தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை என்றும், நாடு முழுவதும் இதுவரை 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், 4ஜி சேவை குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில் அளித்தார். அப்போது,  நாட்டில் 93 சதவீதம் கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது எனவும் … Read more

அண்ணா பல்கலையில் அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்கள் நியமனம்! அன்புமணி ராமதாஸ் கடும் கண்டன்ம்

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு அரசு முறையாக பணி நியமனம் செய்யாமல், அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. இது  அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அவுட் சோர்சிங் முறைப்படியே பணியாளர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பணியாளர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகளை கண்டறிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மக்களுக்கு … Read more

ரயில் பயணிகளின் முன்பதிவு டிக்கெட் ரத்தால் மத்தியஅரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா?

டெல்லி: பயணிகளின் ரயில் பயணிகளின் முன்பதிவு டிக்கெட் ரத்தால் மத்தியஅரசுக்கு  ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் ரயில் டிக்கெட் முன்புதிவு  ஐஆர்சிடிசி ,இணைதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பலர் வெளி இடங்களுக்கு செல்ல 3 மாதங்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால், கடைசி நேர தவிர்க்க முடியாத காரணங்களால் ஏராளமானோர் முன்பதிவுகளை ரத்து செய்கின்றனர். இதற்காக குறிப்பிட்ட அளவு பணம் நமது புக்கிங் … Read more

ஈரோட்டில் பரபரப்பு: அதிமுக கூட்டம் நடத்திய திருமண மண்டபத்துக்கு ‘சீல்’…

ஈரோடு: ஈரோடு மாவட்டம் வைராபாளையத்தில்  அதிமுகவினர் கூட்டம் நடத்த பயன்படுத்திய மண்டபத்துக்கு அதிகாரிகள்  சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனுமதியின்றி கூட்டம் நடத்தியதால் சீல் வைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அங்கு 4 முனை போட்டி நிலவி வரும் நிலையில், திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்நத் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டம் … Read more

குட்கா-பான் மசாலா தடை ரத்து: தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை; மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் குட்கா-பான் மசாலா தடை  உத்தரவை ரத்து செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றல் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. மறைந்த ஜெயலலிதா முதலாமைச்சராக இருந்தபோது, கடந்த 2018ம் ஆண்டு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018-ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடை … Read more

சிவராத்திரியன்று மீனாட்சி அம்மனை தரிசிக்க முதன்முறையாக மதுரை வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

சென்னை: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக மதுரை வருகிறார். வரும் 18ந்தேதி சிவராத்திரி  அன்று பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க அவர் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்த மதுரையால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.  தமிழகத்தின் ஒரு மிக முக்கிய முத்திரையாக திகழ்கின்றது, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில். இந்த கோயிலால் மதுரையும், … Read more

ஓபிஎஸ் புலம்பல்: எடப்பாடி தரப்பு அதிமுக பிரசாரகர் பட்டியலை மட்டுமே ஏற்ற தேர்தல் ஆணையம்..

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுபடி எடப்படி தரப்பு வேட்பாளரே அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக  ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில், தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் வழங்கப்பட்டுள்ள பிரசாரகர்களின் பட்டியலில் ஓபிஎஸ் தரப்பு பெயர் பட்டியல் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு உள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி கொடுத்துள்ள பட்டியல் மட்டுமே ஏற்கப்பட்டு உள்ளது. இது ஓபிஎஸ்-க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் … Read more

பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி 7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு…

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமான வால்ட் டிஸ்னி மேலும் 7 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்து உள்ளது. உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னி. இவர் உருவாக்கிய மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உலக மக்களிடையே பிரபலமானது. இவர் ரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனராகவும் பணியாற்றியவர். இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கத்திற்காக … Read more

அய்யனார் சுவாமி திருக்கோயில், கோச்சடை

அய்யனார் சுவாமி திருக்கோயில், மதுரை மாவட்டம், மேலக்கால் மெயின் ரோடு, கோச்சடையில் அமைந்துள்ளது. சிவனின் 64 திருவிளையாடல்களில் கோச்சடை பற்றி சொல்லப்பட்டுள்ளது. தன் பக்தையான வந்தி என்னும் முதியவளைச் சிவலோகத்திற்கு சேர்க்க திருவுள்ளம் கொண்டு வைகை நதியை சிவன் பெருகச் செய்தார். உடனே நகரில் உள்ளவர்கள் உடைந்த கரையை அடைக்க ஆரம்பித்தனர். பிட்டு விற்று உண்பவளும், பிட்டையே சிவனுக்கு நைவேத்யமாக படைப்பவளுமான வந்திக்காக சிவனே கூலியாளாக மண்கூடையை சுமந்து கொண்டு கரையை அடைக்காமல் இருந்தார். இதனால் பாண்டிய … Read more

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்! மத்தியஅமைச்சர் பாராளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என நாடாளுமன்றத்தில்  மத்தியஅமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களால், பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். ஆனால், மத்தியஅரசு அதை தடுப்பதற்கு பதிலாக, 28 சதவிகித ஜிஎஸ்டி வரி வசூலித்து வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் தடை சட்டத்துக்கும் கவர்னர் அனுமதி மறுத்து வருகிறார்.  அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி ஆன்லைன் … Read more