இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….! சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

சென்னை:  சென்னையில் நாளை (8–ந் தேதி) 30- வயதுக்குட்பட்டவர்களுக்கு  தனியார் துறைகள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதை தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் வீர ராகவ ராவ் அறிவித்து உள்ளார். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து இந்த த வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகின்றன. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் … Read more

திருப்பதி ஏழுமலையானை செப்டம்பர் மாதம் தரிசிக்க சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைன் விநியோகம் தொடங்கியது…

திருமலை: திருப்பதி ஏழுமலையானை செப்டம்பர்  மாதம் தரிசிப்பதற்கான சிறப்பு  தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல்  காரணமாக, கடந்த ஓராண்டாக  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது.  அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் சிறப்பு தரிசனத்துக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இலவச தரிசனம் மற்றும் ரூ. 300  டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்த டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில்  தீர்ந்து போனதால் பக்தர்கள் பலர் … Read more

பிழையின்றி வாய்ப்பாடு படித்த மாணவியை கிரிடம் சூட்டி, சேரில் அமரவைத்து பாராட்டிய தலைமை ஆசிரியை…

திருவாரூர்; பள்ளி குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கும் வகையில், திருவாரூரில் அரசு உதவிப்பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியை,  மாணாக்கர்களுக்கு போட்டியை ஏற்படுத்தி, நன்றாக  வாய்ப்பாடு படித்து ஒப்பித்த மாணவிக்கு கிரிடம் சூட்டி, ஆசிரியையின் சேரில் அமரவைத்து பாராட்டினார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. திருவாருரில் செயல்பட்டு வரும் மெய்ப்பொருள் அரசு உதவி பெறும் பள்ளியில், தலைமை ஆசிரியை, பள்ளி மாணவிகள், கணக்கில் நல்ல தேர்ச்சி பெறும் வகையில், வாய்ப்பாடு படிக்க அறிவுறுத்தினார். … Read more

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Transparent umbrella under heavy rain against water drops splash background. Rainy weather concept. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, … Read more

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு: இன்று விசாரணை

சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே அதிகார மோதல் உச்சம் பெற்றுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி தரப்பினர் மீண்டும் பொதுக்குழு வரும் … Read more

உலகளவில் 55.72 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 55.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 63.66 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 53.12 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வருக்கு இன்று திருமணம்: கெஜ்ரிவால் பங்கேற்பு

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மானுக்கு சண்டிகாரில் இன்று எளிய முறையில் திருமணம் நடக்கிறது. பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மானுக்கும் குருக் ஷேத்ராவைச் சேர்ந்த குருப்ரீத் கவுர் என்ற 32 வயது டாக்டருக்கும் இன்று சண்டிகரில் திருமணம் நடக்க உள்ளது. இந்த திருமணத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்ளிட்ட ஆம் ஆத்மி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். பகவந்த்சிங் மான் ஏற்கனவே திருமணம் செய்து முதல் மனைவி மூலம் ஒரு மகன், மகள் உள்ளதாகவும், 6 … Read more

தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்

தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்ற ஊரில் அமைந்துள்ளது. புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோகத்தில் உள்ள தேவர்களை துன்புறுத்தினான். தேவர்களோ பயந்து என்ன செய்வது என்று தெரியாமல், இறுதியாக பராசக்தி தேவியிடம் தங்களை காத்து அருளும்படி முறையிடுகின்றனர். உடனே பராசக்தி தேவியும் அரக்கனுடன் யுத்தம் செய்ய வருகிறாள். இது கண்டு அரக்கன் பயந்து ஒடி வந்து தேவிபட்டினத்திலுள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்கிறான். சக்கரதீர்த்தத்தினை பராசக்தி … Read more

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அதிமுகவை கைப்பற்ற நடக்கும் இபிஎஸ், ஓபிஎஸ் இடையேயான அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் வரும் 11ந்தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடுகிறது. இதை தடுக்க ஓபிஎஸ் தரப்பில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், அனைத்தையும் எடப்பாடி தரப்பு எதிர்கொண்டு, முறியடித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவும் … Read more

ஹெல்மெட் விதிமீறல்: 44 நாளில் 1.36லட்சம் வழக்குகள்; ரூ.1 கோடியை தாண்டிய அபராதம் வசூல்…

சென்னை: சென்னையில் ஹெல்மெட் விதிமீறல் தொடர்பாக கடந்த 44 நாட்களில் 1.36லட்சம் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், ரூ.1.36கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் போட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனத்தின் பின்னாடி உட்காருபவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டு, மே 23ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு … Read more