ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

ராணிப்பேட்டை: இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். 2நாள் நிகழ்ச்சியாக திருப்பத்தூர், வேலூர், மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை திருப்பத்தூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நேற்று காலை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்து வைத்ததுடன்,  16,820 பயனாளிகளுக்கு ரூ.103.42 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் வழங்கினார். .இதனைத் … Read more

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் தேவேந்திர பட்நாவிஸ்?

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை ஆண்டுவந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்துள்ள நிலை யில், புதிய ஆட்சி அமைக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே நேற்று இரவு ராஜினாமா செய்து விட்டதை, பாஜகவின் வெடிவெடித்து கொண்டாடி வருகின்றனர். தேவேந்திர பட்நாவிசுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் மொத்த எம்எல்ஏக்கள் 55 பேர். இவர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சில சுயேச்சை … Read more

முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் வாக்கெடுப்பு தேவையில்லை! மகாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளர்

மும்பை: முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்துள்ளதால் வாக்கெடுப்பு தேவையில்லை என மகாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்துள்ளது. 55 எம்எல்ஏக்களைக் கொண்ட சிவசேனா கட்சியில் 40க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆதரவை வாபஸ் பெற்றதால், ஆட்சி கவிழும் சூழல் எழுந்தது. இதையடுத்து, இன்று மாலை 5மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் … Read more

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் … Read more

ஜூன் 29: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 40-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜூலை 30 ல் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலை புக் செய்ய வெயிட்டிங்கா….. டெலிவரி வெயிட்டிங் டைம் 22 மாதங்கள் ?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்கார்பியோ N மாடல் SUV யை ஜூன் 27 அன்று அறிமுகம் செய்தது மஹிந்திரா நிறுவனம். இதன் முன்பதிவு ஜூலை 30 ம் தேதி துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L என ஐந்து வேரியண்ட்களில் வர இருக்கும் இந்த கார் டீசல் மற்றும் பெட்ரோல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 11.99 லட்ச ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 19.49 லட்ச ரூபாய் வரை வேரியண்ட் மற்றும் … Read more

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை 4ந்தேதியும், 12ம் வகுப்பு தேர்வு ஜூலை 10–ந்தேதி வெளியாவதாக தகவல்…

டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை 4ந்தேதியும், 12ம் வகுப்பு தேர்வு ஜூலை 10–ந்தேதி வெளியாவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021–22ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெற்றது. இதேபோல 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும்,  10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 35 … Read more

பள்ளி குழந்தைகளின் பேனா, பென்சில், ரப்பர் உள்பட பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு…

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, பள்ளி குழந்தைகளின் பேனா, பென்சில், ரப்பர் மற்றும் அஞ்சல் சேவை, சோலார் வாட்டர் ஹீட்டர்கள் உள்பட பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டு உள்ளது. 2நாட்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்றும், இன்றும்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.  இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில், சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் … Read more

உதய்பூர் கொலை வழக்கு: என்ஐஏ விசாரணை – பயங்கரவாதிகளுக்கும் தொடர்புள்ளது என ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் தகவல்…

ஜெய்ப்பூர்:  காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில், பட்டப்பகலில் டெய்லர் ஒருவர் பயங்கரவாதிகளால் கழுத்தறுத்த கொலை செய்து, மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திய மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் உதய்பூர் கொலை வழக்கில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புள்ளதாகவும், இது இரண்டு மதத்தினருக்கு இடையிலான சண்டை இல்லை என்றும்  தெரிவித்துள்ளார்.  ராஜஸ்தான் … Read more

தமிழ்நாட்டில் இன்று 1,827 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 771 பேருக்கு பாதிப்பு…

தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய மொத்த பாதிப்பில் 70 சதவீதம் (1278) சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ளது. சென்னையில் 771, செங்கல்பட்டில் 316, திருவள்ளூரில் 134 மற்றும் காஞ்சிபுரத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 85, கன்னியாகுமரி 65, திருச்சி 47, திருநெல்வேலி மற்றும் மதுரையில் தலா 34 பேருக்கும், தூத்துக்குடி 31, விருதுநகர் 29, சேலம் 25, ஈரோடு 18, … Read more