தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துக்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துக்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துதெரிவித்து உள்ளனர். தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி,  உகாதி திருநாள் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது  எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த … Read more

தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை  அளிக்க வேண்டும் என்று  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளர் நலத் துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் … Read more

மனைவியின் தவறான உறவை நிரூபிக்க, குழந்தைகளின் DNA பரிசோதனையை கோர முடியாது – ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி

மனைவி தவறான உறவில் உள்ளார் என்பதை நிரூபிக்க குழந்தைகளின் DNA பரிசோதனை கோர முடியாது என்று ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. விவாகரத்து வழக்கின் போது, 59 வயதான கணவன், தனது குழந்தைகள் தன் சொந்த குழந்தைகள் அல்ல என்பதை நிரூபிக்க, இந்திய சாட்சியங்கள் சட்டம், 1872 பிரிவு 45ன் கீழ் DNA பரிசோதனை செய்ய கோரினார். 2024 ஜூலை மாதம் விசாகப்பட்டினம் மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து ஆந்திர … Read more

சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இனி திருவள்ளூரிலும் நின்று செல்லும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

சென்னை: சென்னை கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இனி திருவள்ளூரிலும்  நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை டு கோவை எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டரலில் இருந்து கோவைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பரிசோதனை அடிப்படையில் இனி சென்னை அருகில் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு … Read more

திமுகவில் இணைந்தார் தவெக மகளிர் அணி நிர்வாகி நடிகை ரஞ்சனா நாச்சியார்

சென்னை: தவெகவின் மகளிர் அணி நிர்வாகியாக  இருந்து வந்த  நடிகை ரஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் திமுகவில் இணைந்தார். தவெக தலைவர்  விஜய் – சங்கீதா விவாகரத்து மற்றும் திரிஷா விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து வருகின்றன. பலர் விஜயின் நம்பகத்தன்மையை குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளனர். அதுபோல,  தவெகவில் மகளிர் அணி நிர்வாகியாக ரஞ்சனா நாச்சியாரும் விஜயின் நடவடிக்கையை … Read more

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஜவுளி ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் த னது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி. குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம். 2020-2021-இல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, திமுக அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக … Read more

பொள்ளாச்சியில் பரபரப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கட்அவுட்டுக்கு பாவாடை , செருப்பு மாலை அணிவிப்பு….

பொள்ளாச்சி: தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பொள்ளாச்சியில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.  அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கட்அவுட்டுக்கு பாவாடை , செருப்பு மாலையை மர்ம நபர்கள் அணிவித்துள்ளனர். இது பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொள்ளாச்சியில் அவர்களின் உருவப்படங்களுக்குச் செருப்பு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது  இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்தவர்கள் யார் என தெரியவில்லை என கூறும் காவல்துறை யினர், அவர்களை … Read more

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 49 கட்சிகள், அமைப்புகள்….

சென்னை: தமிழ்நாட்டில், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய ககூட்டணியில்,  இதுவரை 49_கட்சிகள் மற்றும் அமைப்புகள்  இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  அன்றைய தினம் … Read more

சென்னையில் நள்ளிரவில் பரவலான மழை – மேலும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என தகவல்…

சென்னை:  சென்னையில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்த நிலையில், தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் நாட்களில் வானிலை மாற்றம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மார்ச் 18   முதல் 24 வரை பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  மார்ச் 18ந்தேதி நள்ளிரவு … Read more

தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15ந்தேதி மாலை முதல் 18ந்தேதி மாலை வரையிலான கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 15ந்தேதி மாலை முதல் அமலுக்கு வந்துள்ள நலையில்,  மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரிவித்தார். மதுரை மாவட்டம், … Read more