உதய்பூர் படுகொலைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி: உதய்பூர் படுகொலைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “உதய்பூரின் கொடூரச் சம்பத்தால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மதத்தின் பெயரால் வன்முறையை ஏற்க முடியாது. இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபடுவோர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து வெறுப்புணர்வை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகை மீனா கணவர் உயிரிழக்க காரணம் என்ன ? குஷ்பு உருக்கமான பதிவு…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்றிரவு மரணமடைந்தார். இவரது உடல் இன்று பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீனா. 2009 ம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். தெறி உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார் நைனிகா. திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து … Read more

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பேருந்தின் மொத்தப் பயணிகளில் 62.34% பேர் பெண்கள்

சென்னை: தமிழக அரசுப் பேருந்தின் மொத்தப் பயணிகளில் 62.34% பேர் பெண்கள் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி நிலவரப்படி, கட்டணமில்லா பயணம் செய்தவர்களில், 131 கோடியே 31 லட்சம் பேர் பெண்கள் என்றும், 7.48 லட்சம் பேர் திருநங்கைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 37.41 லட்சம் பெண்கள் பயணம் செய்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1 லட்சமாக உயர்வு! தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையினை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்களின் சிறந்த 10 படைப்புகள், ஆதிதிராவிடர் அல்லாதோர் ஒருவரின் சிறந்த படைப்பு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்  இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இந்த … Read more

3 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூரை சேர்ந்த 3  செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான்  விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து நாளை மாலை 6 மணிக்கு ராக்கெட் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்டவுன் இன்று மாலை தொடங்குகிகறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (isro) அதிக தெளிவுடன் ஒரே நேர்த்தில் பல கோணங்களில் புவியை படமெடுக்கும் டிஎஸ்-இஓ (DS-EO) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், என்இயு-சாட்(NeuSAR, SAR), ஸ்கூப் 1உள்ளிட்ட மூன்று செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-53 … Read more

ஆட்சி நிலைக்குமா? உத்தவ் தாக்கரே ஆட்சிமீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சிக்கு எதிராக, அவர்களது கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள், ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளதால், அங்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பெரும்பான்மை நிரூபிக்க மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில … Read more

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அளிக்கும் சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு

சென்னை: நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 397 பேரில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அகாடமி செய்திக்குறிப்பின்படி, 2022 வகுப்பில் 44 சதவீதம் பெண்கள் உள்ளனர், 37 சதவீதம் பேர் குறைவான இன அல்லது இன சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அழைக்கப்பட்ட வகுப்பில் சுமார் 50 சதவீதம் பேர் அமெரிக்காவிற்கு வெளியே … Read more

சென்னையில் மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது தொடர்பாக அலுவலர்களுக்கு மாநகராட்சி சுற்றறிக்கை…

சென்னை: சென்னை முழுவதும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி காரணமாக விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப் படுத்துவது தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கு  சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சமீபத்தில் சென்னை கேகே நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்து பெண் வங்கி மேலாளர் உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னையில் மரங்களை அகற்றுவது தொடர்பாக அனைத்து மண்டலங்களுக்கும்  மாநகராட்சி ஆணையத் ககன்தீப் சிங் … Read more