டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபுவை நியமிக்க கவர்னர் எதிர்ப்பு…!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாவுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி உள்ளார்.  ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த ஜூன் மாதம் 30ந்தேதியுடன் ஓய்வுபெற்றார் ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபு பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை. இவர் … Read more

சந்திரயான் 3 நாளை தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் ஆகஸ்ட் 27க்கு ஒத்திவைக்கத் திட்டம்…

இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லாண்டர் ஆய்வுக் களம் இந்திய நேரப்படி நாளை மாலை 6:04 மணிக்கு சந்திரனில் தரையிறங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்ரம் லேண்டர் நிலவில் கால்பதிக்கவிருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை கோடிக்கணக்கான இந்தியர்கள் பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. அதேவேளையில், லேண்டரில் ஏதாவது கோளாறுகள் கண்டறியப்பட்டாலோ அல்லது தரையிறங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லையென்றாலோ, தரையிறக்கத்தை ஆகஸ்ட்-27ம் தேதிக்கு ஒத்தி வைக்கவும் … Read more

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 458-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாளை நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர் : நேரடி ஒளிபரப்பு

டில்லி நாளை நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்குவதை நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரஷ்ய நாட்டின் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் ‘லூனா-25’ திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. இந்த ‘லூனா-25’ விண்கலம் நிலவில் மோதி நொறுங்கிவிட்டது. இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்துக்கு முன்பாக நிலவில் தரையிறங்கும் ரஷ்யாவின் முயற்சி நிறைவேறவில்லை. ரஷ்யா தவறவிட்டதை ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் மூலம் சாதித்துக் காட்ட இஸ்ரோ தயாராகி வருகிறது. நாளை  மாலை 5.27 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க … Read more

ஆகஸ்ட் 21: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் அதிகரித்து 43 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 70 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் சாப்பாடு வீணடிப்பு… எழுச்சியுடன் கலந்து கொண்ட தொண்டர்கள் ஏமாற்றம்…

மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். இவர்களுக்காக தடபுடலாக விருந்து சாப்பாடு தயாரிக்கப்பட்டு வருவதாக மாநாட்டிற்கு முதல் நாள் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டது. பிரியாணி பரிமாறப்படும் என்று நினைத்து வந்தவர்களுக்கு புளியோதரை பரிமாறப்பட்டதை அடுத்து வந்திருந்த தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. அதேவேளையில், கொடுக்கப்பட்ட புளியோதரையும் மாநாட்டுக்கு பலமணி நேரம் முன்னதாகவே தயாரிக்கப்பட்டதால் சுவையும் தரமும் இல்லாத உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடியதாக இருந்ததாக கூறி அதை … Read more

சென்னை தனியார் கல்லூரி வளாகத்தில் குண்டு வீச்சால் பரபரப்பு

சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் குண்டு வீச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரியல் மற்றும் பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் குண்டு வீச்சு நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ளது குருநானக் கல்லூரி. மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றான இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சிலருக்குள், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற ரீதியில் மோதல் நீடித்து வந்ததாக … Read more

இந்தியாவின் மிக வயதான ஆசிய யானை பிஜூலி பிரசாத்… 89 வயதில் அசாமின் பெஹாலி தேயிலை தோட்டத்தில் இறந்தது..

இந்தியாவின் மிகவும் வயதான யானையான பிஜூலி பிரசாத் தனது 89 வயதில் அசாமின் சோனித்புரி மாவட்டத்தில் திங்கள்கிழமை உயிரிழந்தது. கம்பீரமான யானை வயது தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், தி வில்லியம்சன் மாகோர் குழுமத்தின் பெஹாலி தேயிலை தோட்டத்தில் இன்று இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். போர்காங் தேயிலை தோட்டத்திற்கு குட்டியாக கொண்டு வரப்பட்ட பிஜூலி பிரசாத் பின்னர் பெஹாலி பகுதிக்கு மாற்றப்பட்டது. இது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட பழமையான … Read more

இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர் தேர்வில் முறைகேடு… விசாரணை வளையத்துக்குள் ஹரியானா பயிற்சி மையம்…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி) நடத்திய தொழில்நுட்ப பணியாளர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ஒரு முக்கிய விண்வெளி ஆராய்ச்சி மையமான வி.எஸ்.எஸ்.சி நடத்திய இந்த பணியாளர் தேர்வு கேரளாவில் உள்ள 10 மைய்யங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு எழுத ஹரியானா மாநிலத்தில் இருந்து மட்டும் 469 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அங்கிருந்து 400 பேர் தேர்வு எழுத … Read more

FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிப் சுற்றுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா

இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா உலகின் இரண்டாம் நிலை வீரரான பேபியானோ குருவனா-வை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். FIDE போட்டிகளில் இறுதிப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தா என்பது குறிப்பிடத்தக்கது. அஜர்பெய்ஜான் நாட்டில் நடைபெற்று வரும் FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகஸ்ட் 25ம் தேதி நிறைவடைகிறது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தா உலகின் முன்னணி வீரர் மஃனஸ் கார்ல்சன் உடன் விளையாட உள்ளார்.