புதுமைப் பெண் திட்டத்தின் 2ம் கட்ட பணி: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: புதுமைப் பெண் திட்டத்தின் 2ம் கட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த இரண்டாவது கட்டத்தின் மூலம் மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெற உள்ளனர். முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், புதுமைப் பெண் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் … Read more

பிப்ரவரி 08: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 263-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 263-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மணக்குள விநாயகர் திருக்கோயில், புதுச்சேரி

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில், புதுச்சேரியில் அமைந்துள்ளது. பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இங்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேல் பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர். புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை … Read more

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானைக்கு நீச்சல் குளம் திறப்பு…

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி குளிப்பதற்காக ரூ.60 லட்சம் மதிப்பீட்டில்  குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டியை  அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து வைத்தார். இதையடுத்து யானை கல்யாணி அந்த நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு மிகப்பெரிய நீச்சல் குளம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல கோவில்களில், யானைகளுக்கு குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ள நிலையில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் … Read more

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு…

டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வரும் நிலையில், மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் எம்.பி.  ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில்  சரமாரி குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.  அதானி பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு பணம் கொடுத்தார்? என கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில், … Read more

சென்னையில் அனுமதி பெறாத 1813 கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு…

சென்னை மாநகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் கொடுக்கப்பட்ட கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் சுமார் 1,813 கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெறாமல் இணைப்பு கொடுத்ததற்காக ரூ.5.98 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை அதன் புறநகர் பகுதிகளை உள்ளடக்கி நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில் அதன் குடியிருப்புகளும் அதிகரித்து வருகிறது. மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய், குடிநீர் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவு!

ஈரோடு:  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3மணியுடன் நிறைவு பெற்றது. இதுவரை 75 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த (ஜனவரி) மாதம் 31ந் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து, அமமுக வேட்பாளரும் போட்டியில் இருந்து விலகல்…

ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இருந்து ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில்,  தொடர்ந்து, அமமுக வேட்பாளரும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால், இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு … Read more

இந்த ஆண்டு முதல் மீண்டும் சென்னையில் இருந்து மீண்டும் ஹஜ் பயணம்! புதிய கொள்கை திட்டம் வெளியீடு…

டெல்லி: சென்னையில் இருந்து மீண்டும் ஹஜ் பயணம் புறப்படும் வகையில்,  ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதனால் பயணி ஒருவருக்கு ரூ.50ஆயிரம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக, இஸ்லாமியர்களின் புனித பயணத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் இருந்து நேரடியாக ஹஜ் வரை நடைபெற்ற விமான சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் இரந்து   ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு கூடுதலாக செலவினம் ஏற்பட்டது. … Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பிரபல கால்பந்து வீரர்கள் எங்கே? பலி எண்ணிக்கை 5,102 ஆக உயர்வு… இந்திய நிவாரண பொருட்கள் விநியோகிக்க தீவிரம்..

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக, பலியானவர்கள் எண்ணிக்கை இந்திய நேரப்படி இன்று மாலை 4மணி அளவில் 5102 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள பிரபல  கால்பந்து கிளப் அணிகளான செல்சியா எப்.சி மற்றும் நியூகேஸ்டில் எப்.சி அணிகளின் வீரர்கள் பலரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இந்திய மீட்புபணி வீரர்கள் மற்றும்  நிவாரணப் பொருட்கள் அங்கு சென்றடைந்துள்ள நிலையில், அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்தவற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு … Read more