரிசோதனை கட்டாயம் இல்லை

புதுடெல்லி: சீனா, சிங்கப்பூர் விமானப் பயணிகள் RT-PCR பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மகான்களில் உலக நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சீனாவின் கணக்கிட முடியாத அளவிற்கு கொரோனா பரவல் இருந்தாகவும், லட்ச கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின. சீனாவை தொடர்ந்து ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. … Read more

வார ராசிபலன்: 10.2.2023  முதல் 16.2.2023  வரை! வேதாகோபாலன்

மேஷம் வேலையில் இருந்த பிராப்ளம்ஸ்லாம் முடிவுக்கு வரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவை. பேச்சில் நிதானம் வெரி மச் அவசியம். அவசரப்பட்டு பிராமிஸ் செய்து மாட்டிக்க வேணாம். குடும்பத்துல உள்ளவங்களுடன் பேசும் போது நிதானம் தேவை விட்டுக்கொடுத்து செல்லவும். பிசினஸ்ல பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேணாங்க. கூடுதல் விழிப்புணர்வு தேவை. ப்ளீ’ஸ். பி கேர்ஃபுல். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு சேரும். தடைபட்டு வந்த காரியங்கள் தடைநீங்கி நல்லமுறையில் நடக்கும். பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் … Read more

எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டா: எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இஸ்ரோவின்’ புவி கண்காணிப்பு உட்பட மூன்று சிறிய செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான, ‘கவுன்ட் டவுன்’ இன்று அதிகாலை துவங்கியது.

உலகளவில் 67.69 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.77 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.94 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா காக்கிநாடாவில் எண்ணெய் தொட்டி சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு…

காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் செயல்பட்டு வந்த எண்ணை ஆலை ஒன்றின், எண்ணெய் தொட்டி சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பெத்தபுரம் மாவட்டம்  ஜி.ராகம்பேட்டை மண்டலத்தில்   அம்பதி சுப்பண்ணா எண்ணெய் தொழிற்சாலை  உள்ளது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள, 24 அடி ஆழமுள்ள எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதை … Read more

காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார்- 8ஆண்டுகளில் 8ஆயிரம் விவசாயிகள் தற்கொலை! தெலுங்கானா பெண் அரசியல்வாதிகள் பரபரப்பு பேச்சு…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இப்போதே தேர்தல் தொடர்பான நடவடிக்கை ளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகரராவின் மகள் ராவ் கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது,  காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் என தெரிவித்து உள்ளார். இதுவரை காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வந்த சந்திரசேகர ராவ், இந்த முறை, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி … Read more

குமரி திருவள்ளுவர் சிலையை காண கண்ணாடி இழைப் பாலம்! தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி

சென்னை:  தமிழ்நாடு அரசு, குமரியில் உள்ள விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழைப் பாலம் அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கு  தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி இழையினாலான கூண்டு பாலம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக அனுமதி கோரி  தமிழ்நாடு … Read more

6 மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை! சொல்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்

நாகர்கோவில்: 6 மாதத்திற்குள்  தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் இன்னும் 572 கிராமங்களில் 4ஜி சேவையே கிடைக்கவில்லை என்று மத்தியஅரசு, பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்க அமைச்சர் 6 மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இண்டர்நெட் சேவை வழங்குவோம் என கூறியுள்ளார். நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,  சைபர் செக்யூரிட்டி கொள்கையில் சில திருத்தங்கள் வேண்டும் என்று பல … Read more

162 தனியார் பள்ளிகள் அனுமதி பெறாமல் இயங்குவதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கம் தகவல்!

சென்னை: முறையான அனுமதி பெறாமல் இயங்கும் 162 தனியார் பள்ளிகளுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த பள்ளிகள் இயங்குவதை தடுக்கும் நடவடிக்கை குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.  இந்த சுயநிதி பள்ளிகள் (மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ., சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள்) மெட்ரிகுலேஷன் பள்ளிகள் … Read more

தடைசெய்யப்பட்ட திண்டுக்கல் பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ சோதனை!

திண்டுக்கல்: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததால், பிஎஃப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த நிலையில்,  திண்டுக்கல் அருகே பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்தியாவில் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்ற திட்டமிட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் … Read more