எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுடெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சையாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்து ஒன்றை நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது சர்ச்சையானது. எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். … Read more

இஸ்லாமியர்கள் அனைவரும் ‘மதம் மாறுவதற்கு’ முன் இந்துக்கள்தான்! காஷ்மீர் மாநில மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்…

ஸ்ரீநகர்: இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தான், மதம் மாறுவதற்கு முன்னர் இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களாகத்தான் இருந்தனர் என முன்னாள் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் மத்திய அமைச்சரும், தற்போதைய ஜனநாயக ஆசாத் கட்சி தலைவருமான மூத்த தலைவர்  குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அவரது  பேச்சால் சர்ச்சை  கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் தலைமையில் இருந்து மாற்றம் தேவை என்பதை மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி மேலிடத்துக்கு … Read more

பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம்!

சென்னை: புறநகர் பகுதியான சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, அங்கு புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் … Read more

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,500 கனஅடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்க தடை நீட்டிப்பு…

தருமபுரி: கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், பரிசல் இயக்க 3வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. காவிரி நீரை திறந்து விடாமல் முரண்டு பிடித்து வந்த கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், தண்ணீரை திறந்துவிட்டுள்ளது.  குறிப்பாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த  சில  … Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்கள் மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம்

சென்னை இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சமூகத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24-ந் தேதியன்று தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். தொடர்ந்து 2 கட்டங்களாக விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த 24.7.23 முதல் 4.8.23 வரை முதற்கட்டமாக 20 … Read more

தமிழகத்தில் வார இறுதியை முன்னிட்டு 1250 சிறப்புப் பேருந்துகள்

சென்னை நாளை முதல் தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன, வார இறுதி நாட்களில் தமிழகத்தில்  பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது. வழக்கமான வழித்தடங்களில் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி நாளை முதல் வார இறுதி நாட்கள் மற்றும் வளர்பிறை முகூர்த்த நாட்களை முன்னிட்டு 1,250 சிறப்பு … Read more

ராகுல் காந்திக்கு லடாக் பகுதியில் உற்சாக வரவேற்பு

ஜம்மு லடாக் பகுதிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் செய்யச் சென்ற ராகுல் காந்திக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அவர் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட நடைப்பயணத்தைத் தொடருவார் என்றும், அந்த பயணத்தை குஜராத்தின் போர்பந்தரிலிருந்து தொடங்கி அருணாசலப் பிரதேசத்தின் லோகித் மாவட்டத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மேலிடத் … Read more

இறுதிக்கட்டத்தில் சந்திரயான் 3 : விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது

டில்லி இந்தியாவில் இருந்து செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் தந்து நிலவு சுற்றுப்பாதையில் தனது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த மாதம் 14 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தை நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது. தற்போது ‘சந்திரயான்-3’ விண்கலம் 40 நாள் பயணமாகப் புவி சுற்று … Read more

தமிழகத்தை திமுக நிரந்தரமாக ஆள வேண்டும் என்பது கருணாநிதியின் கனவு : முதல்வர் உரை

ராமநாதபுரம் தமிழகத்தை திமுக நிரந்தரமாக ஆள வேண்டும் என்பது கருணாநிதியின் கனவு என முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றி உள்ளார். இன்று ராமநாதபுரத்தில் திமுக தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. . திமுக. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். … Read more

வங்க தேசத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து சுற்றுப்பயணம்

டாக்கா சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வங்க தேசத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்குத் தயாராகும் விதமாக வங்க தேசம் மற்றும் நியூசிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி வங்க தேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி 10 ஆண்டுகளுக்குப் பின் வங்க … Read more