டிராவில் முடிந்த உலகக்கோப்பை செஸ், : நாளை வெற்றியை நிர்ணயிக்கும் ஆட்டம்

பாகு இன்று நடந்த உலகக் கோப்பை சென்ச் போட்டியின் இறுதிச் சுற்று டிராவில் முடிந்ததால் நாளை வெற்றியை நிர்ணயிக்கும் ஆட்டம் நடைபெறுகிறது/ அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் நம்ப ர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென்-இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர். மொத்தம் இரண்டு சுற்றுகள் கொண்ட இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் ஆட்டத்தின் 35-வது நகர்த்தலுக்குப் பிறகு முதல் சுற்று டிராவில் … Read more

FIDE செஸ் சாம்பியன்ஷிப் : பிரக்ஞானந்தா Vs மஃக்னஸ் கார்ல்சன் இன்றைய இரண்டாவது ஆட்டமும் டிரா..

FIDE உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் மஃக்னஸ் கார்ல்சன் இடையிலான இரண்டாவது ஆட்டமும் டிரா ஆனது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 35 நகர்த்தலுக்கு பின் டிரா ஆனது. இந்த நிலையில் இன்று இரண்டாவது ஆட்டம் துவங்கிய ஒரு மணி நேரத்துக்கு உள்ளாகவே இருவரும் தலா 30 நகர்த்தல்கள் செய்த நிலையில் டிரா செய்ய முடிவெடுத்தனர். இதனை அடுத்து நாளை டை பிரேக்கர் சுற்று நடைபெறுகிறது. இந்த சுற்றின் முடிவில் வெற்றி யாருக்கு … Read more

ஒரே நேரத்தில் இரு விமானங்களுக்கு சிக்னல் அளிப்பு : டில்லியில் அதிர்ச்சி

டில்லி டில்லி விமானநிலையத்தில் ஒரே நேரத்தில் இரு விமானங்களுக்கு  புறப்பட மற்றும் தரை இறங்க சிக்னல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டில்லியில் இருந்து மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா நகருக்கு செல்லும் யு.கே.725 விமானம் டில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அகமதாபாத் நகரில் இருந்து டில்லிக்கு வந்த ‘விஸ்தாரா’ விமானம், டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஒரே நேரத்தில் இந்த இரு விமானங்களுக்கும் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் சிக்னல் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு … Read more

அதிமுக மாநாடு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்

சென்னை: அதிமுக மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன என்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு என்பது 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகின்றனர். ஆனால் 50 ஆயிரம் பேர் தான் கலந்து கொண்டனர். அங்கு கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன. 5 மணி நேரம் கூட நடைபெறவில்லை. இது ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன்” … Read more

விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம்

சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. நடிகர் விஜயின் உத்தரவுப்படி நடைபெறும் உள்ள இந்த கூட்டத்தில் 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகளிர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, விவசாய அணி உள்ளிட 10 அணிகள் மற்றும் விஜய் மக்கள் மன்றத்தின் நகர, ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என நடிகர் விஜய், அந்த இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி … Read more

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் அரசியல் ஆலோசகர் வீடு உள்பட 2 மாநிலங்களில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

டெல்லி: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேலின் அரசியல் ஆலோசகர் வீடு உள்பட சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை  வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் நிதியமைச்சர் ராமேஷ்வர் ஓரோனின் மகன் மற்றும் மற்றவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.  ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி, தும்கா, தியோகர் மற்றும் கோடா மாவட்டங்களில் உள்ள சுமார் 34 வளாகங்களை மத்திய புலனாய்வு அமைப்பின் … Read more

தீபாவளி பண்டிகை: தீவுத்திடலில் 15நாட்கள் பட்டாசு விற்பனைக்கான தேதிகள் அறிவிப்பு…

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. விற்பனைக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி பண்டிகை.  பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, வண்ண வண்ண பட்டாசுகள் வெடித்து குதுகலமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்வர்.  பொதுவாக, இந்தியா பண்டிகைகளின் நாடு, அவ்வப்போது வரும் பல வகையான பண்டிகைகள் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் தீபாவளி பண்டிகைக்கு தனி … Read more

தமிழக மீனவர்கள்மீது தாக்குதல்: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில்,  தமிழக மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அதுபோல கடற்கொள்ளையர்கள் தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடத் தேவையான தூதரக … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி ராகுலின் லடாக் பயணம் : காங்கிரஸ்

லே இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி ராகுல் காந்தியின் லடாக் பயணம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த  ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 4 ஆயிரம் கி.மீ.க்கு நடைப்பயணம் மேற்கொண்டார். கடந்த 17 ஆம் தேதி ராகுல் காந்தி 2 நாள் பயணமாக லடாக் யூனியன் பிரதேசத்தில் உள லே பகுதிக்குச் சென்றார். பிறகு அவர்  பாங்காங் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு, கார்கில் பகுதிகளுக்குச் செல்வதற்காக மேலும் 4 நாட்களுக்கு தனது … Read more

முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் நாகை மாவட்டங்களுக்கு 3 நாள் பயணம்

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொள்ள உள்ளார். வரும் 25 ஆம் தேதி முதல் நாள் நிகழ்வாகத் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத் … Read more