நாளை மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு விட்டதால், வாரந்தோறும் நடந்து வந்த மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது. வழக்கமான மையங்களில் மட்டும், தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 31வது மெகா தடுப்பூசி முகாம், ஒரு லட்சம் இடங்களில் நாளை நடைபெற உள்ளது.

பேருந்தின் படிக்கட்டு உடைந்த சம்பவத்தில், 2 பேர் சஸ்பெண்ட்

திருவாரூர்: திருவாரூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் அரசுப் பேருந்தின் படிக்கட்டு உடைந்த சம்பவத்தில், 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.   திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் வரையிலான நகர பஸ் ஒன்று நேற்று முன்தினம் திருவாரூரில் இருந்து நாகூர் சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் வந்து கொண்டிருந்தது. அப்போது கங்களாஞ்சேரி ரெயில்வே கேட் அருகே வேகத்தடையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கிய போது முன்பக்க படிக்கட்டு உடைந்தது. படிக்கட்டில் பயணம் … Read more

உலகளவில் 55.95 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 55.95 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.95 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 63.71 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 53.26 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை-09: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 49-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 49-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்று 2722 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 939 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 939, செங்கல்பட்டில் 474, திருவள்ளூரில் 191 மற்றும் காஞ்சிபுரத்தில் 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 131, திருநெல்வேலி 87, திருச்சி 73, தூத்துக்குடி 57, விருதுநகர் 54, கன்னியாகுமரி 52, தேனி 47, மதுரை, ராணிப்பேட்டை மற்றும் தென்காசியில் தலா 43 பேருக்கும், ஈரோடு மற்றும் சேலத்தில் தலா 36 பேருக்கும், சிவகங்கை 31, விழுப்புரம் 30, திருவண்ணாமலை … Read more

நிர்மலா சீதாராமன் , பியூஷ் கோயல் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் உள்பட  27 பேர் ராஜ்யசபா எம்.பியாக இன்று பொறுப்பேற்றனர்!

டெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் , பியூஷ் கோயல் மற்றும்  காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்பட  மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 57 பேரில் 27 பேர் இன்று  ராஜ்யசபா எம்.பியாக  பொறுப் பேற்றனர். அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மரும் இன்று பதவி ஏற்றார்.  அவர்களுக்கு துணை குடியரசு தலைவரும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ராஜ்யசபாவில் காலியாக உள்ள 57 பதவிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது. … Read more

பொன்னியின் செல்வன் டீசர் வெளியானது… ட்விஸ்டை வெளிப்படுத்திவிட்டாரா மணிரத்னம் ?

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். விக்ரம், ஐஷ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவல் 1955 ம் ஆண்டு வெளியானது நாவலாக ஏற்படுத்திய பிரம்மாண்டத்தை படத்திலும் கொண்டு வர மணிரத்னம் முயற்சி மேற்கொண்டு வருகிறார். … Read more

ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மறைவுக்கு மன்மோகன் சிங் இரங்கல்…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். ஞாயிறன்று நடைபெற இருக்கும் ஜப்பான் நாடாளுமன்ற மேலவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வந்த அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்திய நேரப்படி இன்று காலை 8 மணிக்கு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது பின்னால் இருந்து இரண்டு முறை அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சூட்டில் … Read more

ஷின்சோ அபே மறைவுக்கு இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு! பிரதமர் மோடி

டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும், நாளை (ஜூலை 9ந்தேதி 2022) ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு இந்தியா முழுவதும் நாளை ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு  அறிவித்து உள்ளது. அதன்படி, தேசியக் கொடி வழக்கமாக பறக்கவிடப்படும் அனைத்து கட்டிடங்களிலும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் .  அன்றைய … Read more

அடிமைகளை உருவாக்கும் தேசிய கல்விக்கொள்கை குறித்து கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ

புதிய கல்விக்கொள்கை அடிமைகளை உருவாக்குகிறது. ஆர்எஸ்எஸ் ஏகாதிபத்தியத்தை, புகுத்தி, தனியார் கல்வி நிறுவனங்கள் செழிக்கும் வகையில் மத்தியஅரசின் தேசிய கல்விக்கொள்கை இருப்பதாக கார்ட்டூன் விமர்சனம்  செய்துள்ளது https://patrikai.com/wp-content/uploads/2022/07/pari-Audio-2022-07-08-at-4.44.29-PM.ogg