ஆசியாவைச் சேர்ந்தவரே அடுத்த போப்… வாடிகனில் புகைச்சலை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்… போப் தேர்வு நடைமுறை எப்போது ?

ஐரோப்பிய நாடுகளைச் சேராத முதல் போப் என்ற பெருமையை பெற்றிருந்த போப் பிரான்சிஸ் காலமானதையடுத்து அடுத்த போப்பை தேர்வு செய்யும் நடைமுறை விரைவில் துவங்கவுள்ளது. மறைந்த கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர் அதிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. போப் மறைவுக்குப் பின் பொதுவாக நான்கு முதல் 6 நாட்களுக்குள் அடக்க நிகழ்வுகள் நடைபெறும் என்ற நிலையில் போப் பிரான்சிஸ் உடல் வரும் சனிக்கிழமை அன்று … Read more

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி 12 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். சுற்றுலாப் பயணிகள் அதிகம் இருந்ததால் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் இருந்து தப்பிய ஒரு பெண், “என் கணவர் தலையில் சுடப்பட்டார், மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்” என்று PTI-யிடம் தொலைபேசியில் தெரிவித்தார். அந்தப் பெண் தனது அடையாளத்தை வெளியிடவில்லை, ஆனால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் … Read more

வரும் சனிக்கிழமை அன்று போப் ஆண்டவர் இறுதிச் சடங்கு

வாடிகன் மறைந்த போப் ஆண்டவரின் இறுதிச் சடங்குகள் வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது; உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அ கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்த அவருக்கு முதுமை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. இதற்காக சிகிச்சை பெற்ற அவர் … Read more

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 2000 ஊதிய உயர்வு

சென்னை தமிழக அரசு டாஸ்,மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை ரூ. 2000 உயர்த்தி உள்ளது. இன்று தமிழக சட்டசபையில் நடந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி, நிறைவாக புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு பேசினார். அமைச்சர் செந்தில் பாலாஜி. “தமிழக்ச் மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் என … Read more

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கான குறிப்பு விதிமுறைகளை இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இருவரும் திங்களன்று புதுதில்லியில் நடத்திய பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் பரஸ்பர நன்மை பயக்கும் என்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பொருட்களுக்கு புதிய சந்தைகளைத் திறப்பதன் மூலமும், அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு தீங்கு … Read more

69பேர் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கண்ணுகுட்டி உள்பட 2 பேருக்கு ஜாமின்!

சென்னை; 69பேர் உயிரிழப்புக்க காரணமாக இருந்த  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் திமுக முன்னாள் பிரமுகர் கண்ணுகுட்டி  உள்பட 2 பேருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த முறை கண்ணுகுட்டியின் ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், இந்த முறை நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம்  குடித்த அந்த பகுதிகளைச் … Read more

“ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்”! பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு….

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்.29 முதல் மே 5 வரை , ஒரு வாரம், தமிழ் வார விழா கொண்டாட்டம் நடைபெறும் என பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க‘.ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் விதி 110ன்கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி,   “பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப். 29 ஆம் தேதி முதல் மே 5 … Read more

மே 11-ம் தேதி சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான நேரம் அறிவிப்பு…

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளுக்கான கிரிவல நேரம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. உலகை ஆளும் எம்பெருமான் சிவன் வீற்றிரும் திருவண்ணாமலை கோயில் உலகப்புகழ் பெற்றது. , திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில், பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகும். இது நெருப்பிற்கான தலம் ஆகும்.  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், மாணிக்க வாசகர் ஆகியோரால் பாடப் பெற்ற புகழ்பெற்ற தலமாகும். இங்கு தினசரி பல ஆயிரம் பேர் கிரிவலம் வந்து அண்ணாமலையாரின் அருணாசியை … Read more

திரையுலகில் இருந்து விலகி இருந்த காரணம் : மனம் திறக்கும் ரம்பா

சென்னை நடிகை ரம்பா தான் திரையுலகில் இருந்து விலகி இருந்த காரணத்தை தெரிவிட்துள்ளார். பிரபல நடிகையான ரம்பா தமிழ் சினிமாவில் 90-களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தபோது ரஜினி, அஜித். விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ரம்பா கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ரம்பா … Read more

24 ஆம் தேதி வரை மாநகர பேருந்து மாதாந்திர சீசன் டிக்கட் விற்பனை நீட்டிப்பு

சென்னை வரும் 24 ஆம் தேதி வரை மாநாகர பேருந்து மாதாந்திர சீசன் டிக்கட் விற்பனை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றி சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஏப்ரல் 16-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரையிலான செல்லதக்க, விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பயண அட்டை மாதந்தோறும் 7-ந்தேதி முதல் 22-ந் தேதி வரையிலும், மாதாந்திர சலுகை பயண அட்டை மாதந்தோறும் … Read more